Thursday, September 4, 2008

எந்திரமானது ‘ரோபோ!'


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட திரைப்படம் ரோபோ. இப்படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.

ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிறது. சில காலம் முன்பு இந்தி நடிகர் ஷாருக் கான் இப்படத்தை தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்திலிருந்து முற்றிலுமாக ஷாருக்கான் விலகினார்.

அதைத் தொடர்ந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்துக்கான மேக்கப் டெஸ்ட் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் திடீரென ரோபோ என்ற பெயரில் 9 தலைப்புகளை இந்தியில் ஷாருக்கான் பதிந்து வைத்து ஷங்கருக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து ஷங்கர் இப்போது படத்தின் பெயரை மாற்ற முடிவெடுத்திருக்கிறார். ரோபோ என்பது ஆங்கில பெயராக இருப்பதால் தமிழில் வரிவிலக்கு கிடைக்காது என்ற காரணம் காட்டி படத்தின் பெயரை ‘எந்திரம்' என்று மாற்றியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

எந்திரம் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஒரு மாதகாலம் நடைபெற இருக்கிறது. இதற்காக நாளை ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

3 comments:

  1. said...

    //தமிழில் வரிவிலக்கு கிடைக்காது என்ற காரணம் காட்டி படத்தின் பெயரை ‘எந்திரம்' என்று மாற்றியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
    //

    ஹி.ஹி. மாறித்தானே ஆகணும்.

    சாரே, இப்படி பேர் மாத்தி வச்சா, எவ்ளோ வரிவிலக்கு கிடைக்கும்? சில கோடிகளா?

    சராசரி படத்துக்கும், ரோபோ மாதிரி பெரிய படத்துக்கும் தோராயமா எவ்ளோ மிச்சமாகும்னு சொல்லுங்களேன். சும்மா, ஒரு கேள்வி ஞானத்துக்காக கேக்கறேன்.

  2. Anonymous said...

    படம் ஆரம்பிக்கும் போது ஆங்கிலத்தில் பெயர் வைப்பது.. பின்னர் வரி விலக்கு என்று கூறி தமிழ் பெயர் வைப்பது..

    முதல்ல வைச்ச ரோபோ என்ற பெயரே எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்தும் உபயோகிப்பார்கள். தமிழ்ப் பெயர் எல்லாம் சும்மா பேருக்குத் தான். நல்லா ஏமாத்துறாங்கப்பா!

  3. said...

    பதில்?