சென்ற வார இறுதி சென்னை திரையரங்குகளுக்கு திருப்திகரமாக அமையவில்லை. கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பம், கிரிக்கெட் 20-20 உலக கோப்பை, விநாயகர் சதுர்த்தி என்று பல காரணிகளால் கூட்டம் அவ்வளவாக திரையரங்குகளை நாடவில்லை. இவ்வாரத்தில் 'சத்தம் போடாதே' மட்டும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டின் இந்த வார முதல் பத்து திரைப்படங்கள் (வசூல்ரீதியாக)
01. மருதமலை - ஒரு வாரத்தை தாண்டிய நிலையில் படம் நல்ல லாபத்தை வினியோகஸ்தர்களுக்கு தரும் என்று தெரிகிறது.
02. சத்தம் போடாதே - சென்ற வார இறுதியில் வெளியான இத்திரைப்படம் நல்ல தொடக்க வசூலை தந்திருக்கிறது.
03. அம்முவாகிய நான் - பார்த்திபனின் கண்ணியமான நடிப்பு, புதுமுகம் பாரதியின் ஆபாசமற்ற அழகு பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்திருக்கிறது.
04. சிவாஜி - 13 வாரங்களை கடந்தும் கலக்கிக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
05. சீனாதானா 001 - B மற்றும் C சென்டர் ரசிகர்கள் காப்பாற்றினால் தான் உண்டு. வடிவேலு தன்னந்தனியாக படத்தை காப்பாற்ற போராடுகிறார்.
06. திருத்தம் - தூத்துக்குடி வெற்றியை தொடர்ந்து ஹரிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது படம். பரவாயில்லை ரக தொடக்கம்.
07. பள்ளிக்கூடம் - பெண்கள் கூட்டம் அதிகம். ஐந்து வாரங்களை நிறைவு செய்த படம் வசூல் ரீதியாக சுமாருக்கும் கொஞ்சம் மேலே.
08. உற்சாகம் - சுமாரான வசூல். இருவாரங்களை மட்டுமே நிறைவு செய்திருக்கிறது.
09. இனிமே நாங்க தான் - இசைஞானி இசையில் வெளியாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளை கவரும்.
10. ஆர்யா - மாதவன், பிரகாஷ்ராஜ், பாவனா நடித்த இத்திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 5 வாரங்களை நிறைவு செய்திருக்கிறது.
DCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்
Tuesday, September 18, 2007
சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 3வது வாரம்)
Posted by PYRAMID SAIMIRA at 9/18/2007 06:00:00 PM
Labels: டாப் 10
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment