மக்களே!
போட்டிகள் நிறைந்த உலகம் இது என்று சும்மாவா சொன்னார்கள்? திக்கெட்டும் போட்டா போட்டிகளை எங்கும் காணமுடிகிறது. நாங்களும் போட்டி போட வருகிறோம். ஆனால் இது வேற போட்டி!
சூப்பர் ஸ்டாரின் இந்த சூப்பர் படத்தைப் பாருங்கள்.
சூப்பர் ஸ்டார் சூப்பர்மேனாக நடித்தால் என்ன 'பஞ்ச் டயலாக்' அடிப்பார். இது தான் போட்டி. 'பஞ்சை'யும், நெருப்பையும் பக்கத்துலே வெச்சுட்டோம். பத்த வைக்க வேண்டியது உங்க பொறுப்பு.
பரிசு எதுவும் கிடையாதா என்று பரிதவிக்கும் தருமிகளுக்கு :
பரிசு ஒன்றல்ல, இரண்டல்ல.. மூன்று!
பரிசு ஒன்றல்ல, இரண்டல்ல.. மூன்று!
போட்டியில் வெற்றி பெறும் மூன்று பஞ்ச் டயலாக்குகளுக்கு நாளை (வெள்ளி, 03-02-2007) மாலை 6.30 மணி காட்சி வீராப்பு திரைப்படத்தின் டிக்கெட்டுகள் பரிசாக வழங்கப்படும்.
சென்னை அண்ணா சாலை பிரமிட் அண்ணா திரையரங்கிலோ அல்லது ராயப்பேட்டை பிரமிட் சிம்பொனி திரையரங்கிலோ சுந்தர்.சி.யின் வீராப்பை காண ரெடியா? எந்த தியேட்டர் என்பது வெற்றி பெறுபவர்களின் சாய்ஸ்.
என்ஜாய்.. ஜமாய்.. என்ஜமாய்!!!
வலைப்பூவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மறுபடியும் பப்ளிஷ் செய்யப்படுகிறது. கமெண்டுகளும் சேர்க்கப்படும்.
பிரமிட்டுன்னா மாஸூ
நான் தாண்டா பாஸூ
//சூப்பர் ஸ்டாரின் இந்த சூப்பர் படத்தைப் பாருங்கள்.//
என்ன கொடுமை சரவணன் இது?
மக்களுக்கு நான் சூப்பர் மேன்..
எதிரிகளுக்கு நான் டாபர் மேன்..வாவ்..(கடிச்சிடுறார்..ஹி!ஹி!)
சூப்பரா கீது சுப்புரமணி
சூப்பர் மேனுக்கே நானு சூப்பர் ஸ்டாரு
சும்மா சூப்புறவங்க எல்லாம் ஓடிப் போயிறு
-புனிதன்
சூப்பர் மேனு... பேரைக் கேட்ட உடனே சும்மா சூப்பரா இருக்குதில்லே!
நான் திரும்பி வந்தா அதுருதுல
சும்மா பறந்து பறந்து அடிப்பேன் இக்கட சூடு
கண்ணா நான் இப்ப சூப்பர் ஸ்டாரு மட்டுமில்ல சூப்பர்மேனு
பேர சொன்னா உடம்பு சும்மா பறக்குதுல
"aathaluku thavani pottakooda illai, yennaku super man dress pottakooda summa supera irukkumala,Ithu yeppadi irukku...."
பரிசு சென்னையில் இருப்பவர்களுக்கு மட்டும் தானா?
பரிசு சென்னையில் இருப்பவர்களுக்கு தான். வெளியூர் ஆட்கள் வெற்றி பெற்றால் சென்னையில் இருக்கும் உறவினருக்கு அல்லது நண்பருக்கு பரிசினை மாற்றி விடலாம்.
அனானியாக கமெண்டு போடும் நண்பர்களுக்கு தான் எப்படி பரிசு கொடுப்பது என்று தெரியவில்லை. பரிசு பெற்ற அனானி எந்த அனானி என்று முடிவெடுப்பது சிரமம் என எண்ணுகிறோம்.
கண்ணா...எப்போ போடறோம் எப்படி போடறோம்ங்கிறது முக்கியமில்லை ஆனா போடவேண்டிய இடத்துல ஜெட்டிய போட்டா பேண்ட்டுக்கு மேல கூட போடலாம்ன்னு நான் சொல்லலை....சூப்பர்மேன் சொல்லியிருக்கார்....ஹா ஹா ஹா இதெப்படி இருக்கு...
பன்னாடைங்க தான் ஜெட்டி போட்டு பேண்ட் போடுவாங்க...சூப்பர் மேன் பேண்ட் போட்டு தான் ஜெட்டி போடுவார்....
"yeppa varuven yeppadi varuvenu yennku mattumilla yarukkum theriyathu,aana varaveandiya nearathla ippadi super manakooda varuven"
பங்கேற்பாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு போட்டிக்கான கெடு நேரம் ஒருநாள் நீட்டிக்கப்படுகிறது. நாளை மதியம் வரை போட்டிக்கான பஞ்ச் டயலாக்கை சொல்லலாம்.
வெற்றியாளர்கள் நாளை மாலை காட்சி வீராப்பு பார்க்கலாம்.
தலைவர் கெட்டப் சூப்பர்!
சூப்பர் மேனு,
ச்ச்ச்சும்மா பறக்குதுல்லே.
கண்ணா!
நான் எங்கே போடுவேன் எப்படி போடுவேன்னு தெரியாது. ஆனா சரியா எல்லாருக்கும் தெரியற மாதிரி போட்டுக்குவேன்.