Tuesday, October 30, 2007

நமீதா! - குளோஸ் அப் ஷாட்!



மும்பையில் பிறந்து வளர்ந்த கவர்ச்சி சுனாமி மீதாவின் பிறந்தநாள் மே 10 (வயது 24?). நமீதாவின் தந்தை பிரபல தொழிலதிபர். மீதா பூர்விகத்தில் மலையாளி என்பது நிறைய பேருக்கு தெரியாது. குஜராத்தில் வளர்ந்தவர் அவர். தமிழில் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சித்திக்கால் தென்னிந்தியாவில் பிரபலமானார். தமிழிலும் எங்கள் அண்ணா திரைப்படம் மூலமாக சித்திக்கே அவரை அறிமுகப்படுத்தினார்.

2001 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டபோது மீதாவின் உயரம் 5'8", வயது 18, :-) 32:24:5:35, எடை : 55 கிலோ. அந்தப் போட்டியில் அதிகபுள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருந்தபோதிலும், இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.

மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்றதன் விளைவாக தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழைந்தார். அவர் நடித்த சொந்தம், ஜெமினி திரைப்படங்கள் வணிகரீதியிலாக பெரிய வெற்றி பெறாதபோதிலும் வசீகரிக்கவைக்கும் அவரது தோற்றத்தால் தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார். "ஏய்" படத்தின் "அர்ஜூனா, அர்ஜூனா" பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்தார். கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மீதாவுக்கு பிடித்த வண்ணங்கள் கறுப்பு வெள்ளை. மீதாவை காதலிக்க விரும்புபவர்கள் ஒரு வெள்ளை ரோஜாவுடன் Propose செய்யலாம். வெள்ளை ரோஜா என்றால் அவருக்கு உயிர். ஓய்வு நேரங்களில் நீந்துவதும், பேட்மிண்டன் ஆடுவதும் அவரது பொழுதுபோக்கு. குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் மீதா. சிட்னி ஷெல்டன் நாவல்களை வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்ட மீதாவுக்கு ரொம்ப பிடித்தது படங்களோடு வரும் காமிக்ஸ் புத்தகங்கள். நந்திதா தாஸ், தபு போன்றவர்களின் நடிப்பை ரொம்பவும் ரசிப்பார். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அன்பு செலுத்துவதில் அவர் இன்னொரு மேனகா காந்தி.

தீபாவளிக்கு திரைக்கு வரும் அழகிய தமிழ்மகன் மீதாவின் திரையுலக வாழ்வில் அவருக்கு முக்கியமான ஒரு இடத்தை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.

7 comments:

  1. Anonymous said...

    சூப்பர் பதிவு!!! ரொம்ப தேங்க்ஸ். நாட்டுக்கு முக்கியமான சேதிகள் சொல்லியிருக்கீங்க.

    நமீதா ரசிகர் மன்றம்,
    ஓசை செல்லா அலுவலகம், கோவை.

  2. Anonymous said...

    ha ha.. yaaruppa nammalukku munaadi vanthathu inge. en thangath thalaivikku pathivukoduththu ungalukku periya mansodu nandri solkiren!

    Osai Chella

  3. said...

    தமிழ்னாடுடோல்க் (tamilnadutalk)நமீதா ரசிகர் மன்றம் சார்பில் உங்களுக்கு நன்றிகள்.

    நமீதா ரசிகர் மன்றம்
    வில்லிவாக்கம்

  4. Anonymous said...

    wow... how gorgeous she is!!!

    simply you are rocking with a great writeup style. thankx.

  5. Anonymous said...

    frst nenga unga theaters ah olunga maintain panra vaziya parunga appuram namitha close up shot podalam.avlo kevalama iruku nenga vangi maintain pannitu irukura theaters ellam

  6. Anonymous said...

    இந்தப் பதிவை கவனமாக வைத்திருங்கள். இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய வரலாறு படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும்.

    புள்ளிராஜா

  7. Anonymous said...

    //நமீதா பூர்விகத்தில் மலையாளி என்பது நிறைய பேருக்கு தெரியாது.//

    அவரை பாத்தாலே தெரியுதே?