* இயக்குனர் பாலச்சந்தரை முதன்முதலாக சந்தித்தபோது ரஜினிகாந்த் கேட்ட கேள்வி "ஒரு நடிகனிடம் நடிப்பைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்கலாம்?" பாலச்சந்தர் சொன்ன பதில். "சினிமாவைத் தவிர்த்து மற்ற இடங்களில் நடிகன் நடிக்கக் கூடாது!"
* 1956ல் ஜெமினி - சாவித்திரி திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியத் திருமணமாகவே இருந்தது. "லக்ஸ்" சோப்பு விளம்பரத்துக்கு மாடலாக அப்போது சாவித்திரி இருந்தார். அதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் போது "சாவித்திரி கணேஷ்" என்று அவர் கையெழுத்திட்டதாலேயே அவர்களது திருமணம் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.
* "ஒருதலைராகம்" திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே ஆண்குரலில் மட்டுமே பாடப்பட்டிருக்கும். அதுபோலவே "கற்பகம்" திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பெண்குரலில் மட்டுமே பாடப்பட்டிருக்கும்.
* ப்ரியா, நினைத்தாலே இனிக்கும், விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ, ஜன்னல் மலர், அனிதா, இளம் மனைவி, காயத்ரி ஆகிய திரைப்படங்களுக்கு மூலம் எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்.
* 1986ஆம் ஆண்டு மட்டும் இசைஞானி இளையராஜா 47 படங்களுக்கு இசையமைத்திருந்தார். உலகத் திரைப்பட வரலாற்றில் இன்றுவரை இது ஒரு சாதனையாக கூறப்படுகிறது.
* "புதிய வார்ப்புகள்" திரைப்படத்துக்காக பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் பாக்கியராஜ். பாரதிராஜாவின் எதிர்பார்ப்புக்கேற்ற கதாநாயகன் கிடைக்காததால் திடீர் கதாநாயகனாக பாக்யராஜ் மாறிவிட்டார்.
* கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரும் சேர்ந்து தயாரித்த முதல் திரைப்படம் "நாம்". அவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மேகலா பிக்சர்ஸ்.
* அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு" திரைப்படம் ஒரே இரவில் நடப்பது போன்று கதையமைக்கப் பட்டிருந்தது. முதலில் இதை நாடகமாக எழுதிய அண்ணா ஒரே இரவில் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ஜனாதிபதி விருதை அப்படத்தில் நடித்தற்காக பெற்றார் கமல்ஹாசன்.
* சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பூங்கோதை. ஆயினும் முதலில் வெளியானது பராசக்தி. பூங்கோதை சிவாஜியின் ஆறாவது திரைப்படமாகவே வெளிவந்தது.
//]* சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பூங்கோதை. ஆயினும் முதலில் வெளியானது பராசக்தி. பூங்கோதை சிவாஜியின் ஆறாவது திரைப்படமாகவே வெளிவந்தது. //
கேள்விபடாத தகவல் நிறைய இருந்தது. பதிவுக்கு நன்றி.
//ஜன்னல் மலர், அனிதா, இளம் மனைவி //
Huhh..இவை படமாக வந்திருந்தனவா? எப்போது? யார் நடித்திருந்தார்கள்?
ஒருதலைராகம்" திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே ஆண்குரலில் மட்டுமே பாடப்பட்டிருக்கும். //
இதயம் படத்திலும் முழுதும் ஆண்குரலே