Wednesday, July 18, 2007

சீன் ஒன், ஷாட் டூ!

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் முதல் பன்னாட்டுப் பொழுதுபோக்கு நிறுவனம்.

டிஜிட்டல் சினிமா என்ற நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பிரமிட் நிறுவனத்தார்.
அக்டோபர் 2005ல் 864 இருக்கைகள் கொண்ட ஒரே ஒரு திரையரங்குடன் ஆரம்பிக்கப்பட்ட பிரமிட் நிறுவனம் ஜூன் 2007ல் 325 திரையரங்குகளை நிர்வகிக்கும் அளவு வளர்ந்திருக்கிறது. உலக அளவில் பொழுதுபோக்கில் புதுமைகளையும், புரட்சிகளையும் படைப்பதே இந்நிறுவனத்தின் லட்சியம்!

பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிட். இந்தியாவின் முதல் மற்றும் முன்னணி தியேட்டர் செயின் நெட்வொர்க் நிறுவனம். 29 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உட்பட 325 திரையரங்குகள் இந்நிறுவனத்தின் வசம் இருக்கிறது.

தியேட்டர் செயின் நெட்வொர்க் திட்டத்தில் உலகளவில் கால்பதிக்கும் முகமாக மலேசியாவில் 53 திரையரங்குகளை இந்நிறுவனம் நிர்வகிக்கிறது. Asian Integrated Industries Sdn Bhd நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இத்திட்டத்தில் பன்மொழிப்படங்களை பல்வேறு ஊடகங்கள் மூலம் வினியோகம் செய்கிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரப் பிரதேசத்திலும் / கர்நாடகாவிலும் தியேட்டர் செயின் நெட்வொர்க் இந்நிறுவனத்துக்கு உண்டு.

திரையுலக முன்னேற்றத்தினை, குறிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களை வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் திருட்டு விசிடியை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சாட்டிலைட் மூலம் திரைப்படங்கள் திரையிடப்படும் திட்டம் மூலம் ஒழிக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

திருமணத் தகவல் நிலையமான “கல்யாண மாலை” எனும் அமைப்புடன் இணைந்து ஜாதகப்பதிவு, ஜாதகப்பரிமாற்றம், மணமக்கள் அறிமுகம், திருமண ஏற்பாடு என மக்கள் சேவையிலும் பிரமிட் நிறுவனத்தார் கால்பதித்திருக்கிறார்கள்.

1 comments:

  1. Anonymous said...

    //திருமணத் தகவல் நிலையமான “கல்யாண மாலை” எனும் அமைப்புடன் இணைந்து ஜாதகப்பதிவு, ஜாதகப்பரிமாற்றம், மணமக்கள் அறிமுகம், திருமண ஏற்பாடு என மக்கள் சேவையிலும் பிரமிட் நிறுவனத்தார் கால்பதித்திருக்கிறார்கள். //

    எனக்கு தமிழ்கலாச்சாரத்தோடு ஒரு பொண்ணு வேணும்.

    இனியவன்