Thursday, June 28, 2007

டைட்டில் கார்டு!

தமிழ் இணைய ஆர்வலர்களுக்கு முதல் வணக்கம்.

ஒரு உலக புகழ்பெற்ற கணினி நிறுவனத்தின் உரிமையாளர் மக்களுக்கும், தனது வாடிக்கையாளர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் தான் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை வலைப்பூ (Blog) வாயிலாகவே தெரிவித்து வருவதை அறிந்திருப்பீர்கள்.

வலைப்பூக்களின் அவசியத்தை உணர்ந்திருப்பதால் பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம் உலகத் தமிழர்களோடு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள, தங்கள் நிறுவனச் செய்திகளை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இந்த வலைப்பூவை பயன்படுத்திக் கொள்ளப்போகிறது.
இனி தொடர்ந்து சினிமாத்துறை பற்றிய செய்திகள், சுடச்சுட படங்கள், அவ்வப்போது நிறுவனத்தைப் பற்றிய விவரங்களையும் இந்த வலைப்பூவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வலைப்பூ பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட் நிறுவனத்தாரின் வணிகப் பிரிவால் இயக்கப்படும்.

9 comments:

  1. said...

    இது என்ன நியாயம் இன்னு தெரியல்ல...உங்க வலைப்பூ..இவ்வளவு சீக்கிரம் அப்புருவ் ஆகிடுச்சி...

  2. said...

    தங்களின் புது முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
    தமிழ் வலைஉலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

  3. said...

    வாழ்த்துக்களுடன் உங்களை வரவேற்கிறோம்

  4. said...

    ம்ம்ம் நல்ல முயற்சி.. ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பிரிவின் பதிவு.. தமிழ் பதிவுகள் அடுத்து நிலைக்கு செல்ல தயாராகிவிட்டன...

  5. said...

    வாங்க...நிறைய தகவல்கள் தாங்க...!!!!

  6. said...

    வரவேற்ற பாலராஜன்கீதா, வினையூக்கி, சந்தோஷ் மற்றும் செந்தழல் ரவி ஆகியோருக்கு நன்றி!

    tbcd-2! ஹா... ஹா.... ஹா.... தொடர்ந்து எங்கள் பதிவுகளை வாசித்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்.

  7. Anonymous said...

    ************************************
    ஒரு உலக புகழ்பெற்ற கணினி நிறுவனத்தின் உரிமையாளர் மக்களுக்கும், தனது வாடிக்கையாளர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் தான் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை வலைப்பூ (Blog) வாயிலாகவே தெரிவித்து வருவதை அறிந்திருப்பீர்கள்.
    ************************************
    I think Sun Microsystems CEO did that

  8. said...

    Welcome.

    BTW, where is this பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம்? in Chennai?

    //தொடர்ந்து எங்கள் பதிவுகளை வாசித்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்//

    certainly! :)

  9. said...

    //BTW, where is this பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனம்? in Chennai?//

    YES