Saturday, February 2, 2008

மோகினி - Gallery!

தமிழ்சினிமாவை இரு ஆண்டுகளுக்கு முன்பாக சந்திரமுகி பைத்தியம் பிடித்திருந்தது போல இப்போது மோகினி பைத்தியம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஜெகன்மோகினியில் கவர்ச்சி சுனாமி நமீதா மோகினியாக நடித்து வருவது தெரிந்தது. தனுஷின் 'யாரடி நீ மோகினி'யில் க்யூட்டான மோகினியாக நயன்தாரா. பில்லா படத்தில் கொஞ்சம் புஷ்டியாக தெரிந்தவர் தனுஷ்ஷுக்காக உடல் இளைத்து ஸ்லிம்மான மோகினியாக மாறியிருக்கிறார்.

தெலுங்கில் செல்வராகவன் வெங்கடேஷ், நயன்தாராவை இயக்கிய ‘ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலு வேற' (பெண்கள் பேசும் பேசுக்கு அர்த்தமே வேறு) என்ற திரைப்படமே தமிழில் யாரடி நீ மோகிணி? என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இயக்குனர் ஜவஹர். அதே நயன்தாரா, கதாநாயகன் தனுஷ்.

இப்படத்தை இரவுக்காட்சி பார்க்கும் இளைஞர்களை காத்து, கருப்பு அடிக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. ஸ்டில்ஸ்களை பார்த்தாலே அது புரியுமே?