Thursday, August 23, 2007

அப்போவெல்லாம் இப்படித்தான் படம் பார்த்தாங்க!

அசையும் படம் (Motion) பார்ப்பதற்கான இயந்திரம் 1893ல் தாமஸ் ஆல்வா எடிசனால் உருவாக்கப்பட்டது. கைனெட்டோஸ்கோப் என்று அந்த இயந்திரக்கு எடிசன் பெயரிட்டார். படம் பார்க்க விரும்பும் ரசிகர் அந்த இயந்திரத்தில் நாணயத்தை (ஆங்காங்கே பொட்டிக்கடைகளிலும் இருக்கும் இன்றைய ஒரு ரூபாய் போன் போல) போட்டவுடனேயே ஒரு சிறிய திறப்பு திறக்கும். அந்த திறப்பு வழியாக பார்த்தால் சில நொடி படம் பார்க்கலாம்.

அக்காலத்தில் இம்முறையில் படம் பார்க்க அமெரிக்காவின் செல்வந்தர்கள் பெரும் விருப்பம் காட்டினார்கள். நாடெங்கும் வரவேற்பை பெற்ற இம்முறையே சினிமாவுக்கான முன்னோடி எனலாம்.

படத்தில் காணப்படும் இயந்திரத்தின் பெயர் கைனெட்டோகிராப். இப்போது திரைப்படங்கள் எடுக்கப் பயன்படும் கேமிராவின் தாத்தா இது. கைனெட்டோகிராப்பை இயக்குபவர் தாமஸ் ஆல்வா எடிசன். அருகில் இருப்பவர் ஜார்ஜ் ஈஸ்ட்மென் (ஈஸ்ட்மென் பிலிம் தயாரித்தவர்). சினிமாவுக்கு எதிர்காலம் இல்லை என்று தாமஸ் ஆல்வா எடிசன் நம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: