Showing posts with label பிரமிட். Show all posts
Showing posts with label பிரமிட். Show all posts

Friday, August 31, 2007

தீபாவளிக்கு அசத்தப் போவது யாரு?


தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்! அதுவும் தீபாவளிக்கு விஜய் படம் வந்தால் ரெட்டைக் கொண்டாட்டம் இல்லையா?

இந்த தீபாவளிக்கு இளையதளபதி விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் திரைக்கு வருகிறது. ஸ்ரேயா, நமீதா என்று இரட்டைக்குழல் துப்பாக்கியோடு உங்கள் இதயத்தை சுட விஜய் வருகிறார்.

இயக்கம் : பரதன் (இயக்குனர் தரணியின் பட்டறையில் தீட்டப்பட்டவர்)

இசை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பொழுதுபோக்கில் புதுமையும், புரட்சியும் ஒருங்கே படைக்கும் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உலகெங்கும் அழகிய தமிழ்மகனை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்க இருக்கிறது.

இந்த தீபாவளிக்கு விஜய் தான் பாஸு!!
பிரமிட்னா என்னிக்குமே சினிமாவுலே மாஸு!!!

Saturday, August 25, 2007

தசாவதாரத்துக்கு அப்புறம் என்ன?


டாக்டர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்துக்கு அடுத்து என்ன நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அடுத்த படமும் கே.எஸ்.ஆருக்கு என்றும்.. இல்லை மருதநாயகத்தை தூசு தட்டி எடுக்கப் போகிறார் என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.

தெலுங்கு ரசிகர்களின் நாடியை உணர்ந்தவர் கமல். தெலுங்கில் அவர் நடித்த அந்துலேனி கதா, ஸ்வாதி முத்யம், சாகர சங்கமம், சுப சங்கல்பம் படங்கள் சக்கைபோடு போட்டன.

தசாவதாரம் படம் ஒரு பாடல் காட்சியை மட்டுமே முடிக்கவேண்டிய நிலையில் இருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததுமே அடுத்த தெலுங்குப் படத்துக்கான அறிவிப்பினை வெளியிடுவார் கமல் என்கிறார்கள்.

Thursday, August 23, 2007

அப்போவெல்லாம் இப்படித்தான் படம் பார்த்தாங்க!

அசையும் படம் (Motion) பார்ப்பதற்கான இயந்திரம் 1893ல் தாமஸ் ஆல்வா எடிசனால் உருவாக்கப்பட்டது. கைனெட்டோஸ்கோப் என்று அந்த இயந்திரக்கு எடிசன் பெயரிட்டார். படம் பார்க்க விரும்பும் ரசிகர் அந்த இயந்திரத்தில் நாணயத்தை (ஆங்காங்கே பொட்டிக்கடைகளிலும் இருக்கும் இன்றைய ஒரு ரூபாய் போன் போல) போட்டவுடனேயே ஒரு சிறிய திறப்பு திறக்கும். அந்த திறப்பு வழியாக பார்த்தால் சில நொடி படம் பார்க்கலாம்.

அக்காலத்தில் இம்முறையில் படம் பார்க்க அமெரிக்காவின் செல்வந்தர்கள் பெரும் விருப்பம் காட்டினார்கள். நாடெங்கும் வரவேற்பை பெற்ற இம்முறையே சினிமாவுக்கான முன்னோடி எனலாம்.

படத்தில் காணப்படும் இயந்திரத்தின் பெயர் கைனெட்டோகிராப். இப்போது திரைப்படங்கள் எடுக்கப் பயன்படும் கேமிராவின் தாத்தா இது. கைனெட்டோகிராப்பை இயக்குபவர் தாமஸ் ஆல்வா எடிசன். அருகில் இருப்பவர் ஜார்ஜ் ஈஸ்ட்மென் (ஈஸ்ட்மென் பிலிம் தயாரித்தவர்). சினிமாவுக்கு எதிர்காலம் இல்லை என்று தாமஸ் ஆல்வா எடிசன் நம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி பேசப்போகும் சிவாஜி!


கடந்த ஜூன் மாதம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்டிருக்கும் 'சிவாஜி' வரும் தீபாவளிக்கு இந்தி பேசப்போகிறார். டப்பிங் தொடர்பான வேலைகளில் இயக்குனர் ஷங்கர் பிஸியாக இருக்கிறார்.

சிவாஜியின் இந்தி வெர்ஷனில் பல மாற்றங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள். படத்தின் நீளம் குறைக்கப்படுமாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் தோற்றங்களில் சூப்பர் ஸ்டார் ஆடிப்பாடி நடித்த காட்சிகள் மாற்றப்படக் கூடும் என்று தெரிகிறது. ராஜ்கபூர், அமிதாப் போன்ற இந்தி சூப்பர் ஸ்டார்களின் பாடல்கள் அந்த இடத்தில் பொருத்தப்படலாம்.

வரும் தீபாவளிக்கு மும்பையே அதுரப் போகுதுல்லே...

Friday, August 17, 2007

லக்க.. லக்க... லக்ஷ்மி in Action!


Last week நான் Promise பண்ணமாதிரியே Friday காலையிலே Alarm வெச்சு எழுந்து Pizza Cornerக்கு (ஆமாம். Early Morning Ten "O" Clockக்கு) போயி Pizza + Coke முழுங்கிட்டு Scooty-pepலே Spotக்கு வந்துட்டேன். பாத்தீங்களா?

Ockey, Let us go to the Shooting Spot!

வரலாறு படத்தோட Shootingஐ கே.எஸ்.ஆர் நடத்துனாரே, அதே Location. விஜயகுமார் மஞ்சுளாவுக்கு சொந்தமான Palace. லக்க.. லக்க... லக்கா..ன்னு Sound உட்டுக்கிட்டே Enter ஆனேன். அரண்டுட்டாங்க சீமான் & கோ.

Yes. மேடியையும், பாவனாவையும் 'வாழ்த்துக்கள்' படத்துக்காக சுட்டுத் தள்ளிக்கிட்டிருந்தாரு தம்பி. Wov!! மேடி என்னா Smart? பார்க்க என்னோட Dream Star Tom Cruise மாதிரியே இருக்காரு. பாவனாவுக்கும் அவருக்கும் செம்ம Match!

ஒரு சின்ன Gapலே வெளியே வந்த சீமானை மடக்கினேன்.

"ஹலோ தம்பி! Congrats"

"நான் உனக்கு தம்பியா லக்ஷு அக்கா? Congratsனு சொல்லக்கூடாது. "வாழ்த்துக்கள்"னு சொல்லுங்க. நாம தமிழர் இல்லையா?"

"ஓக்கே, Basically நான் தமிழ் பொண்ணு. But I studied in Churchpark. இந்தப் படத்துலே என்ன Special?"

"உங்கிட்டே மட்டும் சொல்றேன். வெளியே சொல்லிடாதே. இந்தப் படத்துலே ஒரு அரசியல் பிரபலம் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுக்களை மாலத்தீவுலே உருவாக்கியிருக்காரு யுவன்"

"Oh! Interesting. அந்த Political Celebrity யாருன்னு சொல்லுங்க. Please.. Please!"

"ம்.. அதுமட்டும் சொல்லமாட்டேன். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்கிற அளவுக்கு உனக்கு தெரிந்தால் போதும். பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகனும் இப்படத்தில் நடிக்கிறார். மதுரை, திண்டுக்கல், பழனி எல்லாம் வெளிப்புற படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம்"

"கலக்குங்க. நல்ல Tamil பேசுறீங்க. உங்களோட பேசுனா எனக்கும் டமில் Practice ஆகும்"

"படத்தோட தயாரிப்பாளரும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்"னு சீமான் சொல்லிக்கிட்டிருந்தப்பவே Arrangements Readyன்னு குரல் வந்ததும் Escape ஆயிட்டார்.

படத்துலே நடிக்கப்போற Political Celebrity யாருன்னு யோசிச்சிக்கிட்டே என்னோட Pepஐ Start பண்ணேன். அடுத்த Fridayக்கு Matter உஷார் பண்ண வேணாமா?

Wednesday, August 8, 2007

மலாயில் "ஐ லவ் யூ, லவ் யூ சொன்னாளே!"

இன்று முப்பது வயதை கடந்திருப்பவர்கள் யாரும் கனவுக்கன்னி ரம்பாவை மறந்திருக்க முடியாது. ஹாலிவுட் கதாநாயகி மர்லின் மன்றோ பாணியில் அழகிய லைலா பாடலுக்கு ரம்பா ஆடிய நடன அசைவுகளை மறக்க முடியுமா? 1996ல் வெளியான உள்ளத்தை அள்ளித்தா தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளத்தை அள்ளிக் கொண்டது. அப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே திரையுலகில் நல்ல உயரத்தை தொட்டார்கள்.

நவரச நாயகன் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் என்று நடிக நடிகையர் பட்டாளமும், இயக்குனர் சுந்தர் சி, இசையமைப்பாளர் சிற்பி, ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் என்று இப்படத்தின் டெக்னிஷியன்கள் அனைவருமே அடுத்த சில வருடங்களுக்கு பிசியாகி விட்டனர். பாடல்கள் சூப்பர் ஹிட்!!!

சென்னையில் பிரமிட் சிம்பொனி தியேட்டரில் உள்ளத்தை அள்ளித்தா வெள்ளிவிழா ஓடியது. தமிழ்நாடெங்கும் வசூலில் மகத்தான சாதனை புரிந்தது.


பதினோரு ஆண்டுகள் கழித்து வரலாறு திரும்புகிறது. மீண்டும் உள்ளத்தை அள்ளித்தா தயாராகிறது. தமிழில் அல்ல, மலாய் மொழியில். பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் உள்ளத்தை அள்ளித்தா மலாய் மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அப்படத்திலிருந்து இரு காட்சிகள் :



"ஐ லவ் யூ, லவ் யூ சொன்னாளே!
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே!!"
- உள்ளத்தை கொள்ளை கொண்ட சூப்பர் ஹிட் பாடல்!


"யோவ் மிலிட்டரி அவனுங்களை சுடுய்யா!"

"எனக்கு சுடத் தெரியாது!"

"அப்போ மிலிட்டரியிலே சுட்டேன், சுட்டேன்னு சொன்னீயே?
என்னத்தைய்யா சுட்டே?"

"நான் மிலிட்டரியிலே சப்பாத்தியில்ல சுட்டுக்கிட்டிருந்தேன்!"

- நகைச்சுவையால் வயிற்றை பதம் பார்க்கும் கலக்கல் க்ளைமேக்ஸ்!

Thursday, June 28, 2007

டைட்டில் கார்டு!

தமிழ் இணைய ஆர்வலர்களுக்கு முதல் வணக்கம்.

ஒரு உலக புகழ்பெற்ற கணினி நிறுவனத்தின் உரிமையாளர் மக்களுக்கும், தனது வாடிக்கையாளர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் தான் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை வலைப்பூ (Blog) வாயிலாகவே தெரிவித்து வருவதை அறிந்திருப்பீர்கள்.

வலைப்பூக்களின் அவசியத்தை உணர்ந்திருப்பதால் பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் உலகத் தமிழர்களோடு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள, தங்கள் நிறுவனச் செய்திகளை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இந்த வலைப்பூவை பயன்படுத்திக் கொள்ளப்போகிறது.
இனி தொடர்ந்து சினிமாத்துறை பற்றிய செய்திகள், சுடச்சுட படங்கள், அவ்வப்போது நிறுவனத்தைப் பற்றிய விவரங்களையும் இந்த வலைப்பூவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வலைப்பூ பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட் நிறுவனத்தாரின் வணிகப் பிரிவால் இயக்கப்படும்.