Thursday, August 28, 2008

வெளிவருகிறாள் சரோஜா!


செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்க வருகிறாள் சரோஜா. தணிக்கைக்குழு “யூ” சான்றிதழ் வழங்கி திரையிட தயாராக இருக்கிறது சரோஜா. சென்னை-600028 படத்தின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்காக இருக்கிறது. இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம் என்று தயாரிப்பு வட்டாரம் சொல்கிறது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்.

படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இரண்டே நாட்களில் படத்துக்கான இசையை கம்போஸ் செய்து சாதனை படைத்திருக்கிறார். எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், சிவா, வைபவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவருகிறது. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குனர் சேரன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Monday, August 25, 2008

வேட்டைக்காரனாக விஜய்!


பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் வில்லு. வில்லு திரைப்படத்துக்கு பிறகு ஏ.வி.எம். நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துத்தர ஒப்புக்கொண்டிருந்தார் விஜய். ஏ.வி.எம்.முக்காக விஜய் நடிக்கப் போகும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை பிரம்மாண்டமான படமாக உருவாக்க ஏ.வி.எம். நிறுவனமும் விஜயும் விரும்பினார்கள்.

படத்துக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. “வேட்டைக்காரன்”

எம்.ஜி.ஆர் நடித்து வெற்றிகண்ட வேட்டைக்காரன் படத்தின் பெயரையே விஜய் படத்துக்கும் சூட்டுகிறார்கள். முன்னதாக முரட்டுக்காளை என்ற பெயரில் ஏ.வி.எம்.முக்கு நடிக்க விஜய் விரும்பினார் என்கிறார்கள். அனேகமாக அசின் இந்தப் படத்தின் கதாநாயகியாக இருக்கலாம். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர் விரைவில் வெளிவரும்.

Tuesday, August 5, 2008

கண்ணாமூச்சி ரே.. ரே..

'ஆசை தான் அழிவுக்கு காரணம்!'புத்தன் சொல்லிதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? நம் வாழ்க்கையிலேயே பலரைப் பார்த்திருப்போமே? மண்ணாசை மன்னனையே கவிழ்க்கும், பேராசை ஆண்டியையும் அலைக்கழிக்கும். ஆசைப்பட்டு ஆடி அடங்கிப் போனவனின் வாழ்க்கை தான் இந்த மாத சிம்ரன் சின்னத்திரையில் வரும் ‘கண்ணாமூச்சி ரே.. ரே..'

அழகான மனைவி, ஆசைக்கு குழந்தை என்று அளவான வாழ்க்கை வாழ்பவனுக்கு திடீரென்று கொழுந்தியாள் மீதும் ஆசை வருகிறது. ஆசைக்கு அடிமையானவன் ஆடும் ஆட்டங்களும், முடிவும் என்னவென்பதை இம்மாத குறுந்தொடரில் காணலாம். ஆடிமாதத்தில் அம்மனாக அவதாரமெடுத்த சிம்ரன், ஆவணியில் மாறுபட்ட நடிப்பில் அசத்தப்போகிறார்.

சிம்ரனுடன் ராம்ஜி, சேத்தன், பிருந்தாதாஸ், ராஜசேகர், அமரசிகாமணி, சங்கீதாபாலன், வந்தனா, பேபி ஹரிணி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். மூலக்கதை : குரு தனபால். கதை இலாகா : சபரீஷ்வரன், திலீபன், மணி. திரைக்கதை, வசனம் : ஸ்ரீனிவாஸ் வெங்கடாச்சலம். ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாஸ். இயக்கம் : பாலாஜி யாதவ். கிரியேட்டிவ் ஹெட் : சுபாவெங்கட்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30க்கு காணத்தவறாதீர்கள் சிம்ரன் சின்னத்திரை.