சென்னை இருபத்தெட்டுலு!
சமீபத்தில் நூறாவது நாள் விழா கண்ட சென்னை 600028 தெலுங்கு பேசப்போகிறது. 'கொடுத்தே கொட்டாலிரா' என்ற தலைப்பிடப்பட்டு ஆகஸ்டு இறுதியில் ஆந்திராவில் வெளியாகிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை பீப்பிள்ஸ் எண்டெர்டெயிண்மெண்ட் சார்பில் அல்மான் ராஜு தெலுங்கு ஆக்கியிருக்கிறார்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தெலுங்கில் ஆஷா போன்ஸ்லே!
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆஷா போன்ஸ்லே ஒரு தெலுங்குப் பாடலுக்கு பின்னணி பாடுகிறார். கிருஷ்ணவம்சி இயக்கும் சந்தாமாமா திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றினை பாடுகிறார். இதற்கு முன்பாக சில ஆண்டுகளுக்கு முன்பாக மோகன்பாபு நடித்த பாலு-நீலு படத்துக்காக ஆஷா பாடியிருந்தார்.
0 comments:
Post a Comment