Saturday, August 4, 2007

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படம்!


சமீபத்தில் வெளிவந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சங்கர்தாதா ஜிந்தாபாத் அவரது 148வது திரைப்படம். 149வது திரைப்படத்தை இயக்குனர் குணசேகருக்காக நடித்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெகாஸ்டாரின் 150வது திரைப்படம் எதுவாக இருக்கும்? யார் இயக்குவார்? என்று பரபரப்புடன் தெலுங்கு சினிமா ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சங்கர்தாதா ஜிந்தாபாத் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து குற்றாலத்துக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வெடுத்து திரும்பியிருக்கிறார் மெகாஸ்டார். அவரது 150வது திரைப்படத்தை பற்றிய செய்திகள் கசியத் தொடங்கியிருக்கிறது.

மெகாஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது 150வது திரைப்படத்தை அவரே இயக்கப் போகிறார். படத்தின் பெயர் : உய்யலவாடா நரசிம்ம ரெட்டி.

ராயலசீமா பகுதியில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்தும், சமூகநீதிக்காகவும் போராடிய மாபெரும் வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை திரைப்படமாக்குகிறார் சிரஞ்சீவி. ராயலசீமா பகுதியில் அக்காலத்தில் புரட்சி வீரராக திகழ்ந்த நரசிம்ம ரெட்டியின் பின்னால் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டிருந்தார்களாம். பருச்சூரி சகோதரர்கள் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை திரைக்கதை ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேசம் அதிரத் தொடங்கியிருக்கிறது.

0 comments: