இங்கிலாந்து நாட்டின் ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிகை இந்த ஆண்டின் ஆசியாவின் கவர்ச்சியான அழகியாக நடிகை பிபாஷா பாசுவை தேர்ந்தெடுத்திருக்கிறது. 2005ஆம் ஆண்டும் அதே பத்திரிகையால் இதே பட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிபாஷா.
சென்ற ஆண்டு முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா இந்தப் பட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு அவரால் மூன்றாவது இடத்துக்கு மட்டுமே வரமுடிந்திருக்கிறது.
இந்த ஆண்டு ஆசியாவின் கவர்ச்சி அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் பத்து பேர் : பிபாஷா பாசு, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், லைலா ரோஸ், ஷில்பா ஷெட்டி, கேட்ரினா கைப், கரீனா கபூர், லாரா தத்தா மற்றும் இமான் அலி.
Monday, November 19, 2007
ஆசியாவின் கவர்ச்சியான அழகி பிபாஷா?
Posted by PYRAMID SAIMIRA at 11/19/2007 04:43:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment