Tuesday, November 20, 2007

தீபாவளி திரைப்படங்கள்! - கலக்கியது யாரு?

பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படங்களில் சில படங்கள் எதிர்பாராத ஆச்சரியத்தையும், சில படங்கள் ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது. எப்படியாயினும் தீபாவளி வெளியீடு படங்கள் அனைத்துமே முதல் இருவாரம் நல்ல வசூலை வழக்கமாக தரும் என்பதால் வெற்றி தோல்விகளை அதற்கடுத்த வாரங்களிலேயே கணிக்க இயலும். திரைப்படங்களுக்கு தரப்படும் விளம்பரங்களை காட்டிலும் மக்கள் தரும் வாய்வழி விளம்பரங்களே ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஏற்படுத்திய தாக்கங்களை பார்ப்போம்.

வேல்

மாஸ் ஹீரோக்களை வைத்து அனாயசமாக இயக்குபவர் என்ற பெயரை ஹரி மீண்டும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஹரியின் வழக்கமான பார்முலாவான குடும்பம் + காதல் + அதிரடி சண்டைக் காட்சிகள் மீண்டும் ஹிட் ஆகியிருக்கிறது. முதல்வாரத்திலேயே சென்னை நகரில் செம வசூல் வசூலித்து தீபாவளி திரைக்குதிரைகளில் நெ.1 ஆக ஓடுகிறார் வேல்.

பொல்லாதவன்

பரட்டை என்கிற அழகுசுந்தரத்தில் நழுவவிட்ட வெற்றியை பொல்லாதவனில் பெற்றிருக்கிறார் தனுஷ். காக்க காக்க திரைப்பட பாணியில் கதாநாயகனின் வர்ணனையோடு தொடங்கும் திரைப்படம் இடைவேளைக்கு பிறகு அசுரபாய்ச்சல் ஓடுகிறது. புதுமுக இயக்குனர் தன் பெயருக்கு ஏற்றாற்போலவே வெற்றிமாறனாக மாலை சூடுகிறார்.


அழகிய தமிழ்மகன்

அதிக எதிர்பார்ப்பு பலநேரங்களில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம். சமீபகால விஜய்யின் பார்முலாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் எடுக்கப்பட்ட அழகிய தமிழ்மகனை அந்த வகையில் சேர்க்கலாம். விஜயை தவிர்த்து படத்தின் வேறு எந்த அம்சமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சி படம் பார்த்த பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இறுதிக்காட்சி மாற்றப்பட்டால் படத்தை திரும்ப பார்ப்போம் என்று பல விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மச்சக்காரன்

ஜீவன் நடித்த முந்தைய திரைப்படங்களான நான் அவனில்லை, திருட்டுப்பயலே அளவுக்கு இந்தப் படம் இல்லையென்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஆயினும் ஒரு வெற்றிப்படத்துக்கான அம்சங்கள் இப்படத்தில் நிறைய இருப்பதால் லேட் பிக்கப் ஆகவும் வாய்ப்பிருக்கிறது.


கண்ணாமூச்சி ஏனடா

மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்திருக்கிறது இத்திரைப்படம். சத்யராஜ்-ப்ருத்விராஜ் கூட்டணி காமெடியில் கலகலக்க வைத்திருக்கிறார்கள். அடுத்தடுத்த வாரங்களில் ஸ்டெடியாக ஓடும் வாய்ப்பிருக்கிறது.

Ratings based on DCR of Chennai Theatres

8 comments:

  1. Anonymous said...

    Thanks for the genuine rating

    rajesh, chennai

  2. Anonymous said...

    அழகிய தமிழ் மகன் ஒன்றும் வழக்கமான விஜய் படங்களை விட வித்தியாசமானது அல்ல.

    அதுவும் வழக்கமான விஜய் படமே !
    ஆரம்பமாகுவதற்கு ஒரு பாட்டு, சண்டை, சகீலா காமெடி, சிரியா கவர்ச்சி என சொல்லிக்கொண்டே போகலாம்.

    படத்தின் பெரிய பிரச்சனையே ! விஜயின் நடிப்பு ! நீல நிற சட்டை போட்டிருந்தா நல்ல விஜய், பிரவுன் சட்டை போட்டிருந்தா கெட்ட விஜய்.. என்னும் வித்தியாசம் 70/80 களில் வநத படங்களைப் போல் இருந்தது.

  3. Anonymous said...

    அழகிய தமிழ் மகன் ஒன்றும் வழக்கமான விஜய் படங்களை விட வித்தியாசமானது அல்ல.

    அதுவும் வழக்கமான விஜய் படமே !
    ஆரம்பமாகுவதற்கு ஒரு பாட்டு, சண்டை, சகீலா காமெடி, சிரியா கவர்ச்சி என சொல்லிக்கொண்டே போகலாம்.

    படத்தின் பெரிய பிரச்சனையே ! விஜயின் நடிப்பு ! நீல நிற சட்டை போட்டிருந்தா நல்ல விஜய், பிரவுன் சட்டை போட்டிருந்தா கெட்ட விஜய்.. என்னும் வித்தியாசம் 70/80 களில் வநத படங்களைப் போல் இருந்தது.

  4. said...

    உங்கள் நச்சென்ற விமர்சனம் அருமை.

  5. Anonymous said...

    கனடாவிலும் "வேல்"தான் நன்றாக ஓடுகிறது.

    "அழகிய.த.ம" ஏதோ ஓடுகிறது. விஜய் ரசிகர்களுக்கே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    பொல்லாதவன், மற்றப்படங்கள் எல்லாம் இங்கு ரிலீஸாகவில்லை. சிலவேளை பிறகு ரிலீஸாகலாம்.

  6. said...

    அழகிய தமிழ்மகன் தயாரிப்பாளர் நீங்கள் தானே? ஆனால் படம் நல்லாயில்லைன்னு நீங்களே சொல்லியிருக்கீங்களே!

    அம்புட்டு நல்லவன்ங்களாய்யா நீங்க?????

    :)))))))

  7. said...

    //அழகிய தமிழ்மகன் தயாரிப்பாளர் நீங்கள் தானே? ஆனால் படம் நல்லாயில்லைன்னு நீங்களே சொல்லியிருக்கீங்களே!

    அம்புட்டு நல்லவன்ங்களாய்யா நீங்க?????

    :)))))))//

    :))

    துன்பம் வரும் நேரத்தில சிரிங்க.

  8. Anonymous said...

    அழகிய தமிழ் மகன்.. ம்.. ம்.. ம்.. ம்.. இது ஒரு படமாங்க?
    என்றும்போல் அதே விஜய். மாத்தி நடிக்கவே வராதா?
    எப்ப பாரு..அதே கோமாளி தனமும் அதே காமெடியும்.
    அதை விட்டால் நடிக்கவே வராதா?
    சுத்த போர் பா...

    -நடுநிலை ரசிகை-