Tuesday, August 14, 2007

மீண்டும் பில்லா!


1978ல் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் டான். அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்திருந்த இத்திரைப்படம் ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகராக அக்காலத்தில் பேசப்பட்டது. அப்படத்துக்கு கிடைத்த அபார வெற்றியைத் தொடர்ந்து மற்ற மொழிகளின் சூப்பர் ஸ்டார்களும் டானாக நடிக்க விரும்பினர்.

தெலுங்கில் என்.டி.ஆர் "யுகேந்தர்" என்ற பெயரில் இப்படத்தில் நடித்தார். இயக்குனர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் அப்படத்தை எடுத்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க தயாரிப்பாளர் கே.பாலாஜியால் பில்லா என்ற பெயரில் அப்படம் தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும், தமிழிலும் கூட வசூலை வாரி குவிக்கத் தவறவில்லை டான்.

25 ஆண்டுகள் கழித்து மீண்டும் டான் சென்ற ஆண்டு ஷாருக்கானாக இந்தியில் மிரட்டினார். இறுதிக்காட்சி மட்டும் பழைய டானிலிருந்து மாற்றப்பட்டிருந்தது. இந்தியில் இப்படம் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கிலும் தூசு தட்டப்படுகிறது.

தெலுங்கில் என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, பீதாம்பரத்தின் மகன் பி.வாசு மீண்டும் யுகேந்தரை எடுக்கிறார். தமிழில் விஷ்ணுவர்தன் இயக்க அஜீத்குமாரின் நடிப்பில் பில்லா 2007 என்ற பெயரில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி வெளியீடாக இருக்கலாம் என்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 65 கோடியாம்.

இந்தியில் பெற்ற வெற்றியை தமிழிலும், தெலுங்கிலும் தக்கவைத்துக் கொள்வாரா டான் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2 comments:

  1. Anonymous said...

    rajini, amitabh characteril ajith!

    enna kodumai sir idhu?

  2. said...

    //படத்தின் பட்ஜெட் 65 கோடியாம்.//

    65 கோடி செலவு பண்ற அளவுக்கு படத்துல என்னன்ணே இருக்கும்? இதுல பாதிகூட இருக்காது என்பது கோலிவுட் கூத்தாடியின் கிசுகிசுண்ணேன்.. எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணிக்குங்கண்ணேன்..