'ஓவர்நைட் ஸ்டார்' என்பார்கள். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ தீபிகாபடுகோனேவுக்கு கச்சிதமாக பொருந்தும். தீபாவளிக்கு வெளியான ஓம்சாந்தி ஓமின் கதாநாயகி. 'சாந்தினி தேவி' என்ற கனவுதேவதை கதாபாத்திரத்தில் அப்படத்தில் நடித்தவர், அதுபோலவே நிஜத்திலும் மாறிவிட்டார். பாலிவுட் அவரை தூக்கிவைத்து கொண்டாடுகிறது.
கர்நாடகாவைச் சார்ந்த முன்னாள் பாட்மிண்டன் சேம்பியன் பிரகாஷ் படுகோனேவின் மகளான தீபிகா படுகோனே ஜனவரி 5, 1986ல் டென்மார்க்கில் பிறந்தவர் ஒரு வயதான பிறகே தாயகம் வந்தார். பெங்களூரில் படித்து வந்தவர் மாடலிங் உலகில் நுழைந்து லிரில் சோப், டாபர் லால் பவுடர், க்ளோஸ்-அப், லிம்கா என்று விளம்பரங்களில் கலக்கினார். கிங்க்பிஷர் நீச்சல் உடை காலண்டருக்கு மாடல் செய்தபோது அம்மணி அதிகம் கவனிக்கப்பட்டார். இதனால் கிங்க்பிஷர் ஏர்லைன்ஸின் கவுரவத் தூதர் அந்தஸ்தும் அவருக்கு கிடைத்தது. விளம்பர உலகின் மாடல்களுக்கான உலகளாவிய விருதுகளை இருபது வயதுக்குள்ளாகவே பெற்றார்.
அதைத் தொடர்ந்து மூட்ஸ் ஆணுறை விளம்பரத்தில் சூடாக அவர் நடித்தபோது சூட்டோடு சூடாக திரைவாய்ப்புகளும், இந்தி ஆல்பங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவர் வீட்டுக்கதவை தட்டியது. கன்னடத்தில் உபேந்திராவுக்கு இணையாக அவர் நடித்த 'ஐஸ்வர்யா' திரைப்படமே அவர் நடித்த முதல் திரைப்படம்.
இயக்குனர் கவுதம் சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம் திரைப்படத்துக்காக கதாநாயகி கதாபாத்திரத்துக்கு தீபிகாவை அணுகினார். முதலில் ஒப்புக்கொண்டவர், பின்னர் ஷாருக்கின் 'ஓம்சாந்திஓம்' திரைப்படத்துக்கு அதிக தேதிகள் ஒதுக்கவேண்டி இருந்ததால் தமிழ்வாய்ப்பினை ஏற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. தமிழர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
இன்னமும் இரண்டரை ஆண்டுகளுக்கு தீபிகாவின் கால்ஷீட் டயரி நிரம்பிவழிகிறதாம்.
Monday, November 26, 2007
தீப்பிடிக்க.. தீப்பிடிக்க.. தீபிகாபடுகோனே!!
Posted by PYRAMID SAIMIRA at 11/26/2007 11:40:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment