
இம்சை அரசனில் அரசர்களையும், அமைச்சர்களையும், படை பரிவாரங்களையும் நம் கண் முன்னே உலவவிட்ட சிம்புதேவன் ‘அறை எண் 305ல் கடவுள்' மூலமாக கடவுளை திரையரங்குகளுக்கு அழைத்து வருகிறார். பிரகாஷ் ராஜுக்கு விஷ்ணு தோற்றம் அச்சு அசலாக பொருந்தியிருப்பதில் படக்குழுவினருக்கு மெத்த மகிழ்ச்சியாம்.
சந்தானம், கஞ்சா கருப்பு இருவரும் முதன்முறையாக கதாநாயகர்கள் ஆகிறார்கள். இன்று வெளியாகியிருக்கும் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிப்பதால் அடுத்த வரும் நகைச்சுவைக் காவியமான 'அறை எண் 305ல் கடவுளும்' நிச்சய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு திரைப்படங்களும் மீண்டும் நகைச்சுவை படங்கள் வெகுவாக தயாரிக்கப்படுவதற்கான ‘ட்ரெண்ட் செட்டர்' ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
Friday, February 1, 2008
கடவுள் நேரில் வருகிறார்!!
Posted by PYRAMID SAIMIRA at 2/01/2008 02:19:00 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)