Thursday, August 16, 2007

சினி சிப்ஸ் - 3


* 1953ல் வெளியான "திரும்பிப் பார்" திரைப்படத்தில் வில்லனாக சிவாஜி கணேசன் நடித்தார். அந்த வருடத்தின் சிறந்த வில்லனாக ஒரு பத்திரிகையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவாஜி.

* "சண்டிராணி" என்ற திரைப்படத்தின் திரைக்கதையையும், வசனத்தையும் எழுதியவர் பானுமதி.

* தயாரிப்பாளர் உட்பட முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட "ஒரு தலை ராகம்" 33 வாரங்கள் ஓடி அபார சாதனை புரிந்தது.

* துளசி, வண்ணக் கனவுகள், அடிமை விலங்கு, நாற்காலி கனவுகள் ஆகிய திரைப்படங்களுக்கு கவிஞர் வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.

* நடிக-நடிகையருக்கு மேக்கப் போடாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கிய "ஓடாதே நில்"

* நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு பிடித்தது தில்லானா மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்.

* வட்டாரத் தமிழ் மொழியில் வசனம் எழுதப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம் "மக்களைப் பெற்ற மகராசி"

* நிஜ தம்பதியரான கலைவாணர் என்.எஸ்.கே - மதுரம் தம்பதி, மொத்தம் 75 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

* ஜெமினி கணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் ஜெமினி பிக்சர்ஸ் அதிபர் எஸ்.எஸ். வாசனால் இயக்கப்பட்டது.

* 1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

1 comments:

  1. said...

    //துளசி, வண்ணக் கனவுகள், அடிமை விலங்கு, நாற்காலி கனவுகள் ஆகிய திரைப்படங்களுக்கு கவிஞர் வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.//

    இவை தவிர... 1989ல் அஷாக் குமார் இயக்கத்தில் சரத்பாபு-சரண்யா-சில்க் ஸ்மிதா நடித்த 'அன்று பெய்த மழையில்' படத்திற்கும் வசனம் எழுதியது கவியரசு வைரமுத்து அவர்கள்தாம் என்று நினைக்கிறேன்.