Wednesday, July 25, 2007

மீண்டும் வருகிறார் சங்கர்தாதா!


தமிழ் திரையுலகில் சிவாஜி எப்படி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக தெலுங்கு திரையுலகில் சங்கர்தாதா ஜிந்தாபாத் திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் சமீபகால தெலுங்கு சினிமா வரலாற்றில் ஐந்து கதாநாயகர்கள் ஒன்றாக நடித்ததில்லை. இந்தி மொழியில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'லகே ரகோ முன்னாபாய்' படத்தின் ரீமேக் இது.

'அதிலோக வீருனுக்கி' என்ற பாடல்காட்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் சென்ஸேஷனல் ஹீரோ ரவிதேஜா, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன், மற்றும் ஸ்ரீகாந்த் நடனமாடுகிறார்கள். க்ளைமேக்ஸ் காட்சியில் பவர் ஸ்டார் பவன்கல்யாண் முக்கியமான தோற்றத்தில் தோன்றுகிறார்.

ஸ்டார் நடிகர்கள் காம்பினேஷனில் மெகாஸ்டார் நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு பலமடங்காக இருக்கிறது. இதுவரை எந்த தெலுங்கு படமும் பெற்றிராத தொகையை விநியோக உரிமைக்காக இப்படம் பெற்றிருக்கிறது. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை பிரபுதேவா இயக்கியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இத்திரைப்படத்தை பிரமிட் சாய்மிரா தியேட்டர் லிமிட்டெட் நிறுவனம் வெளியிடுகிறது. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (27-07-2007) அன்று வெளியாகிறது.

5 comments:

  1. Anonymous said...

    ఇలాంటి సాక్ష్యాలతొౕ నెౕరస్తుల్ని గుర్తించడం, శిక్షించడం ఎలా అన్న సందెౕహమెౕ అపసరం లెౕదు. తమిశనాడులొౕ వైగొౕ తదితరుల్ని ఆంధ్రప్రదెౕశ్‌లొౕ కొండా సురెౕఖ తదితరుల్ని ఇంతకంటె బల హిౕనమైన నెపాలతొౕనెౕ పొౕటా కెౕసులు బుక్ చెౕసి నడుపుతున్నారు. వైగొౕనయితెౕ జైలుకెౕ పంపారు.

  2. said...

    தமிழில் வருகிறதா ? இல்லை தெலுங்கிலா ?

  3. said...

    ///செந்தழல் ரவி said...
    தமிழில் வருகிறதா ? இல்லை தெலுங்கிலா ? ///

    தெலுங்கு மொழியிலேயே வெளியாகிறது.

  4. Anonymous said...

    பிராமிட் சாய்மிராவிற்க்கு வாழ்த்துக்கள்.உட்லான்ட்ஸ் திரையரங்கில் ரசிகர்கள் கொன்டாடம்,ஆர்பாட்ட்ம்.ஷன்கர் தாதா வும் வீராப்பு படமும் வெற்றி நடை போடுகிறது.

  5. Anonymous said...

    சால பாக உந்தி ஈ படம். கஞ்சிபுரம் பாபு தியேட்டர்லோ படம் சூஸ்தினி. அண்ணகாரு டான்ஸுலு சூப்பர்.