Tuesday, August 14, 2007

சூப்பர்ஸ்டார் குறித்த ஆவணப்படம்!


லண்டனைச் சார்ந்த யூகே பல்கலைக்கழகம் மிக விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்த ஆவணப்படம் ஒன்றினை வெளியிட இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், மேனரிஸம் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்த செய்திகள் இப்படத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.

மேக்ஸ் மாரிட்மெர், எல்லீ நைட்ஸ்ப்ரிட்ஸ், ராப் ஸ்ட்ரீட்டர் மற்றும் ஜெயந்தி ஆகிய நான்கு உறுப்பினர்கள் அடங்கிய மாணவர்கள் குழு இதற்காக இந்தியா வந்திருக்கிறது. அவர்களது கல்விப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த பத்து நிமிட ஆவணப்படம் எடுக்கப்படுகிறது.

ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகர் குறித்து ஆவணப்படம் எடுப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று மாணவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

2 comments:

  1. said...

    grATE NEWS!!!

  2. said...

    பெய்யரில்லி கிண்டல் பண்றாருங்கோ :-) , நீங்க நெசமா பாராட்டுராருன்னு நினைச்சிக்கப் போறீங்க :-)