Showing posts with label பொம்மரிலு. Show all posts
Showing posts with label பொம்மரிலு. Show all posts

Monday, September 3, 2007

இந்தியிலும் பொம்மரிலு! தேவுடாக நாகார்ஜூனா!!


பிரகாஷ்ராஜ், சித்தார்த் நடித்து தெலுங்கில் மெகாஹிட்டான பொம்மரிலு தமிழிலும் ஜெயம் ரவியை வைத்து எடுக்கப்படுவது தெரிந்ததே. தமிழை தொடர்ந்து இந்தியிலும் பொம்மரிலு படத்தை நடிகை ஜெயசுதா தயாரிக்க போவதாக செய்திகள் வெளிவருகிறது.

இதற்காக அவர் பச்சன்-களை அணுகியிருக்கிறாராம். பிரகாஷ்ராஜ் வேடத்தில் அமிதாப்பும், சித்தார்த் வேடத்தில் ஜூனியர் அமிதாப்பும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயசுதா தெலுங்கில் ஏற்ற அதே வேடத்தை இந்தியிலும் ஏற்பாராம். தாசரி நாராயணராவுடன் இணைந்து ஜெயசுதா இப்படத்தை தயாரிக்கப் போகிறார் என்கிறார்கள்.

* * *

தேவுடாக நாகார்ஜூனா!


சிலகாலமாக ஹாலிவுட் படங்களை இந்திய மொழிகளில் டப் செய்து வெளிட்டது போக இப்போது ரீமேக் செய்யவும் தொடங்கியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் செம ஹிட்டான படம் ப்ரூஸ் அல்மைட்டி. கடவுளும் ஒரு கதாபாத்திரமாக கதையில் அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் சிறப்பு.

தெலுங்கில் ப்ரூஸ் அல்மைட்டி ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது. நாகார்ஜூனா கடவுளாக, கதாநாயகனாக நடிக்கப் போகிறார். விஷ்ணுவாக தோன்றப்போகும் நாகார்ஜூனாவின் கதாபாத்திரம் நகைச்சுவையால் ரசிகர்களின் வயிற்றைப் புண்ணாக்கும் என்று தெரிகிறது. மாடர்ன் கடவுளாக தோன்றப்போகும் நாகார்ஜூனா "CEO, UNIVERSE" என்ற பட்டத்துடன் விரைவில் திரையரங்கை முற்றுகையிடப் போகிறாராம்.