உலகமெங்கும் நாளைமுதல் வீராப்பாக வெளியாகிறது சுந்தர் சி-யின் வீராப்பு. சூப்பர் ஹிட் திரைப்படமான தலைநகரத்தை தொடர்ந்து சுந்தர்.சி நடிப்பில் இத்திரைப்படம் வெளியாகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஸ்படிகம் என்ற திரைப்படத்தின் ரீமேக் இப்படம். பிரகாஷ்ராஜ், கோபிகா, விவேக், சந்தானம், சுமித்ரா மற்றும் தேஜாஸ்ரீ போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். லாரிடிரைவர் புலிப்பாண்டியாக சுந்தர்-சி தோன்றுகிறார்.
ஒரு பாசமிக்க தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் உணர்ச்சிப் போராட்டமே இத்திரைப்படத்தின் கதை. குடும்ப செண்டிமெண்டுடன், அனல்பறக்கும் சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் உண்டு. தந்தையாக பிரகாஷ்ராஜும், மகனாக சுந்தர் சி-யும் நடித்திருக்கிறார்கள். தலைநகரம் திரைப்படம் போலவே இத்திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளும் பெரிதாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்ரி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு அமைத்திருக்கிறார்.
சென்னை நகரில் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தால் இத்திரைப்படம் திரையிடப்படுகிறது.
Thursday, July 26, 2007
சுந்தர் சி-யின் வீராப்பு!
Posted by PYRAMID SAIMIRA at 7/26/2007 11:01:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது உங்கள் டிரைலர்.
இனியவன்
நான், நேற்று இரவு இந்தப் படத்தைப் பார்த்தேன். கமர்ஷியல் அம்சங்கள் ஒருங்கே பொருந்தியுள்ளன. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
மலெசியா பினாங்கில் எப்போ ரிலிஸ்..?