முதன்முதலில் ஒரு தமிழ் திரைப்படத்தினை இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பா என உலகளவில் வெளியிட்ட பெருமை பிரமிட் சாய்மீரா தியேட்டர் நிறுவனத்துக்கே உண்டு. ‘மொழி’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பன்மொழித் திரைப்படங்கள் தயாரித்த விஷன் மீடியா க்ரூப் (VMG) நிறுவனத்துடன் இணைந்து படங்களை திரையிட பிரமிட் நிறுவனத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்.
பைரேட்ஸ் ஆப் கரீபியன் போன்ற வேற்றுமொழிப் படங்களையும் பிரமிட் நிறுவனத்தார் வெளியீடு செய்து வருகிறார்கள்.
பிரமிட் நிறுவனத்தின் சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் வாழ்த்துக்கள். ஆர். மாதவன், பாவனா நடிப்பில் சீமான் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் இப்படம் வளர்ந்து வருகிறது.
சுந்தர் C. நடிப்பில் பிரமிட் நிறுவனத்தார் தயாரித்து வரும் மற்றொரு திரைப்படம் ஆயுதம் செய்வோம்!
Wednesday, July 18, 2007
ஆயுதம் செய்வோம், மொழி, வாழ்த்துக்கள்!
Posted by PYRAMID SAIMIRA at 7/18/2007 08:08:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
சிவாஜி படத்தையும் பிரமிட் சாய்மீரா தானே மலேசியாவில் வெளியிட்டிருக்கிறார்கள். மலேசியாவில் நான் சிவாஜி பார்த்த திரையரங்கு பிரமிட் நிறுவனத்துக்கு சொந்தமானது.
இனியவன்
வருக.. வருக.
பிரமிட் சாய்மீரா தியேட்டர்ஸ் நிறுவனத்தினரை வலையுலகத்தில் வரவேற்கிறோம்..
புதுமையான முறையில் ரசிகர்களை அணுக நினைக்கும் உங்களுடைய விளம்பர, வியாபார உத்திகள் வெற்றியடையட்டும்.
வாழ்த்துக்கள்..
நன்றி உண்மைதமிழன்
வாங்க வாங்க வலையுலகுக்கு
நன்றி வெத்திலை ரவி
//பிரமிட் said...
நன்றி வெத்திலை ரவி //
வெத்திலை ரவி இல்லைங்க. வாத்திலை ரவி.
வாழ்த்துக்கள் !!!!!!!!!
உங்களுக்கு ஒரு ஆலோசனை
வெளிநாடுகளைப் பொறுத்தவரை படம் வந்து முதல் மாதத்திலேயே தியேட்டரில் காண்பிக்கப்படும். மொழி திரைப்படம் வெளிவந்து மாதக்கணக்காகிவிட்டது. மொழி மாதிரி நல்ல படங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே டிவிடி யாக வாங்கி வைக்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்கும். குறைந்தது 3 மாத இடைவெளியிலாவது இப்படியான நல்ல படங்களை டிவிடியில் வெளியிடலாமே? காலம் கடந்து விற்பனையாகும் போது என்ன தான் நல்ல படம் என்றாலும் வாங்கும் ஆர்வம் குறைச்சலாக இருக்கும்.
ஆலோசனைக்கு நன்றி கானபிரபா. உங்களது ஆலோசனை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்படும்.