Thursday, October 4, 2007

தசாவதாரம் - ஸ்டில்ஸ் + சினி சிப்ஸ்

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்துக்கு பிறகு மிக அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் படம் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் தசாவதாரம். படம் பற்றிய நொறுக்கு தகவல்கள் :

* படத்தின் தொடக்கக் காட்சியில் 10,000 பேர் தோன்றுகிறார்கள். அவர்களுக்கு 5,000 பேர் குரல் கொடுக்கிறார்கள். இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இதுபோல 5000 பேரின் குரலை ஒரே நேரத்தில் ஒலிப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை.


* படத்தில் சந்தானபாரதி, ஆர்.சுந்தர்ராஜன், ஈரோடு சவுந்தர், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ்கண்ணா ஆகிய இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள்.

* பிரபல இந்தி இசையமைப்பாளர் ஹிமேஷ் இசையமைத்திருக்கிறார். ஆடியோ இந்தமாத இறுதியில் வெளியிடப்படலாம்.

* சண்டைக்காட்சிகளுக்காக ஹாலிவுட் கலைஞர்களை வரவழைத்திருக்கிறார்கள். பயிற்சியாளரும் ஹாலிவுட்காரர்.

* அய்யர், குள்ளர், விஞ்ஞானி, ஸ்டண்ட் கலைஞர், நீக்ரோ, டூரிஸ்ட் கைட், திருடன், கிழவி, இளம்பெண், அரசன் ஆகிய 10 அவதாரங்களை எடுத்திருக்கிறார் கமல். 10 வேடங்களுக்கு பத்துவிதமான குரலில் கமலே டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இதுவரை எடுத்த படத்தின் ரஷ் பார்த்த தமிழக முதல்வர் கருணாநிதி கமல்ஹாசனை வெகுவாக பாராட்டியிருக்கிறார். படம் முடிந்ததுமே பார்க்க ஆவலாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

3 comments:

  1. said...

    இதுதான் நேத்து ரீடிப்பில் வந்தாச்சே. இன்ஸைடர் ஸ்கூப் ஒண்ணும் இல்லையா?

  2. said...

    கமலுக்கு வயசே ஆகாதா?

  3. said...

    கமல்ஹாசன் படங்கள் ஒவ்வொன்றுமே அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாவது வாடிக்கைதான். ஆனால் சிவாஜிப் படத்துக்கான எதிர்பார்ப்பு வேறு. தசாவதாரத்துக்கான எதிர்பார்ப்பு வேறு. ரசனை அடிப்படையிலேயே வித்தியாசங்கள் உண்டு.