இன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.
சரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியில்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்கள் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.
வெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.
பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
Friday, September 5, 2008
சரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்!!
Posted by PYRAMID SAIMIRA at 9/05/2008 02:16:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள் சரோஜா குழுவினர்க்கு
Hi sai meera
I want Sunday Evening show 5 ticket if possible?? you arrange that.
Puduvai siva
வெங்கட் பிரபு குழுவினருக்கும், பிரமிட் சாய்மீராவுக்கும் வாழ்த்துக்கள்.
குசேலனில் பட்ட காயத்திற்கு சரோஜா மருந்து தடவட்டும்
படம் ஹிட்தான், சந்தேகமே வேணாம்.
மிகவும் அருமையான படம் குசேலன் தோல்வியில் இருந்து உங்களை மீட்க வந்த ரட்சகன் சரோஜா.
வன்முறை, ஆபாசம் இல்லாத நல்ல படம்..
பிரேம்ஜி நடிப்பு சூப்பர்..
குடும்பத்துடன் பார்க்கலாம்..
வாழ்த்துக்க்ள்
சூர்யா
சென்னை
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in