இன்று முப்பது வயதை கடந்திருப்பவர்கள் யாரும் கனவுக்கன்னி ரம்பாவை மறந்திருக்க முடியாது. ஹாலிவுட் கதாநாயகி மர்லின் மன்றோ பாணியில் அழகிய லைலா பாடலுக்கு ரம்பா ஆடிய நடன அசைவுகளை மறக்க முடியுமா? 1996ல் வெளியான உள்ளத்தை அள்ளித்தா தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளத்தை அள்ளிக் கொண்டது. அப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே திரையுலகில் நல்ல உயரத்தை தொட்டார்கள்.
நவரச நாயகன் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் என்று நடிக நடிகையர் பட்டாளமும், இயக்குனர் சுந்தர் சி, இசையமைப்பாளர் சிற்பி, ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் என்று இப்படத்தின் டெக்னிஷியன்கள் அனைவருமே அடுத்த சில வருடங்களுக்கு பிசியாகி விட்டனர். பாடல்கள் சூப்பர் ஹிட்!!!
சென்னையில் பிரமிட் சிம்பொனி தியேட்டரில் உள்ளத்தை அள்ளித்தா வெள்ளிவிழா ஓடியது. தமிழ்நாடெங்கும் வசூலில் மகத்தான சாதனை புரிந்தது.
பதினோரு ஆண்டுகள் கழித்து வரலாறு திரும்புகிறது. மீண்டும் உள்ளத்தை அள்ளித்தா தயாராகிறது. தமிழில் அல்ல, மலாய் மொழியில். பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் உள்ளத்தை அள்ளித்தா மலாய் மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அப்படத்திலிருந்து இரு காட்சிகள் :
"ஐ லவ் யூ, லவ் யூ சொன்னாளே!
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே!!"
- உள்ளத்தை கொள்ளை கொண்ட சூப்பர் ஹிட் பாடல்!
"யோவ் மிலிட்டரி அவனுங்களை சுடுய்யா!"
"எனக்கு சுடத் தெரியாது!"
"அப்போ மிலிட்டரியிலே சுட்டேன், சுட்டேன்னு சொன்னீயே?
என்னத்தைய்யா சுட்டே?"
"நான் மிலிட்டரியிலே சப்பாத்தியில்ல சுட்டுக்கிட்டிருந்தேன்!"
- நகைச்சுவையால் வயிற்றை பதம் பார்க்கும் கலக்கல் க்ளைமேக்ஸ்!
ஹீரோ சுமார். ஹீரோயின் ரொம்ப அழகு. தாஜ்மகால் ரியாசென் மாதிரி இருக்காங்க.
Malay films are not technically good. I hope this film come from an Indian producer. So We can expect some qualtiy.
Thanks
Raja, Malaysia
சபாஷ் மீனா, வந்தனம் (மலையாளம்), அடுத்த வீட்டுப் பெண், அந்தாஸ் அப்னா அப்னா (ஹிந்தி) என்று இந்த படத்தின் inspiration list மிகவும் நீளம்.
இந்த படத்தில் இருந்த மிக சில ஒரிஜினல் காட்சிகளில் மிகவும் ரசிக்கதக்கது - தலையில் அடிபட்டவுடன் மணிவண்ணன் 'மம்மி' என்று அலறும் காட்சி :-))))
படங்கள் சூப்பர். ரெண்டு படம் தான் போட்டிருக்கிறீர்கள். இன்னமும் நிறைய படங்களை போடுங்கள். படம் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.
//இன்னமும் நிறைய படங்களை போடுங்கள். படம் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். //
உங்கள் ஆவல் புரிகிறது நண்பரே. பூர்த்தி செய்கிறோம்.