• சுந்தர்.சி 2008 கடைசி வரை பிஸியாம். கால்ஷீட் புல்லாயிடுச்சாம். பிரமிட் சாய்மிரா தயாரிப்புல வளர்ற ஆயுதம் செய்வோம் படமும் அதுல ஒண்ணு!
• குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையாம் சிம்ரனுக்கு. ஒரு மெகா க்யூல கதாநாயகிகள் நிக்கும் போது முப்பந்தஞ்சு லட்சம் கேட்டா யாரு குடுக்கப் போறாங்க? யாரும் கூப்பிடாட்டாலும் கவலையில்லையாம். எப்படி ஸீனு?
• திரைப் பிரபலங்களுக்கெல்லாம் காஸ்டியூம் டிசைனர்ஸ் அவங்க பெட்டர் ஹாப் தானாம்! விஜய்க்கு சங்கீதா, அஜீத்க்கு ஷாலினி லிஸ்ட்ல லேட்டஸ்ட் ஜோடி ஸ்ரீகாந்த் வந்தனா.
• மலபார் மங்கை அசின் தமிழ் கஷ்டமா இருந்தாலும் இஷ்டமா இருக்கு. அதனால கத்துகிட்டு டப்பிங் பேசினேன் அப்படீன்னு பறயுன்னு. கொசுறுக்கு கொசுறு. அதிகமான ட்ரஸ் கலெக்ஷன்ஸ் மலபார் கிட்டத்தான் இருக்காம்!
• சீரியல் ஆசை யாரைவிட்டுது. களத்துல கவுசல்யாவும் இறங்கியாச்சு. கவிதா ப்ரொடக்ஷ்ன்ஸ் [கவிதா தான் ஒரிஜினல் பெயர்] சார்பில முதல்ல சீரியல்.அப்புறம் சினிமா.
• ரோட்டு கடைகள்ல டீ குடிக்கறது யாரு?அட! நம்ம தேவா சார். ரோட்டோர கடை பிரியாணி யாருக்கு பிடிக்கும்? சினேகா அக்காவுக்குத் தான். 5 ஸ்டார் ஹோட்டல விட செம டேஸ்ட்டாம்!
• அம்முவாகிய நான் பாரதி ப்ரவுன் கலர் காண்டாக்ட் லென்ஸ் போட்டுகிட்டாங்களாம். ஏன்னா,அவங்க கண்கள் ரொம்ப அகலமாம்.
• கடைசியா கொசுறுக்கு கொசுறுக்கு கொசுறு. மலபார் ஹாலிவுட் போகப்போறாங்க. இந்தோ - ஜப்பான் படம்.
Wednesday, September 12, 2007
சினி சிப்ஸ் - 5
Posted by PYRAMID SAIMIRA at 9/12/2007 03:53:00 PM 0 comments
Labels: சினி சிப்ஸ்
Tuesday, August 14, 2007
சினி சிப்ஸ் - 2

* நடிப்பு, நடனம், வாய்ப்பாட்டு, கதை மற்றும் கட்டுரை, திரைக்கதை, புகைப்படம், எடிட்டிங், இயக்கம், கவிதை, மிருதங்கம், கராத்தே, ஜூடோ, குங்பூ, பன்மொழித் திறமை, தயாரிப்பு நிர்வாகம் - இவ்வளவும் தெரிந்தவர் யார் தெரியுமா? கமல்ஹாசன்.
* கே. பாலச்சந்தர் உருவாக்கிய கதாபாத்திரங்களிலேயே அவருக்கு பிடித்த கதாபாத்திரம் "எதிர்நீச்சல் மாது"
* தமிழில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எம்.ஜி.ஆர் நடித்த "மர்மயோகி". எம்.ஜி.ஆர் நடித்த 136 திரைப்படங்களில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் கிடைத்தது.
* முழுக்க எடுக்கப்பட்டு தீயிலே நாசமான தமிழ் திரைப்படம் "இன்பசாகரன்"
* தி. ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்", "மரப்பசு" ஆகிய இரு நாவல்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்தமானவை.
* ஏதாவது ஒரு விருது வாங்க டெல்லிக்கு தொடர்ச்சியாக 11 வருடங்கள் சென்று வந்தவர் நடிகை சாவித்திரி
* தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதரின் தேனிலவு.
* நடிகர் சத்யராஜ் ஒரு திரைப்படத்துக்கு கதை எழுதி இருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர் சுயரூபம்.
* கமல்ஹாசன் அரங்கேற்றம் திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.300/-
* கதாநாயகன் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் "அவ்வையார்"
Posted by PYRAMID SAIMIRA at 8/14/2007 03:15:00 PM 1 comments
Labels: சினி சிப்ஸ், பிரமிட் தமிழ் சினிமா
Monday, August 13, 2007
சினி சிப்ஸ் - 1
* இயக்குனர் பாலச்சந்தரை முதன்முதலாக சந்தித்தபோது ரஜினிகாந்த் கேட்ட கேள்வி "ஒரு நடிகனிடம் நடிப்பைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்கலாம்?" பாலச்சந்தர் சொன்ன பதில். "சினிமாவைத் தவிர்த்து மற்ற இடங்களில் நடிகன் நடிக்கக் கூடாது!"
* 1956ல் ஜெமினி - சாவித்திரி திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியத் திருமணமாகவே இருந்தது. "லக்ஸ்" சோப்பு விளம்பரத்துக்கு மாடலாக அப்போது சாவித்திரி இருந்தார். அதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் போது "சாவித்திரி கணேஷ்" என்று அவர் கையெழுத்திட்டதாலேயே அவர்களது திருமணம் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.
* "ஒருதலைராகம்" திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே ஆண்குரலில் மட்டுமே பாடப்பட்டிருக்கும். அதுபோலவே "கற்பகம்" திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பெண்குரலில் மட்டுமே பாடப்பட்டிருக்கும்.
* ப்ரியா, நினைத்தாலே இனிக்கும், விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ, ஜன்னல் மலர், அனிதா, இளம் மனைவி, காயத்ரி ஆகிய திரைப்படங்களுக்கு மூலம் எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்.
* 1986ஆம் ஆண்டு மட்டும் இசைஞானி இளையராஜா 47 படங்களுக்கு இசையமைத்திருந்தார். உலகத் திரைப்பட வரலாற்றில் இன்றுவரை இது ஒரு சாதனையாக கூறப்படுகிறது.
* "புதிய வார்ப்புகள்" திரைப்படத்துக்காக பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் பாக்கியராஜ். பாரதிராஜாவின் எதிர்பார்ப்புக்கேற்ற கதாநாயகன் கிடைக்காததால் திடீர் கதாநாயகனாக பாக்யராஜ் மாறிவிட்டார்.
* கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரும் சேர்ந்து தயாரித்த முதல் திரைப்படம் "நாம்". அவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மேகலா பிக்சர்ஸ்.
* அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு" திரைப்படம் ஒரே இரவில் நடப்பது போன்று கதையமைக்கப் பட்டிருந்தது. முதலில் இதை நாடகமாக எழுதிய அண்ணா ஒரே இரவில் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ஜனாதிபதி விருதை அப்படத்தில் நடித்தற்காக பெற்றார் கமல்ஹாசன்.
* சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பூங்கோதை. ஆயினும் முதலில் வெளியானது பராசக்தி. பூங்கோதை சிவாஜியின் ஆறாவது திரைப்படமாகவே வெளிவந்தது.
Posted by PYRAMID SAIMIRA at 8/13/2007 05:06:00 PM 3 comments
Labels: சினி சிப்ஸ்