Wednesday, July 18, 2007

ஆயுதம் செய்வோம், மொழி, வாழ்த்துக்கள்!

முதன்முதலில் ஒரு தமிழ் திரைப்படத்தினை இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பா என உலகளவில் வெளியிட்ட பெருமை பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனத்துக்கே உண்டு. ‘மொழி’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பன்மொழித் திரைப்படங்கள் தயாரித்த விஷன் மீடியா க்ரூப் (VMG) நிறுவனத்துடன் இணைந்து படங்களை திரையிட பிரமிட் நிறுவனத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்.

பைரேட்ஸ் ஆப் கரீபியன் போன்ற வேற்றுமொழிப் படங்களையும் பிரமிட் நிறுவனத்தார் வெளியீடு செய்து வருகிறார்கள்.

பிரமிட் நிறுவனத்தின் சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் வாழ்த்துக்கள். ஆர். மாதவன், பாவனா நடிப்பில் சீமான் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் இப்படம் வளர்ந்து வருகிறது.

சுந்தர் C. நடிப்பில் பிரமிட் நிறுவனத்தார் தயாரித்து வரும் மற்றொரு திரைப்படம் ஆயுதம் செய்வோம்!