Thursday, August 2, 2007

சூப்பர் ஸ்டார் - சூப்பர் போட்டி!

மக்களே!


போட்டிகள் நிறைந்த உலகம் இது என்று சும்மாவா சொன்னார்கள்? திக்கெட்டும் போட்டா போட்டிகளை எங்கும் காணமுடிகிறது. நாங்களும் போட்டி போட வருகிறோம். ஆனால் இது வேற போட்டி!

சூப்பர் ஸ்டாரின் இந்த சூப்பர் படத்தைப் பாருங்கள்.



சூப்பர் ஸ்டார் சூப்பர்மேனாக நடித்தால் என்ன 'பஞ்ச் டயலாக்' அடிப்பார். இது தான் போட்டி. 'பஞ்சை'யும், நெருப்பையும் பக்கத்துலே வெச்சுட்டோம். பத்த வைக்க வேண்டியது உங்க பொறுப்பு.

பரிசு எதுவும் கிடையாதா என்று பரிதவிக்கும் தருமிகளுக்கு :
பரிசு ஒன்றல்ல, இரண்டல்ல.. மூன்று!

போட்டியில் வெற்றி பெறும் மூன்று பஞ்ச் டயலாக்குகளுக்கு நாளை (வெள்ளி, 03-02-2007) மாலை 6.30 மணி காட்சி வீராப்பு திரைப்படத்தின் டிக்கெட்டுகள் பரிசாக வழங்கப்படும்.

சென்னை அண்ணா சாலை பிரமிட் அண்ணா திரையரங்கிலோ அல்லது ராயப்பேட்டை பிரமிட் சிம்பொனி திரையரங்கிலோ சுந்தர்.சி.யின் வீராப்பை காண ரெடியா? எந்த தியேட்டர் என்பது வெற்றி பெறுபவர்களின் சாய்ஸ்.

என்ஜாய்.. ஜமாய்.. என்ஜமாய்!!!