Monday, August 6, 2007

தமிழ் வலைப்பதிவர் பட்டறைக்கு நன்றி!

எங்களது வலைப்பதிவு திரட்டிகளால் அங்கீகரிக்கப்பட்டு பத்து நாட்களே ஆகியிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் வித்தியாசமான முயற்சி என்று பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்டின் வலைப்பூ பாராட்டினை பெற்றிருக்கிறது. (செய்திக்கு நன்றி : யெஸ்.பா)


தொழில்நிறுவனங்கள் எதிர்காலத்தில் வலைப்பூக்களை தவிர்த்து தங்களது விளம்பரத் திட்டங்களை அமைத்துக் கொள்ள முடியாது. இந்த தொலைநோக்குப் பார்வையின் காரணமாகவே தமிழில் இப்போது வலைப்பூ தொடங்கியிருக்கிறோம். எதிர்காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் தமிழ் வலைப்பூக்களின் அவசியத்தை உணர்ந்து இதை பயன்படுத்திக் கொள்ள நாங்களும் ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி.

பிரமிட் நிறுவனத்தின் வலைப்பூ தொடங்கப்பட்டு இருவாரங்களுக்குள்ளாகவே சுமார் இரண்டாயிரம் பார்வைகள் (ஹிட்ஸ்) பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் முயற்சியை ஊக்குவித்திருக்கும் சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை அமைப்பாளர்களுக்கும், தொடர்ந்து ஆதரவு தந்து வரும் தமிழ் இணைய ஆர்வலர்களுக்கும் நன்றி!

எதிர்வரும் காலத்தில் தமிழ் இணையத்துக்கும், தமிழுக்கும் எங்களது பங்களிப்பும் இருக்கும் என்பதை இவ்வேளையில் சொல்லிக் கொள்கிறோம்.

8 comments:

  1. நாமக்கல் சிபி said...

    //எதிர்வரும் காலத்தில் தமிழ் இணையத்துக்கும், தமிழுக்கும் எங்களது பங்களிப்பும் இருக்கும் என்பதை இவ்வேளையில் சொல்லிக் கொள்கிறோம்.//

    நன்றிகளும் வாழ்த்துக்களும்!

  2. மாயா said...

    wel come . . .

  3. Anonymous said...

    ///எதிர்வரும் காலத்தில் தமிழ் இணையத்துக்கும், தமிழுக்கும் எங்களது பங்களிப்பும் இருக்கும் என்பதை இவ்வேளையில் சொல்லிக் கொள்கிறோம்.////

    வலைஞர்கள் சார்பாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்...!!!

  4. Anonymous said...

    அதெல்லாஞ் சரிதானுங்கோ..
    ஒங்க நிறுவனம் வெளியிடும் dvd வட்டுகள் தரம் ஏன் மசமசன்னு இருக்கு. ஒரு காலத்தில் ஆசை, திருடா திருடா போன்ற படங்களை தலா 20 யு.எஸ் டாலர்கள் கொடுத்து வாங்கியவன்.

  5. Ravikumar said...

    Good work indeed

  6. PYRAMID SAIMIRA said...

    //அதெல்லாஞ் சரிதானுங்கோ..
    ஒங்க நிறுவனம் வெளியிடும் dvd வட்டுகள் தரம் ஏன் மசமசன்னு இருக்கு. ஒரு காலத்தில் ஆசை, திருடா திருடா போன்ற படங்களை தலா 20 யு.எஸ் டாலர்கள் கொடுத்து வாங்கியவன். //

    எகிப்து நாட்டில் இருக்கும் பிரமிடுக்கும் எங்களுக்கும் எப்படி சம்பந்தமில்லையோ, அதுபோலவே நீங்கள் குறிப்பிடும் டிவிடி நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

  7. siva gnanamji(#18100882083107547329) said...

    WELCOME!

  8. Anonymous said...

    விளக்கத்துக்கு நன்றி.