தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று கடுமையாக உழைக்க கூடியவர் நடிகர் விஜய். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று முயற்சிப்பார்.
போக்கிரி படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு அழகிய தமிழ் மகனில் நடித்து கொண்டிருக்கிறார். வெற்றியடைந்த ஒரு இந்திபடத்தின் தழுவல் என்று எல்லோரும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தாலும் படத்தின் கதை என்னவென்பதை இதுவரை யாரும் அறியாதவாறு ரகசியம் காக்கிறார்கள் படக்குழுவினர்.
போக்கிரி படத்தில் "வசந்தமுல்லை போல வந்து" என்ற பழைய பாடலை ரீமிக்ஸ் செய்து அஸினுடன் குத்தாட்டம் போட்டு கலக்கினார் விஜய். அதுபோலவே அழகிய தமிழ் மகனிலும் சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற "பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்" பாடலை ரீமிக்ஸ் செய்து ஸ்ரேயாவுடன் செம குத்து குத்த போகிறார் விஜய்.
தீபாவளிக்கு வெளிவரும் அழகிய தமிழ்மகனை பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தார் உலகெங்கும் வெளியிடுகிறார்கள்.
Friday, September 28, 2007
அசத்தப் போகும் அழகிய தமிழ்மகன்!
Posted by PYRAMID SAIMIRA at 9/28/2007 01:37:00 PM 3 comments
தசாவதார ரகசியம்!

தசாவதாரம் படமும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமலின் கெட்டப்புகள் என்று பத்திரிகைகளில் வந்த கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களை கண்டு படக்குழுவினர் சிரிக்கிறார்களாம். ஒசாமா பின்லேடன், ஜார்ஜ் புஷ், சாமியார், நீக்ரோ என்று பலவேடங்களில் கமல் படத்தில் தோன்ற போகிறார் என்று ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பிரபல இந்தி இசையமைப்பாளர் கிமேஷ் இப்படத்துக்கு இசையமைக்கப் போகிறார். ஆறு பாடல்கள் இடம்பெறுகிறது. இதுவரை ஐந்துபாடல்களை படம்பிடித்து விட்டதாக தெரிகிறது. கமல்ஹாசனின் பெரிய மகள் ஸ்ருதி இப்படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Posted by PYRAMID SAIMIRA at 9/28/2007 01:30:00 PM 1 comments
Labels: தசாவதாரம்
தள்ளிப் போகும் பில்லா!
தீபாவளிக்கு சரவெடி கொளுத்த அழகிய தமிழ்மகனுக்காக விஜய் ரசிகர்களும், பில்லா 2007க்காக அஜித் ரசிகர்களும் தயாராக இருந்தார்கள். அஜித் தன் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பார் போல தெரிகிறது.
தீபாவளி ரேஸில் இருந்து விலகிக் கொண்ட பில்லா 2007 (2008?) பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கிறார்கள்.
அஜீத், நமீதாவுடன் மலேசியாவில் டூயட் பாடிக்கொண்டிருக்கும் வேளையில் நயன்தாரா இங்கே பிஸியாகிவிட்டாராம். நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக பில்லா வெயிட் செய்துகொண்டிருக்கிறாராம்.
அதுவுமில்லாமல் அவசர அவசரமாக படத்தின் தயாரிப்பு பணிகளை செய்வதில் இயக்குனருக்கு விருப்பமில்லாததாலும் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போயிருப்பதாக சொல்கிறார்கள். பலகோடி செலவில் உருவாகும் படம் ரசிகர்களை திருப்தி படுத்தினால் சரி.
Posted by PYRAMID SAIMIRA at 9/28/2007 01:04:00 PM 1 comments
Labels: பில்லா
Tuesday, September 25, 2007
சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 4வது வாரம்)
வழக்கம் போல 20-20 கிரிக்கெட் உலக கோப்பையால் சென்றவாரமும் சென்னை திரையரங்குகளில் அவ்வளவு கூட்டமில்லை. உடம்பு எப்படியிருக்கு, நம்நாடு, சிவி ஆகிய படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வார டாப் டென் படங்கள்.
01. மருதமலை
ஆக்சன் கிங் அசத்துகிறார். வடிவேலு + அர்ஜூன் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ரிபீட் ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்கும் பொறுப்பை வடிவேலு பார்த்துக் கொள்கிறார்.
02. நம்நாடு
சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்பு வெளியாகிய படம் என்பதால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் கதையும் அரசியல் சம்பந்தமான கதை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
03. சத்தம் போடாதே!
மல்டிபிளக்ஸ் ரசிகர்களுக்கான படம். யுவன்ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு கூட்டத்தை கூட்டுகிறது. இனிய பாடல்கள்.
04. உடம்பு எப்படியிருக்கு?
படத்தின் டைட்டிலே படத்துக்கு நல்ல பலம். சுமாரான ஓபனிங். டப்பிங் படத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதே பெரிய விஷயம்.
05. சிவாஜி
14 வாரங்களை கடந்திருக்கிறார் சிவாஜி. இன்னமும் கூட வாரத்துக்கு மூன்று லட்சங்களை வசூலிப்பது ஆச்சரியம். சென்னையில் மட்டும் இதுவரை பதினொன்றரை கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கிறது.
06. அம்முவாகிய நான்
25 நாட்களை கடந்த நிலையில் தியேட்டர்களில் கூட்டத்தை கூட்ட அம்மு சிரமப்படுகிறாள். ஆயினும் நான்குவாரங்களில் சென்னையில் மட்டும் அரை கோடி வசூலை வசூலித்ததால் விநியோகம் செய்தவர்களுக்கு பிரச்சினை இல்லை.
07. சிவி
மிகக்குறைந்த தியேட்டர்களிலே மட்டும் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் ஆச்சரியகரமாக பாராட்டும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. சுமாரான ஓபனிங். சூடுபிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
08. திருத்தம்
தூத்துக்குடி போல இல்லை என்ற குறை ரசிகர்களுக்கு. A சென்டரில் சொல்லி கொள்ளும்படியான கூட்டமில்லை. B மற்றும் C சென்டர் ரசிகர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
09. பள்ளிக்கூடம்
ஆறுவாரங்களை கடந்திருந்த நிலையிலும் சொல்லிக்கொள்ளும்படியான கூட்டம் இத்திரைப்படத்துக்கு இருக்கிறது. பள்ளிக்கூடம் அதத வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு புன்னகையை வரவைத்திருக்கிறது.
10. இனிமே நாங்கதான்
குட்டீஸ்களுக்கு பள்ளி அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் ஓரளவுக்கு திரையரங்குகள் நிரம்புகிறது. தமிழில் இதுபோன்ற 3D அனிமேஷன் திரைப்படங்கள் வெளிவர ரசிகர்களின் ஆதரவு அவசியம். இளையராஜாவின் இசை இப்படத்துக்கு பெரும்பலம்.
Posted by PYRAMID SAIMIRA at 9/25/2007 11:51:00 AM 0 comments
Labels: டாப் 10
Monday, September 24, 2007
சரித்திரம் படைத்த சந்திரமுகி!
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகிய சூப்பர்ஸ்டாரின் சந்திரமுகி தமிழ் சினிமாவில் பல சாதனைகளுக்கு காரணமாகியது.
1944 தீபாவளிக்கு வெளியாகி 700 நாட்கள் ஓடி சாதனை படைத்த தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் சாதனையை முறியடித்த படம் சந்திரமுகி. 6 தியேட்டர்களில் 300 நாட்களை கடந்த ஒரே தமிழ் படமாக இதுதான் இருக்கும்.
சுமார் இரண்டரை ஆண்டுகள் சென்னை சாந்தி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி கடந்த வாரம் தன் ஓட்டத்தை முடித்து கொண்டிருக்கிறது. சாந்தி திரையரங்கில் மட்டும் 890 நாட்கள் சந்திரமுகி தொடர்ந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்திலும் கூட ஒரு தமிழ் திரைப்படம் சந்திரமுகியின் சாதனையை முறியடிக்குமா என்பது சந்தேகமே.
Posted by PYRAMID SAIMIRA at 9/24/2007 03:44:00 PM 0 comments
Labels: சந்திரமுகி
Wednesday, September 19, 2007
கமல் படத்தில் ரஜினி! சுவையான பின்னணி!
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பத்மஸ்ரீ கமல்ஹாசனும் விளங்குகிறார்கள். எப்போதுமே இவர்கள் நடிக்கும், பங்குபெறும் திரைப்படங்கள் பெரிதும் பேசப்படும். ரஜினிகாந்த் மாஸில் கலக்குகிறார் என்றால், கமல்ஹாசன் வித்தியாசத்தில் அசத்துவார்.
சிவாஜிக்கு பிறகு ரஜினியும், தசாவதாரத்துக்குப் பின்னர் கமலும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது பெரும் புதிராகவே இருந்தது. புதிருக்கு விடை சிவாஜியின் நூறாவது நாள் விழாவில் வெளிவரும் என்று தெரிகிறது.
கமல்ஹாசன் தயாரிக்க ரஜினி கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கதாநாயகியாக அசின் அல்லது த்ரிஷா நடிக்கலாம் என்கிறார்கள். இயக்குனர் மற்றும் மற்றைய தொழில்நுட்ப நிபுணர்கள் தேர்வு நடந்து வருகிறதாம். இப்படத்துக்கு இயக்குனராகும் வாய்ப்பு கே.எஸ். ரவிக்குமாருக்கா அல்லது சுரேஷ் கிருஷ்ணாவுக்கா? இல்லை கமலே இயக்கப் போகிறாரா என்பது தான் கோலிவுட்டின் அனல்பறக்கும் இப்போதைய டாக். இல்லை நாயகனில் கமலையும், தளபதியில் ரஜினியையும் அசத்தலாக இயக்கிய மணிரத்னம் தான் இயக்குனர் என்று ஒரு தரப்பில் அடித்துப் பேசுகிறார்கள்.
70களின் இறுதியில் வளரும் நடிகர்களாக இருந்த கமல், ரஜினி இருவரும் இணைந்து பல படங்கள் நடித்தனர். அவர்கள் இருவருக்கும் அப்போது கிடைத்த நட்சத்திர அந்தஸ்து காரணமாக அவர்கள் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ஆயினும் ரஜினியும், கமலும் ஒன்றாகப் பேசி இனி இணைந்து நடிப்பதில்லை. தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக நாமிருவரும் உயர்ந்தபின் ஒன்று சேரலாம் என்று முடிவெடுத்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது அவர்கள் இருவரும் இணைவதை பார்க்கும் போது அவர்கள் நினைத்த உயரத்தை அடைந்து விட்டார்கள் என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது.
Posted by PYRAMID SAIMIRA at 9/19/2007 11:43:00 AM 1 comments
Labels: ரஜினி
Tuesday, September 18, 2007
சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 3வது வாரம்)
சென்ற வார இறுதி சென்னை திரையரங்குகளுக்கு திருப்திகரமாக அமையவில்லை. கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பம், கிரிக்கெட் 20-20 உலக கோப்பை, விநாயகர் சதுர்த்தி என்று பல காரணிகளால் கூட்டம் அவ்வளவாக திரையரங்குகளை நாடவில்லை. இவ்வாரத்தில் 'சத்தம் போடாதே' மட்டும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டின் இந்த வார முதல் பத்து திரைப்படங்கள் (வசூல்ரீதியாக)
01. மருதமலை - ஒரு வாரத்தை தாண்டிய நிலையில் படம் நல்ல லாபத்தை வினியோகஸ்தர்களுக்கு தரும் என்று தெரிகிறது.
02. சத்தம் போடாதே - சென்ற வார இறுதியில் வெளியான இத்திரைப்படம் நல்ல தொடக்க வசூலை தந்திருக்கிறது.
03. அம்முவாகிய நான் - பார்த்திபனின் கண்ணியமான நடிப்பு, புதுமுகம் பாரதியின் ஆபாசமற்ற அழகு பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்திருக்கிறது.
04. சிவாஜி - 13 வாரங்களை கடந்தும் கலக்கிக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
05. சீனாதானா 001 - B மற்றும் C சென்டர் ரசிகர்கள் காப்பாற்றினால் தான் உண்டு. வடிவேலு தன்னந்தனியாக படத்தை காப்பாற்ற போராடுகிறார்.
06. திருத்தம் - தூத்துக்குடி வெற்றியை தொடர்ந்து ஹரிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது படம். பரவாயில்லை ரக தொடக்கம்.
07. பள்ளிக்கூடம் - பெண்கள் கூட்டம் அதிகம். ஐந்து வாரங்களை நிறைவு செய்த படம் வசூல் ரீதியாக சுமாருக்கும் கொஞ்சம் மேலே.
08. உற்சாகம் - சுமாரான வசூல். இருவாரங்களை மட்டுமே நிறைவு செய்திருக்கிறது.
09. இனிமே நாங்க தான் - இசைஞானி இசையில் வெளியாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளை கவரும்.
10. ஆர்யா - மாதவன், பிரகாஷ்ராஜ், பாவனா நடித்த இத்திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 5 வாரங்களை நிறைவு செய்திருக்கிறது.
DCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்
Posted by PYRAMID SAIMIRA at 9/18/2007 06:00:00 PM 0 comments
Labels: டாப் 10
கலைஞர் தொலைக்காட்சியில் ரேகா, ஐ.பி.எஸ்!
கலைஞர் தொலைக்காட்சியின் முதல் நாள் நிகழ்ச்சியாக பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் மொழி திரைப்படத்தை கண்டு ரசித்திருப்பீர்கள். தொலைக்காட்சி ரசிகர்களை பரவசப்படுத்தும் விதமாக ரேகா, ஐபிஎஸ் என்ற நெடுந்தொடரையும் கலைஞர் தொலைக்காட்சியில் வழங்கி வருகிறோம்.
சின்னத்திரை சூப்பர் ஸ்டார் விஜய் ஆதிராஜ் கதாநாயகனாகவும், அனுஹாசன் கதாநாயகியாகவும் பங்கேற்கிறார்கள். இனி உங்கள் இல்ல வரவேற்பறைக்கு திங்கள் முதல் வெள்ளிவரை எங்கள் ரேகா, ஐபிஎஸ் வருகை தர இருக்கிறார். காணத்தவறாதீர்கள்!!!
Posted by PYRAMID SAIMIRA at 9/18/2007 02:53:00 PM 6 comments
Labels: ரேகா ஐபிஎஸ்
Friday, September 14, 2007
லக்க.. லக்க... லக்ஷ்மி.. ரிப்பீட்டேய்!
Hai Guys & Girls,
நீ இங்கு சுகமே! நான் அங்கு சுகமா? நான் காதல்கோட்டை கமலி இல்லை! லகலக லக்ஷ்மி! கடலை போடற வெடலைப்பசங்களோட ஜாலியா பொழுத கழிக்கறதுக்கு கைவசம் ஒரு டெக்னிக் இருக்கு.
சினிமா சம்மந்தப்பட்ட புத்தகங்கள் படிச்சு அப்பப்ப விஷயங்கள அவுத்துவிடுவேன். உடனே பசங்களும் ,நீ லக லக லக்ஷ்மி இல்லை;ஜகஜால லக்ஷ்மின்னு சொல்லுவாங்க.கூடவே ஜொள்ளுதான்! கடலதான்! பொழுது படுஜாலிதான்! ஓவர் பில்டப் இல்ல! ஓ.கே! ஓ.கே! எந்த வியாபாரம் பண்ணினாலும் விளம்பரம் இல்லாம முடியாது.
விளம்பரம் இல்லாம வியாபரமே இல்லைங்கற நிலைமை உருவாயிடிச்சு. சுருக்கமா சொன்னா கல்யாணம் னாத்தான் பைத்தியம் தெளியும், பைத்தியம் தெளிஞ்சாத்தான் கல்யாணம். ரொம்ப கொழப்பறேனோ! நேர மாட்டருக்கு வரேன்.
-------------------------------------------------------------------------
1931 [22.10.1931]ல சுதேசமித்திரன் பத்திரிகையில வந்த விளம்பரம்.
கினிமா சென்ட்ரல்.
1931 ம் வருஷம் அக்டோபர் மாதம் 31ம் தேதி சனி முதல் தமிழ்,தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படக்காட்சியை கேளுங்கள்! மிஸ் டி.பி.ராஜலக்ஷ்மி நடிக்கும் காளிதாஸ் முழுதும் பேச்சு,பாடல்,நடனம் நிறைந்த காட்சி! இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது! உயர்ந்த கீர்த்தனங்கள்,தெளிவான பாடல்கள்,கொரத்தி நாட்டியங்கள்! பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்.
-------------------------------------------------------------------------
இப்ப 2007ல இருக்கோம். 75 வருஷத்தில விளம்பரத்துறை எவ்வளவு வளர்ச்சி அடைஞ்சிருக்குங்கறதை சமீபத்திய பிரமிட் சாய் மிரா நிறுவனத்தோட அம்முவாகிய நான் பட விளம்பரத்தப் பாருங்க!
இயக்கம் எனும் உளிகொண்டு செதுக்கி
அழகிய அம்மு எனும் சிதைந்த சிற்பத்தினை
றமையான சிற்பமாக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மாகன்.
__________________________________________________________________
அடடா!எங்க ஒருத்தரையும் காணோம்? ப்ளேட் தாங்காம ஓடிட்டீங்களா? எங்க ஓடுவீங்க?அடுத்த வெள்ளிக்கிழமை உங்க ஸ்வீட்டி லச்சுவ பாக்க வராமலா இருப்பீங்க!லைப்ன்னா ப்ளேட்,கத்தி,திருப்பாச்சி அருவாள் எல்லாம் இருக்கத் தான் செய்யும்! அதுக்காக நாம விடற ஜொள்ளை நிறுத்தவா போறோம்? பை ! ஸீ யு நெக்ஸ்ட் வீக்!
Posted by PYRAMID SAIMIRA at 9/14/2007 03:48:00 PM 0 comments
Wednesday, September 12, 2007
சினி சிப்ஸ் - 5
• சுந்தர்.சி 2008 கடைசி வரை பிஸியாம். கால்ஷீட் புல்லாயிடுச்சாம். பிரமிட் சாய்மிரா தயாரிப்புல வளர்ற ஆயுதம் செய்வோம் படமும் அதுல ஒண்ணு!
• குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையாம் சிம்ரனுக்கு. ஒரு மெகா க்யூல கதாநாயகிகள் நிக்கும் போது முப்பந்தஞ்சு லட்சம் கேட்டா யாரு குடுக்கப் போறாங்க? யாரும் கூப்பிடாட்டாலும் கவலையில்லையாம். எப்படி ஸீனு?
• திரைப் பிரபலங்களுக்கெல்லாம் காஸ்டியூம் டிசைனர்ஸ் அவங்க பெட்டர் ஹாப் தானாம்! விஜய்க்கு சங்கீதா, அஜீத்க்கு ஷாலினி லிஸ்ட்ல லேட்டஸ்ட் ஜோடி ஸ்ரீகாந்த் வந்தனா.
• மலபார் மங்கை அசின் தமிழ் கஷ்டமா இருந்தாலும் இஷ்டமா இருக்கு. அதனால கத்துகிட்டு டப்பிங் பேசினேன் அப்படீன்னு பறயுன்னு. கொசுறுக்கு கொசுறு. அதிகமான ட்ரஸ் கலெக்ஷன்ஸ் மலபார் கிட்டத்தான் இருக்காம்!
• சீரியல் ஆசை யாரைவிட்டுது. களத்துல கவுசல்யாவும் இறங்கியாச்சு. கவிதா ப்ரொடக்ஷ்ன்ஸ் [கவிதா தான் ஒரிஜினல் பெயர்] சார்பில முதல்ல சீரியல்.அப்புறம் சினிமா.
• ரோட்டு கடைகள்ல டீ குடிக்கறது யாரு?அட! நம்ம தேவா சார். ரோட்டோர கடை பிரியாணி யாருக்கு பிடிக்கும்? சினேகா அக்காவுக்குத் தான். 5 ஸ்டார் ஹோட்டல விட செம டேஸ்ட்டாம்!
• அம்முவாகிய நான் பாரதி ப்ரவுன் கலர் காண்டாக்ட் லென்ஸ் போட்டுகிட்டாங்களாம். ஏன்னா,அவங்க கண்கள் ரொம்ப அகலமாம்.
• கடைசியா கொசுறுக்கு கொசுறுக்கு கொசுறு. மலபார் ஹாலிவுட் போகப்போறாங்க. இந்தோ - ஜப்பான் படம்.
Posted by PYRAMID SAIMIRA at 9/12/2007 03:53:00 PM 0 comments
Labels: சினி சிப்ஸ்
சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 2வது வாரம்)
01. மருதமலை - ஆக்சன் கிங் மட்டுமல்ல கலெக்சன் கிங்கும் கூட என்று நிரூபித்திருக்கிறார் அர்ஜூன். பிரம்மாண்டமான ஓபனிங் கலெக்சன். பி மற்றும் சி சென்டர் தியேட்டர்களில் மருதமலை சக்கைப்போடு போடும் என்று தெரிகிறது. தலைநகரத்தின் வெற்றியை மருதமலையிலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுராஜ்.
02. அம்முவாகிய நான் - ஆர்ப்பாட்டமில்லாமல் வெளியாகிய அம்மு, பத்திரிகைகளின் ஆதரவோடு இரண்டாவது வாரத்தில் வசூலை வாரி குவிக்க தொடங்கியிருக்கிறது. நல்ல படம் என்று பார்த்தோர் பாராட்டுகிறார்கள்.
03. சிவாஜி - நீண்டநாட்களுக்கு பின் தமிழில் Block Buster Hit. நூறாவது நாளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையிலும் வார இறுதிகளில் அரங்கு நிறைகிறது.
04. சீனாதானா 001 - மலையாளத்தில் வெற்றி பெற்ற சிஐடி மூசாவை தழுவி எடுத்திருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான இத்திரைப்படம் ஓரளவு வசூலை தந்திருக்கிறது. வடிவேலு தன்னந்தனியாக படத்தை தூக்கிநிறுத்துகிறார்.
05. உற்சாகம் - ஒரு வாரத்தை கடந்த நிலையிலும் அரங்குகள் உற்சாகமாக இல்லை. படத்தின் இசை பெரிதாக பேசப்படுகிறது.
06. பள்ளிக்கூடம் - நல்ல படம் என்று பெயரெடுத்தாலும், மிக மெதுவாக காட்சிகள் நகருகிறது என்ற விமர்சனத்தையும் பள்ளிக்கூடம் சந்திக்கிறது. கடந்த வாரம் சுமாரான வசூல்.
07. ஆர்யா - கடந்த மாதம் நன்கு வசூலித்த ஆர்யா, புதுப்படங்களின் வருகையால் தடுமாற ஆரம்பித்திருக்கிறது. மாதவன், பிரகாஷ்ராஜ் தவிர்த்து படத்தில் எதுவும் சொல்லிகொள்ளும்படி இல்லை என்பது மக்கள் தீர்ப்பு.
08. தூவானம் - சென்ற வார இறுதியில் வெளியான தூவானம் முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. வசூல் சொல்லி கொள்ளும்படி இல்லை.
09. வீராப்பு - 6வது வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் வீராப்பு ஓரளவுக்கு திரையரங்குகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி.யை வணிகரீதியான கதாநாயகனாக அடையாளம் காட்டியிருக்கிறது.
10. கிரீடம் - 8வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிரீடம் சென்ற வார இறுதியில் சுமாரான வசூலையே தந்திருக்கிறது. நல்ல படம் என்று பலரால் பாராட்டப்பட்டாலும் கூட வணிகரீதியாக சுமார் தான்.
DCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்
Posted by PYRAMID SAIMIRA at 9/12/2007 10:52:00 AM 1 comments
Labels: டாப் 10
Saturday, September 8, 2007
மாதர் சங்கத்தினர் - ரா.பார்த்திபன், பாரதி, பத்மாமகன் கலந்துரையாடல்!
படத்தை பாராட்டிப் பேசும் சகோதரி
இச்சந்திப்பில் பேசிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தனலட்சுமி :
"தமிழ் படங்களில் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் சித்தரித்த திரைப்படங்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். கொடி பிடித்து, போஸ்டர் அடித்து, அவ்வளவு ஏன் தியேட்டர்களின் வாசலில் நின்று தக்காளி, முட்டையெல்லாம் கூட அடித்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறோம்.
'அம்முவாகிய நான்' படத்துக்கு எதிராகவும் அதுபோல போராட்டம் நடத்த வேண்டியிருக்குமோ என்று முன்பு நினைத்தேன். ஆனால் படம் பார்த்து முடித்தபின் என்னால் இருக்கையை விட்டு உடனே எழ முடியவில்லை. கண்களில் நாலு சொட்டு நீர் தேங்கியிருந்தது. நல்ல படம் தந்த இக்குழுவுக்கு எனது நன்றிகள்!"
ஆட்டோகிராப் போடும் ரா. பார்த்திபன்
நடிகர் ரா.பார்த்திபன் பேசியபோது,
"இத்திரைப்படத்தின் கதையை முதன்முதலாக இயக்குனர் என்னிடம் சொன்னபோது ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்தது. அம்முவை திருமணம் செய்துகொண்டு வரும் கெளரிசங்கர் முதலிரவில் "நீ தனியாக தூங்கப் போகிற முதல் ராத்திரி இதுதான்!" என்பான். என்னை சிந்திக்க வைத்த காட்சி அது. ஒரு பாலியல் சேவகரின் கல்லறையில் எழுதியிருந்ததாம் 'இங்குதான் இவள் தனியாக தூங்குகிறாள்' என்று. இக்காட்சியை காணும்போது அந்த கல்லறை தான் என் நினைவுக்கு வருகிறது.
படம் பார்த்தவர்கள் நிறைய பேர் படத்தின் முதல் பாதியில் அம்மு 'தாராளமாக' நடித்திருப்பதாக குறிப்பிட்டார்கள். அப்படிப்பட்டவர் இரண்டாம் பாதியில் கண்ணியமான மனைவியாக மாறும்போது, மாற்றத்தின் வித்தியாசத்தை படம் பார்ப்பவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே அதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. லட்சுமணன் ராமனாக மாறுவது மாற்றமல்ல. ராவணன் ராமனாக மாறுவதுதான் ஆச்சரியப்படுத்தும் மாற்றம்.
இப்படம் பார்த்த ஒரு பெண் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "சார் கெளரி மாதிரி ஒரு கணவன் கிடைப்பதாக இருந்தால் நான் வேசியாகவும் மாறத் தயார்னு" சொன்னாங்க. தவறு சகோதரி. ஒவ்வொரு அம்முவுக்கு ஒரு கெளரிசங்கர் நிச்சயம் கிடைப்பான்னு நெனைக்கிறது தவறு. அம்முவுக்கு கிடைத்த நல்வாழ்க்கையில் கெளரிசங்கர் வெறும் குறியீடு மட்டுமே. வாழ்க்கையைத் தொலைத்த பெண்களுக்கு தன்னம்பிக்கை பிறக்குமானால், அவர்கள் எல்லோருமே நல்வழியில் வாழ்க்கையை வென்று விருது பெறுவார்கள் என்பதே இப்படம் சொல்லவரும் கருத்து"
பாராட்டு மழையில் நனைந்த இயக்குனர் பத்மாமகன்
இறுதியில் பேசியவர் இயக்குனர் பத்மாமகன்.
"இப்படம் ஆரம்பிக்கும் போதே தெளிவாக இருந்தேன். படத்தின் எந்த காட்சியும் பெண்களை எந்த விதத்திலும் இழிவுபடுத்துவதாகவோ, பெண்ணுரிமைக்கு எதிரானதாகவோ இருந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். இப்போது உங்கள் பாராட்டுக்களை அவதானிக்கும் போது என்னுடைய நோக்கம் சரியாகவே இலக்கை எட்டியிருப்பது தெரிகிறது.
படம் பார்த்த ஒரு பெண் இறுதிக்காட்சியில் நாலு சொட்டு கண்ணீர் விட்டதாக சொன்னார். அவர் சொன்னவுடனேயே நெகிழ்ச்சியில் என் கண்களில் எட்டு சொட்டு கண்ணீர் வழிந்தது. இதை விட மிகச்சிறந்த விருது வேறு எதுவும் எனக்கு கிடைக்காது.
சில குறைகளையும் மகளிர் அமைப்புகள் தெரிவித்திருக்கிறார்கள். விருப்பத்தோடு அவற்றை திருத்திக் கொள்கிறோம். உங்களது பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள் இப்படத்தில் பணிபுரிந்த நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Posted by PYRAMID SAIMIRA at 9/08/2007 12:19:00 PM 0 comments
Labels: மாதர் சங்கம்
Friday, September 7, 2007
Thursday, September 6, 2007
சத்தம் போடாதே!
கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்த். 'ஆசை' பாணியில் வசந்தின் இயக்கத்தில் வரும் ரொமான்ஸ் கம் த்ரில்லர் "சத்தம் போடாதே!"யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ப்ருதிவிராஜ் கதாநாயகனாக நடிக்க, பத்மப்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் இத்திரைப்படத்தை வெளியிடுகிறது.
Posted by PYRAMID SAIMIRA at 9/06/2007 06:37:00 PM 0 comments
Labels: சத்தம் போடாதே
தமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! டாப் 5!!!
தற்போதைய நிலவரப்படி (செப்டம்பர் முதல் வாரம்) முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள தமிழ்ப் படங்களின் பட்டியல்:
1. சிவாஜி - தி பாஸ்
பாய்ஸ் தோல்வி, சராசரி அந்நியன் ஆகிய படங்களுக்குப் பிறகு ஷங்கருக்கு புது வாழ்க்கை கொடுத்த படம் சிவாஜி. ரஜினிக்கு இன்னும் ஒரு சிறப்புப் படம்.
2. ஆர்யா
பாலசேகரன் இயக்கத்தில் வெளியான இப்படம் திரையிட்ட இடம் எல்லாம் நல்ல ஓட்டமும், வசூலுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் 2வது இடத்தில் இருந்த கிரீடத்தை ஆர்யா பின்னுக்குத் தள்ளி விட்டது. மாதவன், பிரகாஷ் ராஜின் சிறப்பான நடிப்பு, வடிவேலின் காமெடி, பாவனாவின் வித்தியாச நடிப்பு ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
3. அம்முவாகிய நான்
கதையின் முக்கிய அம்சம் விபச்சாரம் என்ற போதிலும் கூட அதை அழகாக, ஆபாசம் கலக்காமல் கொடுத்த விதம், புதுமுகம் பாரதியின் இயல்பான நடிப்பு, பார்த்திபனின் அடக்கமான நடிப்பு, சிறந்த பாடல்கள், பத்மா மகனின் நேர்த்தியான இயக்கம் என பல வெற்றிக் காரணங்கள் இந்தப் படத்தை ஹிட் ஆக்கியுள்ளன.
4. வீராப்பு
பி மற்றும் சி சென்டர்களில் இப்படம் பெரும் ஹிட் ஆகியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களிலும் கூட கணிசமான வசூலை கண்டு வருகிறது. மாஸ் ஹீரோ கதைகளை இயக்கக் கூடிய தகுதி புதுமுக தகுதியை இயக்குநர் பத்ரிக்கு இப்படம் கொடுத்துள்ளது.
5. கிரீடம்
ஆரம்பத்தில் சரியாக போகாத கிரீடம், கிளைமேக்ஸ் காட்சியை மாற்றிய பின்னர் ஓடத் தொடங்கியது. ஏ சென்டர்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் ரசிகர்களைக் கொண்டு ஓடி வருகிறது. ஆனால் கிராமப்புற ரசிகர்களைக் கவரத் தவறி விட்டது.
இவற்றில் சிவாஜி - தி பாஸ், அம்முவாகிய நான், வீராப்பு திரைப்படங்களை பிரமிட் சாய்மீரா லிமிடெட் வினியோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News Source : Thatstamil
Posted by PYRAMID SAIMIRA at 9/06/2007 10:59:00 AM 2 comments
Labels: டாப் 5
Wednesday, September 5, 2007
பிரமிட் சாய்மீரா தயாரிக்கும் முதல் மலையாளப் படம்!
பிரமீட் சாய் மீரா தியேட்டர்ஸ் நிறுவனம் மலையாளத்தில் முதன் முதலாக தயாரிக்கப் போகும் படத்தில் சுரேஷ் கோபி நாயகனாக நடிக்கிறார். சிபிஐ ஃபிரம் டெல்லி என்று இப்படத்துக்குப் பெயர் வைத்துள்ளனர்.
பிரமீட் சாய்மீரா தியேட்டர்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பிலும் குதித்துள்ளது. முதலில் மலையாளத்தில் படங்கள் தயாரிக்க அது திட்டமிட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் முதல் மலையாளப் படத்தில் சுரேஷ் கோபி நாயகனாக நடிக்கிறார். சிபிஐ ஃபிரம் டெல்லி என பெயரிட்டுள்ளனர். மலையாளத்தில் மசாலாப் படங்கள் கொடுப்பதில் கில்லாடியான ஷாஜி கைலாஷ் இப்படத்தை இயக்குகிறார்.
ஷாஜி கைலாஷுக்கு இந்தப் படம் முக்கியமானதாகும். காரணம், இவரது முந்தையப் படமான டைம் மற்றும் சமீபத்தில் வெளியான மோகன்லாலின் அலி பாய் ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.
இதனால் இப்படத்தை பெரும் ஹிட் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஷாஜி.மலையாளத்தில் ஆண்டுக்குப் பத்து படங்களைத் தயாரிக்க சாய்மீரா திட்டமிட்டுள்ளது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்துப் படம் எடுக்கவுள்ளனர்.
ராம்கோபால் வர்மாவின் ஆக் படத்தை கேரளாவில் திரையிடும் உரிமையை சாய்மீராதான் வாங்கியுள்ளது. மோகன்லாலின் பர்தேசி படத்தையும் இந்த நிறுவனமே வாங்கி விநியோகிக்கவுள்ளது.
Courtesy : Thatstamil
Posted by PYRAMID SAIMIRA at 9/05/2007 04:12:00 PM 1 comments
Tuesday, September 4, 2007
லேட்டஸ்ட் சினி சிப்ஸ்!!
கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் தசாவதாரம் திரைப்படத்துக்கு அடுத்து, பருத்தி வீரன் கார்த்திக்கை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் கே.எஸ். ரவிக்குமார். இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்படப் போகிறது என்பது கூடுதல் தகவல்.
* * *கஜினி இயக்குனர் முருகதாஸ் காட்டில் நல்ல மழை. கஜினியின் இந்தி ரீமேக்குக்காக அமீர்கானை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததுமே சிரஞ்சீவியின் மகன் சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்றினை இயக்க அதே தயாரிப்பாளருக்கு ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. சிரஞ்சீவியின் மகன் நடிக்கப் போகும் மூன்றாவது திரைப்படம் இது. முதல் படமான சிறுத்தா வரும் அக்டோபர் 2007ல் வெளிவருகிறது.
இதற்கிடையே முருகதாஸ் சூர்யாவை இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் கோலிவுட்டில் சூடாக பரவிக் கொண்டிருக்கிறது.
Posted by PYRAMID SAIMIRA at 9/04/2007 03:51:00 PM 1 comments
Monday, September 3, 2007
இந்தியிலும் பொம்மரிலு! தேவுடாக நாகார்ஜூனா!!

பிரகாஷ்ராஜ், சித்தார்த் நடித்து தெலுங்கில் மெகாஹிட்டான பொம்மரிலு தமிழிலும் ஜெயம் ரவியை வைத்து எடுக்கப்படுவது தெரிந்ததே. தமிழை தொடர்ந்து இந்தியிலும் பொம்மரிலு படத்தை நடிகை ஜெயசுதா தயாரிக்க போவதாக செய்திகள் வெளிவருகிறது.
இதற்காக அவர் பச்சன்-களை அணுகியிருக்கிறாராம். பிரகாஷ்ராஜ் வேடத்தில் அமிதாப்பும், சித்தார்த் வேடத்தில் ஜூனியர் அமிதாப்பும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயசுதா தெலுங்கில் ஏற்ற அதே வேடத்தை இந்தியிலும் ஏற்பாராம். தாசரி நாராயணராவுடன் இணைந்து ஜெயசுதா இப்படத்தை தயாரிக்கப் போகிறார் என்கிறார்கள்.
* * *
தேவுடாக நாகார்ஜூனா!

சிலகாலமாக ஹாலிவுட் படங்களை இந்திய மொழிகளில் டப் செய்து வெளிட்டது போக இப்போது ரீமேக் செய்யவும் தொடங்கியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் செம ஹிட்டான படம் ப்ரூஸ் அல்மைட்டி. கடவுளும் ஒரு கதாபாத்திரமாக கதையில் அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் சிறப்பு.
தெலுங்கில் ப்ரூஸ் அல்மைட்டி ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது. நாகார்ஜூனா கடவுளாக, கதாநாயகனாக நடிக்கப் போகிறார். விஷ்ணுவாக தோன்றப்போகும் நாகார்ஜூனாவின் கதாபாத்திரம் நகைச்சுவையால் ரசிகர்களின் வயிற்றைப் புண்ணாக்கும் என்று தெரிகிறது. மாடர்ன் கடவுளாக தோன்றப்போகும் நாகார்ஜூனா "CEO, UNIVERSE" என்ற பட்டத்துடன் விரைவில் திரையரங்கை முற்றுகையிடப் போகிறாராம்.
Posted by PYRAMID SAIMIRA at 9/03/2007 12:53:00 PM 0 comments
Labels: நாகார்ஜூனா, பொம்மரிலு