Friday, August 31, 2007

லக்க.. லக்க... லக்ஷ்மி in Shooting Spot


ஹாய் Guys & Girls,

இடையில One week மிஸ் ஆயிடிச்சி. Actualஆ லாஸ்ட் Week நான் மதுரைக்கு போயிட்டதால, உங்களை Meet பண்ண முடியாம போயிடுச்சி. A Big S_O_R_R_Y

Paramount Flightலே மதுரைக்கு ஏன் போனேன் தெரியுமா? ஆயுதம் செய்வோம் Shooting பார்க்கத்தான். நான் போன Timeலே நெல்லு மண்டியிலே Hero சுந்தர்.சி கட்டிப்புரண்டு Fight பண்ணிக்கிட்டிருந்தாரு. ஒரு Gapலே மாட்டுனவர்கிட்டே சின்ன Chit chat.


"தலைநகரம், வீராப்புன்னு ரெண்டு ஹிட் படத்துக்கப்புறமா 'ஆயுதம் செய்வோம்னு' இந்த படம் செய்யுறேன். உதயன் இயக்கத்துலே பிரமிட் சாய்மீரா இந்த படத்தை தயாரிக்கிறாங்க. வேகமா வளர்ந்துக்கிட்டு வர்ற இந்தப் படம் மிகவிரைவில் திரைக்கு வரும்"னு சொல்லி end பண்ணிட்டாரு.

Next day திருப்பரங்குன்றம் கோயில் தேரோட்டத்திலே Song shoot பண்ணாங்க. படத்தோட சப்ஜெக்ட் Peace தான்னாலும் மதுரை மாட்டுத்தாவணியிலே Blood தெரிக்க செம Fight ஒண்ணு Shoot பண்ணியிருக்காங்க.

படத்தோட Speciality என்னான்னு Unitலே இருந்த ஒருத்தரை கேட்டேன். திண்டுக்கல், மதுரை Areaவிலேருந்தெல்லாம் Specialistகளை கூப்பிட்டு வந்து ரெண்டு Folk songs ரெகார்டு பண்ணியிருக்காங்களாம். படத்தோட இந்த Songs தூள் பரத்தும்னு சொன்னாரு.

OK guys & girls, ரொம்ப Tiredஆ இருக்கு. Next week மீட் பண்ணலாமே!!!

தீபாவளிக்கு அசத்தப் போவது யாரு?


தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்! அதுவும் தீபாவளிக்கு விஜய் படம் வந்தால் ரெட்டைக் கொண்டாட்டம் இல்லையா?

இந்த தீபாவளிக்கு இளையதளபதி விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் திரைக்கு வருகிறது. ஸ்ரேயா, நமீதா என்று இரட்டைக்குழல் துப்பாக்கியோடு உங்கள் இதயத்தை சுட விஜய் வருகிறார்.

இயக்கம் : பரதன் (இயக்குனர் தரணியின் பட்டறையில் தீட்டப்பட்டவர்)

இசை : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

பொழுதுபோக்கில் புதுமையும், புரட்சியும் ஒருங்கே படைக்கும் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் உலகெங்கும் அழகிய தமிழ்மகனை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்க இருக்கிறது.

ந்த தீபாவளிக்கு விஜய் தான் பாஸு!!
பிரமிட்னா என்னிக்குமே சினிமாவுலே மாஸு!!!

Thursday, August 30, 2007

அம்முவாகிய நான் - திரைவிமர்சனம்

ஒரு வில்லங்கமான கதையை கையில் எடுத்துக் கொண்டு எப்படி அதை வித்தியாசமாக, அழகாக கொடுக்க முடியும் என்பதை பத்மா மகன் அம்முவாகிய மகன் மூலமாக விளக்கியுள்ளார்.


பல்லவன் என்ற படத்தை இயக்கியவர்தான் பத்மா மகன். முதல் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைத் தரவில்லை. இருந்தாலும் சோர்ந்து விடாத பத்மா மகன், தனது காலத்துக்காக காத்திருந்தார். இப்போது அம்முவாகிய நான் மூலம் தனது முத்திரையைப் பதித்துள்ளார் - அழுத்தமாக.

அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் என கே.பாலச்சந்தர் போன பாதையில்தான் பத்மா மகனும் போயுள்ளார். ஒரு கமர்ஷியல் செக்ஸ் ஒர்க்கரின் கதைதான் அம்முவாகிய நான்.

புதுச்சேரியில் கதை ஆரம்பிக்கிறது. கெளரிசங்கர் (பார்த்திபன்) ஒரு எழுத்தாளர். பெண்களுக்கு எதிரான அநீதிகளை தனது பேனாவால் சுட்டெரிப்பவர். விபச்சாரப் பெண்களின் கண்ணீர்க் கதையை எழுத்தில் வடிப்பதற்காக ராணி மடத்திற்கு (விபச்சார விடுதியின் பெயர்) வருகிறார் கெளரி சங்கர்.

அங்குதான் அம்முவை (பாரதி) சந்திக்கிறார் கெளரி சங்கர். ராணி மடத்தில் வளர்ந்த, வயசுக்கு வந்த பின்னர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அனாதைப் பெண்தான் அம்மு.

அம்முவைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரது அழகு கெளரி சங்கரை திணறடித்து விடுகிறது. அம்முவின் அழகும், வெகுளித்னமும் அவருக்குப் பிடித்துப் போய் விடுகிறது. கதைக்காக வந்தவரின் இதயத்தில் அம்மு மீது காதல் பிறக்கிறது. அம்முவை தனது வாழ்க்கைத் துணைவியாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால் அம்முவுக்கு அதில் இஷ்டம் இல்லை. இப்படியே இருந்து விடுகிறேன் என்கிறார். "தினசரி ஒரே முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது ரொம்ப போர். இங்கிருந்தால் புதுப் புது நபர்களுடன் பழக்கம் கிடைக்கும், அந்த இனிய அனுபவமே போதும்" என்று காரணமும் கூறுகிறார்.

ஆனால் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் கெளரி சங்கர், அம்மு மீது கொண்ட பரிவை ஆழமாக்குகிறார். இது அம்முவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விபச்சாரத்திலிருந்து சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு அம்முவை மெல்ல மெல்ல இட்டுச் செல்கிறார்.

இப்படி ஒரு பக்கம் அம்முவை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டே மறுபக்கம், அம்முவாகிய நான் என்ற நூலையும் எழுதி முடிக்கிறார். தேசிய விருதுக்கும் அனுப்பி வைக்கிறார்.

அங்கு ஒரு வில்லங்கம். விருதுக் குழுத் தலைவரான மகாதேவன், அம்முவை ருசிக்க நினைக்கிறார். அம்முவை அணுகுகிறார். நீ எனக்கு வேண்டும். அப்படி நீ சம்மதித்தால், கெளரி சங்கர் நூலுக்கே விருது என்கிறார்.

இதுகுறித்து கெளரி சங்கருக்குத் தெரிவிக்காமல் யோசித்துப் பார்க்கிறார். பின்னர் மகாதேவனின் அழைப்பை ஏற்கிறார். அதன்படி மகாதேவனிடமும் செல்கிறார். படுக்கை வரை செல்லும் அவருக்கு அதற்கு மேல் போக முடியவில்லை. காரணம், கெளரிசங்கர், நீ தான் என் மனைவி என்று கூறியதால்.

அடுத்து என்ன நடக்கிறது, அம்மு என்ன ஆகிறார், கெளரி சங்கருக்கு அவர் கிடைத்தாரா என்பதுதான் படத்தின் மீதக் கதை.

மிக அழகான, நேர்த்தியான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் பார்த்திபன். கொடுத்த ரோலை உள் வாங்கிக் கொண்டு அழகாக வெளிக் கொண்டு வரும் கலையில் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபன்தான்.

இப்படத்தில் (முதல் முறையாக?) பேச்சைக் குறைத்திருக்கிறார் பார்த்திபன். பாடி லாங்குவேஜிலும், நடிப்பிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்த்திபனின் 20 ஆண்டு கால நடிப்பு வாழ்க்கையில் நிச்சயம் இப்படம் ஒரு முத்திரைப் படம் எனலாம்.

பல இடங்களில் வசனத்தைக் குறைத்து, காட்சிகளையே பேச வைத்துள்ளார் இயக்குநர். இது படத்திற்கு மேலும் உயிர்ப்பைக் கொடுத்துள்ளது.

புதுமுகமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பாரதி. மிக மிக சென்சிட்டிவான இந்த கேரக்டரை வெகு லாவகமாக செய்திருக்கிறார். ரசிக்க வைத்திருக்கிறார் - உடலை மட்டுமல்ல, நடிப்பையும்.

அபிஷேக், மகாதேவன், சாதனா, ராகசுதா ஆகியோரும் தங்களது கேரக்டர்களை திருப்தியாக செய்துள்ளனர்.

ஒரு விபச்சார வீட்டை இவ்வளவு அழகாக, ஆபாசமின்றி, ரசனையாக காட்டியிருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லலாம். அதற்காக எம்.எஸ்.பிரபுவின் கேமராக் கண்களுக்கு நன்றி சொல்லலாம். விபச்சாரத்தில் இருப்பவர்களும் கெளரவமானவர்களே என்ற ரீதியில் காட்சிகளில் கண்ணியம் காட்டியுள்ளனர்.

சபேஷ் - முரளியின் இசை படத்திற்கு உறுத்தலாக இல்லாமல், பலமாக உள்ளது.

உலகின் மிகப் பழமையான தொழிலை வைத்து அழகிய கவிதை படைக்க முயற்சித்துள்ளார் பத்மாமகன். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

(நன்றி : தட்ஸ்தமிழ்)

Monday, August 27, 2007

சென்ஸார்லே ஒரு சீன் கூட கட் பண்ணலை.. - இயக்குனர் பத்மாமகன் பெருமிதம்!

தமிழ் வலைப்பதிவுகளுக்காக முதன்முறையாக தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் மனம் திறக்கிறார்.

'அம்முவாகிய நான்' திரைப்படத்தின் இயக்குனர் பத்மாமகன் எளிமையாக இருக்கிறார். வெள்ளந்தியாக சிரிக்கிறார். படம் குறித்த திரையுலகினரின், பத்திரிகையாளரின் பாராட்டு மழையினில் நனைந்து கொண்டிருந்தவர் நமக்கும் சில மணித்துளிகள் ஒதுக்கினார். "படம் நல்லா வந்திருக்கு" என்றதுமே "நன்றிங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்!" என்று கலாய்க்கிறார். முந்தைய தோல்விகளை 'தோல்வி' என்று தைரியமாக ஒப்புக் கொள்கிறார். லேசான தெற்றுப்பல் தெரிய மூச்சுக்கு முன்னூறு தடவை மனம் விட்டு சிரிப்பது பத்மாமகனின் சிறப்பு.

கேள்வி : கமர்சியல் படங்களாலே தமிழ்த் திரையுலகமே அதிருக்கிட்டிருக்கும் போது 'அம்முவாகிய நான்' ஏன்?

பத்மாமகன் : 'அம்முவாகிய நான்' கமர்சியல் படம் இல்லைன்னு யார் சொன்னது? அதிருக்கட்டும் கமர்சியல்னா என்ன?

கேள்வி : கமர்சியல்னா பைட்டு, பாட்டு, ஸ்டார் வேல்யூ...

பத்மாமகன் : அதாவது இண்ட்ரெஸ்டிங் பாயிண்ட் ஏதோ ஒண்ணு இருந்தா அது கமர்சியல். 'செக்ஸ்' ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான விஷயம் இல்லையா? அதை ஹேண்டில் பண்ணி படம் எடுத்தா அதுவும் கமர்சியல் தானே? தமிழ் சினிமாவிலே செக்ஸை நம்பி படம் எடுத்தவங்க யாரும் கெட்டதில்லை. ஆனாலும் ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ண வேண்டிய விஷயம். கரணம் தப்பினால் மரணம் என்கிறமாதிரி கொஞ்சம் வேற மாதிரியா எடுத்தாலும் ஆபாசமாகிட கூடிய வாய்ப்பிருக்கு. ஒரு கழைக்கூத்து ஆடும் தொழிலாளியின் லாவகத்தோடு இதை கையாள வேண்டியிருக்கு.

கேள்வி : புரியலை. யாரெல்லாம் 'செக்ஸை' ஹேண்டில் பண்ணி சினிமாவுலே சக்ஸஸ் ஆயிருக்காங்க?

பத்மாமகன் : எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து, பாக்யராஜ்... ஏன் நேற்றைய எஸ்.ஜே. சூரியா வரைக்கும் பெரிய வெற்றியாளர்கள் பட்டியல் இருக்கு. இதயக்கனி பார்த்திருக்கீங்களா? இலைமறை காய்மறையாய் செக்ஸை அழகாக காட்டியிருப்பாங்க. பாக்யராஜ்... சொல்லவே தேவையில்லை. முருங்கைக்காயை யாராவது மறந்துடமுடியுமா?

கேள்வி : முதல் படம் செம மசாலாவா எடுத்தீங்க? அடுத்து ஏன் பரிட்சார்த்த முயற்சி?

பத்மாமகன் : முதலில் நான் எடுக்க விரும்பிய படமே இதுதான். தயாரிப்பாளரும் இந்த கதையை கேட்டு தான் எனக்கு வாய்ப்பளித்தார். ஆனாலும் நம்மை நம்பி கோடிகளை முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கணும்னு நெனைச்சி 'பல்லவன்' எடுத்தேன். ஒவ்வொரு இயக்குனருமே நல்ல படம் கொடுக்கணும்னு தான் நெனைக்கிறோம். 'உட்டாலங்கடி படம்' கொடுக்க எங்களுக்கு என்ன வேண்டுதலா?

பல்லவன் தப்பான நேரத்துலே ரிலீஸ் ஆயிடிச்சி. வண்ணத்திரையிலே கூட "உட்டாலங்கடி படம் எடுத்திருக்கார் பத்மாமகன்" அப்படின்னு எழுதினாங்க. வேர்ல்டு கப் நேரத்துலே ரிலீஸ் பண்ணோம். அந்தப் படத்தோட தோல்விக்கு இதுமாதிரி நிறைய Factors இருக்கு. இருந்தாலும் அதே தயாரிப்பாளர் மறுபடியும் என்னை வெச்சி 'ராகவா' படத்துக்கு பூஜை போட்டாங்க. தனுஷ் ஹீரோ. எங்களோட கெட்ட நேரம் என்னென்னவோ நடந்துடுச்சி. அரை கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளருக்கு நஷ்டம். இருந்தாலும் அதே தயாரிப்பாளர் என் மேல நம்பிக்கை வெச்சி இந்தப் படம் எடுக்க வாய்ப்பு கொடுத்திருக்காரு. முந்தைய தோல்விகளையெல்லாம் ஈடுகட்டற மாதிரி இந்தப் படத்துலே அசலும் முதலுமா வசூலிச்சிடுவோம் இல்லே...

கேள்வி : 'அம்முவாகிய நான்' எப்படி வந்துருக்கு?

பத்மாமகன் : சென்சாருக்கு போட்டு காமிக்கறதுக்கு முன்னாடி 'ஏ' சர்ட்டிபிகேட் தான் கிடைக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் என்னை கூப்பிட்டு "The Best Film"னு பாராட்டி 'யூ/ஏ' சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. ஒரு சீன் கூட கட் பண்ணலை. எல்லாரும் பார்க்க வேண்டிய படம் இதுன்னு சொன்னாங்க. இதுவே பெரிய வெற்றி தானே?

'பல்லவன்' படத்தோட ப்ரிவ்யூ போட்டு காமிச்சப்ப பல பத்திரிகை நண்பர்கள் என்கிட்டே சொல்லிக்காம, கொள்ளிக்காம ஓடிட்டாங்க. இப்போ நீங்களே பாருங்க படத்தைப் பார்த்துட்டு ஒவ்வொரு பத்திரிகை நண்பரும் நேர்ல வந்து பாராட்டிட்டு போறாங்க. படம் நல்லா வந்துருக்குன்னு நம்பறேன்.

கேள்வி : உங்கள் நாயகன் பார்த்திபனும் நல்ல கிரியேட்டர். படம் எடுக்கறப்போ அவர் எங்காவது குறுக்கிட்டாரா?

பத்மாமகன் : நான் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன். எம்.ஜி.ஆருக்கு அப்புறமா பார்த்திபனை ரொம்பவும் பிடிக்கும். இப்படத்தில் ஒரு நடிகராக மிக நன்றாக அவர் பணியாற்றியிருக்கார். எந்த இடத்திலும் அவர் எதுவும் சொல்லலை. அப்படின்னா நான் ஒழுங்கா ஒர்க் பண்ணியிருக்கேன்னு அர்த்தம்.

அவரது இயல்புக்கு மாறான கதாபாத்திரம் இது. பார்த்திபன்னாலே நெறைய பேசுவார். நக்கல் அடிப்பார். இந்தப் படத்துலே அவருக்கு வசனங்கள் ரொம்ப கம்மி. பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து வெச்சி பேசுவார். படம் முடிஞ்சதுமே "ஒரு இங்க்லீஷ் படத்துலே நடிச்சி முடிச்சமாதிரி இருக்கு"ன்னு சொல்லி கைகொடுத்தார்.

கேள்வி : நீங்களே ஹீரோ மாதிரி தானே இருக்கீங்க? நீங்க நடிக்க வேண்டியது தானே?

பத்மாமகன் : இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்யா உடம்பை ரணகளமாக்கிடுறீங்க...

வடிவேலு ஸ்டைலில் சொன்னவர், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.

(சந்திப்பு : கருப்பு குதிரை, மாடசாமி)

Saturday, August 25, 2007

தசாவதாரத்துக்கு அப்புறம் என்ன?


டாக்டர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்துக்கு அடுத்து என்ன நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அடுத்த படமும் கே.எஸ்.ஆருக்கு என்றும்.. இல்லை மருதநாயகத்தை தூசு தட்டி எடுக்கப் போகிறார் என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.

தெலுங்கு ரசிகர்களின் நாடியை உணர்ந்தவர் கமல். தெலுங்கில் அவர் நடித்த அந்துலேனி கதா, ஸ்வாதி முத்யம், சாகர சங்கமம், சுப சங்கல்பம் படங்கள் சக்கைபோடு போட்டன.

தசாவதாரம் படம் ஒரு பாடல் காட்சியை மட்டுமே முடிக்கவேண்டிய நிலையில் இருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததுமே அடுத்த தெலுங்குப் படத்துக்கான அறிவிப்பினை வெளியிடுவார் கமல் என்கிறார்கள்.

Friday, August 24, 2007

சினி சிப்ஸ் - 4

* கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் "உதிரிப் பூக்கள்"

* "மழலைப் பட்டாளம்" என்ற திரைப்படத்தை இயக்கியவர் நடிகை லட்சுமி

* இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் முதல் திரைப்படம் "அவள் ஒரு பச்சைக் குழந்தை"

* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் "காக்கும் கரங்கள்". அவரது நூறாவது திரைப்படம் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி"

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் "வளையாபதி"

* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் "சக்சஸ்... வெற்றி!"

* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் "கல்லுக்குள் ஈரம்"

* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் "பணம் பத்தும் செய்யும்"

* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.

* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர். சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த பின்னணி பாடகர் சந்திரபாபு.

* நடிகை சவுகார் ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. கே. பாலச்சந்தர் இயக்கினார்.

* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 வருடங்கள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.

* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.

* அம்மா என்ற திரைப்படத்துக்கு எழுத்தாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருக்கிறார்.

* 1932ல் வெளியான "இந்திர சபா" திரைப்படத்தில் மொத்தம் 72 பாடல்கள்.

* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.

* தமிழ் சினிமாவின் முதல் இரட்டைவேட திரைப்படம், சிவாஜி கணேசன் நடித்த "உத்தம புத்திரன்"

* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் "ஏழை படும் பாடு"

* கமல்ஹாசனுக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். பிடித்த விளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்.

* கல்யாணம் பண்ணிப்பார், செல்லப்பிள்ளை இரு படங்களில் மட்டுமே சாவித்திரி வில்லியாக நடித்தார்.

* 1936ல் திரையுலகத்துக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர் 1977 வரை தொடர்ச்சியாக 41 ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றினார்.

* ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷ் அப்பணியை ராஜினாமா செய்துவிட்டே திரையுலகில் நுழைந்தார்.

Thursday, August 23, 2007

அப்போவெல்லாம் இப்படித்தான் படம் பார்த்தாங்க!

அசையும் படம் (Motion) பார்ப்பதற்கான இயந்திரம் 1893ல் தாமஸ் ஆல்வா எடிசனால் உருவாக்கப்பட்டது. கைனெட்டோஸ்கோப் என்று அந்த இயந்திரக்கு எடிசன் பெயரிட்டார். படம் பார்க்க விரும்பும் ரசிகர் அந்த இயந்திரத்தில் நாணயத்தை (ஆங்காங்கே பொட்டிக்கடைகளிலும் இருக்கும் இன்றைய ஒரு ரூபாய் போன் போல) போட்டவுடனேயே ஒரு சிறிய திறப்பு திறக்கும். அந்த திறப்பு வழியாக பார்த்தால் சில நொடி படம் பார்க்கலாம்.

அக்காலத்தில் இம்முறையில் படம் பார்க்க அமெரிக்காவின் செல்வந்தர்கள் பெரும் விருப்பம் காட்டினார்கள். நாடெங்கும் வரவேற்பை பெற்ற இம்முறையே சினிமாவுக்கான முன்னோடி எனலாம்.

படத்தில் காணப்படும் இயந்திரத்தின் பெயர் கைனெட்டோகிராப். இப்போது திரைப்படங்கள் எடுக்கப் பயன்படும் கேமிராவின் தாத்தா இது. கைனெட்டோகிராப்பை இயக்குபவர் தாமஸ் ஆல்வா எடிசன். அருகில் இருப்பவர் ஜார்ஜ் ஈஸ்ட்மென் (ஈஸ்ட்மென் பிலிம் தயாரித்தவர்). சினிமாவுக்கு எதிர்காலம் இல்லை என்று தாமஸ் ஆல்வா எடிசன் நம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி பேசப்போகும் சிவாஜி!


கடந்த ஜூன் மாதம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி சக்கை போடு போட்டிருக்கும் 'சிவாஜி' வரும் தீபாவளிக்கு இந்தி பேசப்போகிறார். டப்பிங் தொடர்பான வேலைகளில் இயக்குனர் ஷங்கர் பிஸியாக இருக்கிறார்.

சிவாஜியின் இந்தி வெர்ஷனில் பல மாற்றங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள். படத்தின் நீளம் குறைக்கப்படுமாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் தோற்றங்களில் சூப்பர் ஸ்டார் ஆடிப்பாடி நடித்த காட்சிகள் மாற்றப்படக் கூடும் என்று தெரிகிறது. ராஜ்கபூர், அமிதாப் போன்ற இந்தி சூப்பர் ஸ்டார்களின் பாடல்கள் அந்த இடத்தில் பொருத்தப்படலாம்.

வரும் தீபாவளிக்கு மும்பையே அதுரப் போகுதுல்லே...

Monday, August 20, 2007

கடவுளின் தேசத்தில் பிரமிட் சாய்மீரா!

தி ஹிந்து


இந்தியன் எக்ஸ்பிரஸ்


பிசினஸ் ஸ்டேண்டர்டு


பிசினஸ் லைன்

மீடியா துறையில் பணியாற்ற விருப்பமா?

இந்தியாவின் முதல் பன்னாட்டு பொழுதுபோக்கு நிறுவனமான பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ்க்கண்ட
பதவிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிசைனர்கள் - அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், பேஜ்மேக்கர், கோரல்டிரா மென்பொருள்கள் தெரிந்தவர் தேவை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பணியாற்ற தேவைப்படுகிறார்கள்.

காப்பிரைட்டர் - ஆங்கிலத்தில் எழுதும் புலமைவாய்ந்த காப்பிரைட்டர்கள் தேவை. விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்த முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ், ஆங்கிலம் சுருக்கெழுத்து தெரிந்தவர்கள் தேவை.

மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ்ஸ் - புதியவர்கள் (Freshers) வரவேற்கப்படுகிறார்கள்.

மார்க்கெட்டிங் மேனேஜர்ஸ் - டைம் செல்லிங், ஸ்பேஸ் செல்லிங், இன் - பிலிம் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வெப்டிசைனர், வெப்மாஸ்டர் - இணையத்தள வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டர்

ரேடியோ ஜாக்கி

வீடியோ ஜாக்கி

தொலைக்காட்சி, ரேடியோ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்

இங்கிலிஷ், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் - சப் எடிட்டர்கள்

மக்கள் தொடர்பு அதிகாரிகள்

மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்குமே அனுபவம், தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை saimirapyramid@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

Friday, August 17, 2007

லக்க.. லக்க... லக்ஷ்மி in Action!


Last week நான் Promise பண்ணமாதிரியே Friday காலையிலே Alarm வெச்சு எழுந்து Pizza Cornerக்கு (ஆமாம். Early Morning Ten "O" Clockக்கு) போயி Pizza + Coke முழுங்கிட்டு Scooty-pepலே Spotக்கு வந்துட்டேன். பாத்தீங்களா?

Ockey, Let us go to the Shooting Spot!

வரலாறு படத்தோட Shootingஐ கே.எஸ்.ஆர் நடத்துனாரே, அதே Location. விஜயகுமார் மஞ்சுளாவுக்கு சொந்தமான Palace. லக்க.. லக்க... லக்கா..ன்னு Sound உட்டுக்கிட்டே Enter ஆனேன். அரண்டுட்டாங்க சீமான் & கோ.

Yes. மேடியையும், பாவனாவையும் 'வாழ்த்துக்கள்' படத்துக்காக சுட்டுத் தள்ளிக்கிட்டிருந்தாரு தம்பி. Wov!! மேடி என்னா Smart? பார்க்க என்னோட Dream Star Tom Cruise மாதிரியே இருக்காரு. பாவனாவுக்கும் அவருக்கும் செம்ம Match!

ஒரு சின்ன Gapலே வெளியே வந்த சீமானை மடக்கினேன்.

"ஹலோ தம்பி! Congrats"

"நான் உனக்கு தம்பியா லக்ஷு அக்கா? Congratsனு சொல்லக்கூடாது. "வாழ்த்துக்கள்"னு சொல்லுங்க. நாம தமிழர் இல்லையா?"

"ஓக்கே, Basically நான் தமிழ் பொண்ணு. But I studied in Churchpark. இந்தப் படத்துலே என்ன Special?"

"உங்கிட்டே மட்டும் சொல்றேன். வெளியே சொல்லிடாதே. இந்தப் படத்துலே ஒரு அரசியல் பிரபலம் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுக்களை மாலத்தீவுலே உருவாக்கியிருக்காரு யுவன்"

"Oh! Interesting. அந்த Political Celebrity யாருன்னு சொல்லுங்க. Please.. Please!"

"ம்.. அதுமட்டும் சொல்லமாட்டேன். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்கிற அளவுக்கு உனக்கு தெரிந்தால் போதும். பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகனும் இப்படத்தில் நடிக்கிறார். மதுரை, திண்டுக்கல், பழனி எல்லாம் வெளிப்புற படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம்"

"கலக்குங்க. நல்ல Tamil பேசுறீங்க. உங்களோட பேசுனா எனக்கும் டமில் Practice ஆகும்"

"படத்தோட தயாரிப்பாளரும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்"னு சீமான் சொல்லிக்கிட்டிருந்தப்பவே Arrangements Readyன்னு குரல் வந்ததும் Escape ஆயிட்டார்.

படத்துலே நடிக்கப்போற Political Celebrity யாருன்னு யோசிச்சிக்கிட்டே என்னோட Pepஐ Start பண்ணேன். அடுத்த Fridayக்கு Matter உஷார் பண்ண வேணாமா?

Thursday, August 16, 2007

சினி சிப்ஸ் - 3


* 1953ல் வெளியான "திரும்பிப் பார்" திரைப்படத்தில் வில்லனாக சிவாஜி கணேசன் நடித்தார். அந்த வருடத்தின் சிறந்த வில்லனாக ஒரு பத்திரிகையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவாஜி.

* "சண்டிராணி" என்ற திரைப்படத்தின் திரைக்கதையையும், வசனத்தையும் எழுதியவர் பானுமதி.

* தயாரிப்பாளர் உட்பட முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட "ஒரு தலை ராகம்" 33 வாரங்கள் ஓடி அபார சாதனை புரிந்தது.

* துளசி, வண்ணக் கனவுகள், அடிமை விலங்கு, நாற்காலி கனவுகள் ஆகிய திரைப்படங்களுக்கு கவிஞர் வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.

* நடிக-நடிகையருக்கு மேக்கப் போடாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கிய "ஓடாதே நில்"

* நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு பிடித்தது தில்லானா மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்.

* வட்டாரத் தமிழ் மொழியில் வசனம் எழுதப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம் "மக்களைப் பெற்ற மகராசி"

* நிஜ தம்பதியரான கலைவாணர் என்.எஸ்.கே - மதுரம் தம்பதி, மொத்தம் 75 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

* ஜெமினி கணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் ஜெமினி பிக்சர்ஸ் அதிபர் எஸ்.எஸ். வாசனால் இயக்கப்பட்டது.

* 1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

Tuesday, August 14, 2007

மீண்டும் பில்லா!


1978ல் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் டான். அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்திருந்த இத்திரைப்படம் ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகராக அக்காலத்தில் பேசப்பட்டது. அப்படத்துக்கு கிடைத்த அபார வெற்றியைத் தொடர்ந்து மற்ற மொழிகளின் சூப்பர் ஸ்டார்களும் டானாக நடிக்க விரும்பினர்.

தெலுங்கில் என்.டி.ஆர் "யுகேந்தர்" என்ற பெயரில் இப்படத்தில் நடித்தார். இயக்குனர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் அப்படத்தை எடுத்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க தயாரிப்பாளர் கே.பாலாஜியால் பில்லா என்ற பெயரில் அப்படம் தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும், தமிழிலும் கூட வசூலை வாரி குவிக்கத் தவறவில்லை டான்.

25 ஆண்டுகள் கழித்து மீண்டும் டான் சென்ற ஆண்டு ஷாருக்கானாக இந்தியில் மிரட்டினார். இறுதிக்காட்சி மட்டும் பழைய டானிலிருந்து மாற்றப்பட்டிருந்தது. இந்தியில் இப்படம் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கிலும் தூசு தட்டப்படுகிறது.

தெலுங்கில் என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, பீதாம்பரத்தின் மகன் பி.வாசு மீண்டும் யுகேந்தரை எடுக்கிறார். தமிழில் விஷ்ணுவர்தன் இயக்க அஜீத்குமாரின் நடிப்பில் பில்லா 2007 என்ற பெயரில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி வெளியீடாக இருக்கலாம் என்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 65 கோடியாம்.

இந்தியில் பெற்ற வெற்றியை தமிழிலும், தெலுங்கிலும் தக்கவைத்துக் கொள்வாரா டான் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சினி சிப்ஸ் - 2


* நடிப்பு, நடனம், வாய்ப்பாட்டு, கதை மற்றும் கட்டுரை, திரைக்கதை, புகைப்படம், எடிட்டிங், இயக்கம், கவிதை, மிருதங்கம், கராத்தே, ஜூடோ, குங்பூ, பன்மொழித் திறமை, தயாரிப்பு நிர்வாகம் - இவ்வளவும் தெரிந்தவர் யார் தெரியுமா? கமல்ஹாசன்.

* கே. பாலச்சந்தர் உருவாக்கிய கதாபாத்திரங்களிலேயே அவருக்கு பிடித்த கதாபாத்திரம் "எதிர்நீச்சல் மாது"



* தமிழில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எம்.ஜி.ஆர் நடித்த "மர்மயோகி". எம்.ஜி.ஆர் நடித்த 136 திரைப்படங்களில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் கிடைத்தது.

* முழுக்க எடுக்கப்பட்டு தீயிலே நாசமான தமிழ் திரைப்படம் "இன்பசாகரன்"

* தி. ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்", "மரப்பசு" ஆகிய இரு நாவல்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்தமானவை.

* ஏதாவது ஒரு விருது வாங்க டெல்லிக்கு தொடர்ச்சியாக 11 வருடங்கள் சென்று வந்தவர் நடிகை சாவித்திரி



* தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதரின் தேனிலவு.

* நடிகர் சத்யராஜ் ஒரு திரைப்படத்துக்கு கதை எழுதி இருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர் சுயரூபம்.

* கமல்ஹாசன் அரங்கேற்றம் திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.300/-



* கதாநாயகன் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் "அவ்வையார்"

கடவுளின் தேசத்திலும் காலடி பதிக்கிறோம்!


கடவுளின் தேசம் நோக்கிய எங்களது பயணம் வரும் ஆகஸ்ட்டு 18, சனிக்கிழமை தொடங்குகிறது.

கேரளாவில் பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் தொடர்திரையரங்கு திட்டம் மாண்புமிகு எம்.ஏ.பேபி (கேரள கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர்) அவர்களால் தொடங்கப்படுகிறது.

வண்ணமிகு அதே விழாவில் பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தார் தயாரிக்கும் முதல் மலையாளத் திரைப்படத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் துவக்கி வைக்கிறார்.

விழாவில் அமைச்சருடன் அதிகாரிகளும், கேரளத் திரைப்படத்துறையினரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இனிமே நாங்க மலையாளமும் பறையும்!

சூப்பர்ஸ்டார் குறித்த ஆவணப்படம்!


லண்டனைச் சார்ந்த யூகே பல்கலைக்கழகம் மிக விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்த ஆவணப்படம் ஒன்றினை வெளியிட இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், மேனரிஸம் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்த செய்திகள் இப்படத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.

மேக்ஸ் மாரிட்மெர், எல்லீ நைட்ஸ்ப்ரிட்ஸ், ராப் ஸ்ட்ரீட்டர் மற்றும் ஜெயந்தி ஆகிய நான்கு உறுப்பினர்கள் அடங்கிய மாணவர்கள் குழு இதற்காக இந்தியா வந்திருக்கிறது. அவர்களது கல்விப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த பத்து நிமிட ஆவணப்படம் எடுக்கப்படுகிறது.

ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகர் குறித்து ஆவணப்படம் எடுப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று மாணவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Monday, August 13, 2007

சினி சிப்ஸ் - 1

* இயக்குனர் பாலச்சந்தரை முதன்முதலாக சந்தித்தபோது ரஜினிகாந்த் கேட்ட கேள்வி "ஒரு நடிகனிடம் நடிப்பைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்கலாம்?" பாலச்சந்தர் சொன்ன பதில். "சினிமாவைத் தவிர்த்து மற்ற இடங்களில் நடிகன் நடிக்கக் கூடாது!"



* 1956ல் ஜெமினி - சாவித்திரி திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியத் திருமணமாகவே இருந்தது. "லக்ஸ்" சோப்பு விளம்பரத்துக்கு மாடலாக அப்போது சாவித்திரி இருந்தார். அதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் போது "சாவித்திரி கணேஷ்" என்று அவர் கையெழுத்திட்டதாலேயே அவர்களது திருமணம் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.

* "ஒருதலைராகம்" திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே ஆண்குரலில் மட்டுமே பாடப்பட்டிருக்கும். அதுபோலவே "கற்பகம்" திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பெண்குரலில் மட்டுமே பாடப்பட்டிருக்கும்.



* ப்ரியா, நினைத்தாலே இனிக்கும், விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ, ஜன்னல் மலர், அனிதா, இளம் மனைவி, காயத்ரி ஆகிய திரைப்படங்களுக்கு மூலம் எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்.



* 1986ஆம் ஆண்டு மட்டும் இசைஞானி இளையராஜா 47 படங்களுக்கு இசையமைத்திருந்தார். உலகத் திரைப்பட வரலாற்றில் இன்றுவரை இது ஒரு சாதனையாக கூறப்படுகிறது.



* "புதிய வார்ப்புகள்" திரைப்படத்துக்காக பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் பாக்கியராஜ். பாரதிராஜாவின் எதிர்பார்ப்புக்கேற்ற கதாநாயகன் கிடைக்காததால் திடீர் கதாநாயகனாக பாக்யராஜ் மாறிவிட்டார்.

* கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரும் சேர்ந்து தயாரித்த முதல் திரைப்படம் "நாம்". அவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மேகலா பிக்சர்ஸ்.

* அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு" திரைப்படம் ஒரே இரவில் நடப்பது போன்று கதையமைக்கப் பட்டிருந்தது. முதலில் இதை நாடகமாக எழுதிய அண்ணா ஒரே இரவில் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



* கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ஜனாதிபதி விருதை அப்படத்தில் நடித்தற்காக பெற்றார் கமல்ஹாசன்.



* சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பூங்கோதை. ஆயினும் முதலில் வெளியானது பராசக்தி. பூங்கோதை சிவாஜியின் ஆறாவது திரைப்படமாகவே வெளிவந்தது.