Wednesday, October 10, 2007

சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (அக். முதல் வாரம்)

தீபாவளி நெருங்கி வருவதால் கோலிவுட் பரபரப்பாகியிருக்கிறது. தீபாவளி, தமிழ்புத்தாண்டு நெருங்கும் நேரத்தில் புதிய படங்கள் வெளியாவது அரிது. துணிச்சல்மிக்க தயாரிப்பாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் தங்கள் படங்களின் மீதும், ரசிகர்களின் ரசனை மீதும் நம்பிக்கை வைத்து வெளியிடுவதும் உண்டு.

01. மலைக்கோட்டை : சென்ற வாரம் வெளியாகி அரங்கு நிறைந்த பத்து நாட்களை கடந்திருக்கும் இப்படத்தின் அடுத்தவார வசூலில் ஒரு கோடி பூர்த்தி ஆகிவிடும் என தெரிகிறது. கோலிவுட்டின் புதிய வசூல் சக்கரவர்த்தி விஷால்.

02. கற்றது தமிழ் : தமிழ் சினிமாவின் மைல்கற்களில் ஒன்றாக இத்திரைப்படம் பத்திரிகைகளால் மதிப்பிட படுகிறது. இந்த வகையிலான படங்கள் வணிகரீதியிலான வெற்றியை அடைவது ரசிகர்களின் தீர்ப்பில் இருக்கிறது. சுமாரான ஆரம்ப வசூல்.

03. பசுபதி, மே/பா. ராஜக்காபாளையம் : குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் காரணமாக பகல் காட்சிகளில் அரங்கு நிறைகிறது. விவேக்கின் காமெடி படத்துக்கு பலம்.

04. மருதமலை : நான்கு வாரங்களாக அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருந்த மருதமலை போதுமான அளவுக்கு வசூலை பெற்றிருக்கிறது.

05. வீரமும், ஈரமும் : ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். போதுமான அளவுக்கு விளம்பரம் செய்யப்படாததால் வசூலுக்கு திணறுகிறது.

06. சத்தம் போடாதே : சத்தம் போடாமல் ஒரு மாதத்தை கடந்திருக்கிறது. பெரிய அளவிலான வசூல் இல்லாவிட்டாலும் சொல்லி கொள்ளத்தக்க வெற்றி.

07. தவம் : துவக்க வசூல் சொல்லிகொள்ளும்படி இல்லை. பத்திரிகை விமர்சனங்களும், ரசிகர்களின் வாய்மொழியிலான விளம்பரங்களும் காப்பாற்றினால் தான் உண்டு.

08. நம்நாடு : இருவாரங்கள் கடந்த நிலையில் கூட்டமில்லாமல் சில திரையரங்குகளில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

09. சிவாஜி : நூறு நாட்கள் கடந்த நிலையிலும் ஓரளவுக்கு அரங்கு நிறைந்தே சென்னை திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது.

10. சிருங்காரம் : விருதுகள் பெற்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர தவறுவது துரதிருஷ்டவசமானது.

DCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்

0 comments: