Saturday, July 28, 2007

செலவு ஒரே நூறு! சினிமா தினமும் பாரு!

044-46464646 என்ற மேஜிக் நம்பருக்கு போன் பண்ணுங்க! எங்க திட்டத்தை பத்தி தெரிஞ்சுக்கங்க!!

நூறு ரூபாய் செலவில் மாதம் முழுக்க தியேட்டரில் சினிமா பாருங்க.
செலவு ஒரே நூறு! சினிமா தினமும் பாரு!* பொழுதுபோக்கில் புதுமையையும், புரட்சியையும் ஒருசேர அளிக்கும் திட்டம் - பிரமிட் மூவி கார்டு!

* மாதத்திற்கு நூறு ரூபாய் மட்டுமே செலவு.

* இது இந்தியாவுக்கு புதிது. இந்தியாவிலேயே முதன்முறையாக நம் தமிழகத்தில்.

* பிரமிட் மூவி கார்டு திட்டத்தின் மூலமாக குறைந்த செலவில் தினமும் திரைப்படங்களை பார்க்கலாம்.

* தியேட்டருக்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டியதில்லை.

* வாரத்துக்கு ஐந்து படம் தியேட்டரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு

* உங்கள் ஊர் பிரமிட் தியேட்டர்களில் மூவி கார்டு உறுப்பினர்களுக்கென தரப்படும் சலுகைகளை பெறலாம்.

* ப்ரீபெய்டு மெக்கானிஸம் மூலமாக இயங்கும் நவீன RFID கார்டு.

* டிஜிட்டல் முறையில் உங்கள் கைரேகையை ஒப்பிடும் அதிநவீன பயோமெட்ரிக் முறை. வேறு யாரும் உங்கள் கார்டினை உபயோகப்படுத்தவோ, டூப்ளிகேட் செய்யவோ கண்டிப்பாக முடியாது.

* ஆன்லைன் மற்றும் கால்சென்டர் மூலமாக ரிசர்வ் செய்து புத்தம்புதிய திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு.

* தமிழகத்திலிருக்கும் உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த கார்டினை பரிசாக அளிக்கலாம்.

* வணிக விசாரணைகளும் வரவேற்கப்படுகிறது. saimirapyramid@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்து வணிகம் சம்பந்தமான கேள்விகள் கேட்கலாம். எங்களது விற்பனை பிரிவு உயர் அதிகாரி உங்களுக்கு விடையளிக்க காத்திருக்கிறார்.

மறந்துடாதீங்க!
பிரமிட் மூவி கார்டு - உங்களை
தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் விசிட்டிங் கார்டு!

Friday, July 27, 2007

சென்னையில் சங்கர்தாதா கொண்டாட்டங்கள்!

இன்று காலை சங்கர்தாதா ஜிந்தாபாத் சென்னையில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக்கோலம்! சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் முதல்வார டிக்கெட்டுகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்திருக்கிறது! சென்னையை மிரட்ட வந்துவிட்டார் சங்கர்தாதா.பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் ஓர் அங்கமான உட்லண்ட்ஸ் திரையரங்கம்!
உட்லண்ட்ஸில் மிரட்டுகிறார் சங்கர்தாதா!
சங்கர்தாதாவுக்கு பாலாபிஷேகம்!
மெகாஸ்டார் ரசிகர் மன்றத்தினரின் பேனர்!
சங்கர்தாதா ஜிந்தாபாத்!
பத்தாயிரம் வாலா சரவெடி!
மெகாஸ்டார் ரசிகர்களின் அணிவகுப்பு!
எள் விழுந்தால் எண்ணெய் ஆகிவிடுமோ?
டிக்கெட்டுக்கு அடிதடி!

Thursday, July 26, 2007

சுந்தர் சி-யின் வீராப்பு!


உலகமெங்கும் நாளைமுதல் வீராப்பாக வெளியாகிறது சுந்தர் சி-யின் வீராப்பு. சூப்பர் ஹிட் திரைப்படமான தலைநகரத்தை தொடர்ந்து சுந்தர்.சி நடிப்பில் இத்திரைப்படம் வெளியாகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஸ்படிகம் என்ற திரைப்படத்தின் ரீமேக் இப்படம். பிரகாஷ்ராஜ், கோபிகா, விவேக், சந்தானம், சுமித்ரா மற்றும் தேஜாஸ்ரீ போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். லாரிடிரைவர் புலிப்பாண்டியாக சுந்தர்-சி தோன்றுகிறார்.

ஒரு பாசமிக்க தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டமே இத்திரைப்படத்தின் கதை. குடும்ப செண்டிமெண்டுடன், அனல்பறக்கும் சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் உண்டு. தந்தையாக பிரகாஷ்ராஜும், மகனாக சுந்தர் சி-யும் நடித்திருக்கிறார்கள். தலைநகரம் திரைப்படம் போலவே இத்திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளும் பெரிதாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்ரி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார்.

சென்னை நகரில் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தால் இத்திரைப்படம் திரையிடப்படுகிறது.

Wednesday, July 25, 2007

மீண்டும் வருகிறார் சங்கர்தாதா!


தமிழ் திரையுலகில் சிவாஜி எப்படி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக தெலுங்கு திரையுலகில் சங்கர்தாதா ஜிந்தாபாத் திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் சமீபகால தெலுங்கு சினிமா வரலாற்றில் ஐந்து கதாநாயகர்கள் ஒன்றாக நடித்ததில்லை. இந்தி மொழியில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'லகே ரகோ முன்னாபாய்' படத்தின் ரீமேக் இது.

'அதிலோக வீருனுக்கி' என்ற பாடல்காட்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் சென்ஸேஷனல் ஹீரோ ரவிதேஜா, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன், மற்றும் ஸ்ரீகாந்த் நடனமாடுகிறார்கள். க்ளைமேக்ஸ் காட்சியில் பவர் ஸ்டார் பவன்கல்யாண் முக்கியமான தோற்றத்தில் தோன்றுகிறார்.

ஸ்டார் நடிகர்கள் காம்பினேஷனில் மெகாஸ்டார் நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு பலமடங்காக இருக்கிறது. இதுவரை எந்த தெலுங்கு படமும் பெற்றிராத தொகையை விநியோக உரிமைக்காக இப்படம் பெற்றிருக்கிறது. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை பிரபுதேவா இயக்கியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இத்திரைப்படத்தை பிரமிட் சாய்மிரா தியேட்டர் லிமிட்டெட் நிறுவனம் வெளியிடுகிறது. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (27-07-2007) அன்று வெளியாகிறது.

Wednesday, July 18, 2007

ஆயுதம் செய்வோம், மொழி, வாழ்த்துக்கள்!

முதன்முதலில் ஒரு தமிழ் திரைப்படத்தினை இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பா என உலகளவில் வெளியிட்ட பெருமை பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனத்துக்கே உண்டு. ‘மொழி’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பன்மொழித் திரைப்படங்கள் தயாரித்த விஷன் மீடியா க்ரூப் (VMG) நிறுவனத்துடன் இணைந்து படங்களை திரையிட பிரமிட் நிறுவனத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்.

பைரேட்ஸ் ஆப் கரீபியன் போன்ற வேற்றுமொழிப் படங்களையும் பிரமிட் நிறுவனத்தார் வெளியீடு செய்து வருகிறார்கள்.

பிரமிட் நிறுவனத்தின் சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் வாழ்த்துக்கள். ஆர். மாதவன், பாவனா நடிப்பில் சீமான் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் இப்படம் வளர்ந்து வருகிறது.

சுந்தர் C. நடிப்பில் பிரமிட் நிறுவனத்தார் தயாரித்து வரும் மற்றொரு திரைப்படம் ஆயுதம் செய்வோம்!

சீன் ஒன், ஷாட் டூ!

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் முதல் பன்னாட்டுப் பொழுதுபோக்கு நிறுவனம்.

டிஜிட்டல் சினிமா என்ற நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பிரமிட் நிறுவனத்தார்.
அக்டோபர் 2005ல் 864 இருக்கைகள் கொண்ட ஒரே ஒரு திரையரங்குடன் ஆரம்பிக்கப்பட்ட பிரமிட் நிறுவனம் ஜூன் 2007ல் 325 திரையரங்குகளை நிர்வகிக்கும் அளவு வளர்ந்திருக்கிறது. உலக அளவில் பொழுதுபோக்கில் புதுமைகளையும், புரட்சிகளையும் படைப்பதே இந்நிறுவனத்தின் லட்சியம்!

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிட். இந்தியாவின் முதல் மற்றும் முன்னணி தியேட்டர் செயின் நெட்வொர்க் நிறுவனம். 29 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உட்பட 325 திரையரங்குகள் இந்நிறுவனத்தின் வசம் இருக்கிறது.

தியேட்டர் செயின் நெட்வொர்க் திட்டத்தில் உலகளவில் கால்பதிக்கும் முகமாக மலேசியாவில் 53 திரையரங்குகளை இந்நிறுவனம் நிர்வகிக்கிறது. Asian Integrated Industries Sdn Bhd நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இத்திட்டத்தில் பன்மொழிப்படங்களை பல்வேறு ஊடகங்கள் மூலம் வினியோகம் செய்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரப் பிரதேசத்திலும் / கர்நாடகாவிலும் தியேட்டர் செயின் நெட்வொர்க் இந்நிறுவனத்துக்கு உண்டு.

திரையுலக முன்னேற்றத்தினை, குறிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களை வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் திருட்டு விசிடியை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சாட்டிலைட் மூலம் திரைப்படங்கள் திரையிடப்படும் திட்டம் மூலம் ஒழிக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

திருமணத் தகவல் நிலையமான “கல்யாண மாலை” எனும் அமைப்புடன் இணைந்து ஜாதகப்பதிவு, ஜாதகப்பரிமாற்றம், மணமக்கள் அறிமுகம், திருமண ஏற்பாடு என மக்கள் சேவையிலும் பிரமிட் நிறுவனத்தார் கால்பதித்திருக்கிறார்கள்.