Tuesday, October 16, 2007

துள்ளி வருகுது "வேல்"!


தமிழ்க்கடவுள் முருகன் கையில் வேல் வைத்திருப்பார். மயிலுடன் அவர் காலை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டிருக்கும். பாம்புவுக்கும், வேலுக்கும் அப்படி என்னதான் ராசியோ?

அம்பாசமுத்திரம் அருகே படப்பிடிப்புக்குச் சென்ற வேல் குழுவினரை பாம்புகள் படாதபாடு படுத்தி எடுத்திருக்கிறது. படப்பிடிப்பின் முதல்நாளன்று ஸ்பாட்டுக்கு ஒரு கட்டுவிரியன் பாம்பு வந்திருக்கிறது. அடுத்த நாள் வேறொரிடத்தில் படப்பிடிப்பு நடத்தியபோது மலைப்பாம்பு ஒன்று ஷூட்டிங் பார்க்க வந்ததாம். அதற்கு மறுநாள் வேறொரு லோகேஷனுக்கு சென்றபோது நல்லபாம்பு ஒன்று படமெடுத்திருக்கிறது.

தொடர்ந்து பாம்புகளால் படப்பிடிப்புக்கு இடையூறு வர, அங்கிருந்த கிராமப் பெரியவர்களின் லோசனைபடி சின்னசங்கரன் கோவில் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தியிருக்கிறார்கள்.

“ஆறு” வெற்றிப்படத்திற்கு பின் இயக்குனர் ஹரியும், சூர்யாவும் இணையும் திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோலவே கஜினியின் மெகா வெற்றிக்கு பின்பு சூர்யாவும், அசினும் இணைகிறார்கள்.

இப்படத்தின் கதாநாயகியான சுவாதி கதாபாத்திரத்தை அவர் தவிர வேறு யார் செய்தாலும் பொருத்தமாக இருக்காதாம். அதனாலேயே கஜினி இந்தி பதிப்பில் அமீர்கானுடன் நடித்துக் கொண்டிருந்த அசினுக்காக சில காலம் இருவரும் காத்திருந்து படப்பிடிப்பை தொடங்கினார்கள். படம் வெளியானபின்பு தமிழ் சினிமாவின் ரசிகர்கள் சுவாதி, சுவாதியென உருகப்போவது உறுதி. அப்படியொரு துறுதுறுப்பான கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார் அசின்.

படத்தில் சூர்யா இரட்டை வேடமா என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். முறுக்கேறிய கிராமத்து வாலிபனாகவும், நாகரீகமான நகரத்து வாலிபனாகவும் இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. சூர்யாவின் கிராமத்து கதாபாத்திரம், சகலகலாவல்லவன் கமல் கதாபாத்திரத்தை போன்று பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.

காதல் + செண்டிமெண்ட் + ஆக்சன் + காமெடி என ஹரியின் வழக்கமான வெற்றி பார்முலா இந்தப் படத்திலும் உண்டு. கோயில் படத்துக்குப் பிறகு வடிவேலு ஹரியின் இந்தப் படத்திலும் செம ரகளை விடுகிறார். தமிழ் சினிமாக்களில் முதன்முறையாக ‘க்சன் காமெடி’ என்ற புதிய வடிவை வடிவேலு தருகிறார். இவரது காமெடி காட்சிகளுக்கான ஸ்டண்ட் வேலைகளை ராக்கிராஜேஷ் கவனிக்கிறார்.

பருத்தி வீரனுக்குப் பிறகு ஒரு கிராமத்து திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. பாடல்களை எழுதியவர் நா.முத்துக்குமார். இயக்குனர் ஹரியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

காரைக்குடி, பழனி, திண்டுக்கல், உடுமலை, நெய்க்காரன்பட்டி, பொள்ளாச்சி, கோவை, மூணாறு, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி என்று விதவிதமான லொகேஷன்களை படத்தில் காணலாம். சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு டூயட் படமாக்கப்பட்டிருக்கிறது.

நாசர், கலாபவன் மணி, ராஜ்கபூர், சரண்ராஜ் என்று படம் முழுக்க வில்லன்கள் பட்டாளம். சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. 60 லாரிகள் இடம்பெறும் சண்டைக்காட்சி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைக்கும். சூர்யா பல காட்சிகளில் டூப் போடவேண்டாம் என்று கூறி அவரே ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.

0 comments: