Showing posts with label தசாவதாரம். Show all posts
Showing posts with label தசாவதாரம். Show all posts

Friday, September 28, 2007

தசாவதார ரகசியம்!



கமல்ஹாசனின் படங்கள் என்றாலே என்ன கதை, எத்தனை பாட்டு, படத்தில் என்ன ஸ்பெஷல் என்று யாராலும் யூகிக்க முடியாது. ரகசியமாக படப்பிடிப்பு நடைபெறும். குறிப்பாக கமல்ஹாசன் கெட்டப் குறித்து யாராலும் நினைத்துகூட பார்க்க முடியாது. கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும் படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தசாவதாரம் படமும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமலின் கெட்டப்புகள் என்று பத்திரிகைகளில் வந்த கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களை கண்டு படக்குழுவினர் சிரிக்கிறார்களாம். ஒசாமா பின்லேடன், ஜார்ஜ் புஷ், சாமியார், நீக்ரோ என்று பலவேடங்களில் கமல் படத்தில் தோன்ற போகிறார் என்று ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிரபல இந்தி இசையமைப்பாளர் கிமேஷ் இப்படத்துக்கு இசையமைக்கப் போகிறார். ஆறு பாடல்கள் இடம்பெறுகிறது. இதுவரை ஐந்துபாடல்களை படம்பிடித்து விட்டதாக தெரிகிறது. கமல்ஹாசனின் பெரிய மகள் ஸ்ருதி இப்படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.