Monday, May 5, 2008

ஒரு கொலை படமாகிறது!


ஸ்கார்லெட் கீலிங், 15 வயது பிரிட்டிஷ் பெண். கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தவள் கோவாவின் அஞ்சுனா கடற்கரையில் கொலையுண்டு கிடந்தாள். கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவள் பாலியல் வண்புணர்வும் செய்யப்பட்டிருந்தாள் என்று மருத்துவ அறிக்கை தெளிவாக்கியது.

அவள் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக கடற்கரையில் ஸ்கார்லெட்டை கண்டவர்கள் அவள் குடித்திருந்ததாகவும், போதை மருந்து உட்கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்கள். ஒரு பதினைந்து வயது பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய அளவுக்கு போதை மருந்து கோவாவில் சுலபமாக கிடைக்கிறதா? வெளிநாட்டவருக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லையா? என்று பரபரப்பாக பத்திரிகைகள் அரசினை கேள்வி கேட்டன. போலிசார் இந்த வழக்கை சரியான திசையில் விசாரிக்கவில்லை. நிறைய பேரை பாதுகாக்கும் முகமாக வழக்குவிசாரணை நடந்துவருகிறது என்று கொல்லப்பட்ட ஸ்கார்லெட்டின் தாயார் குற்றம் சாட்டியிருக்கிறார். கோவாவை உலுக்கிய ஸ்கார்லெட் வழக்கு இன்னமும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.


இந்நிலையில் இந்த கொலைவழக்கை பின்னணியாக கொண்டு ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பிரபாகர் சுக்லா எனும் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். ஸ்கார்லெட் வேடத்தில் கவர்ச்சிப்புயல் காத்ரீனா கைப் நடிக்கலாம் என்று தெரியவருகிறது.

0 comments: