Tuesday, September 18, 2007

கலைஞர் தொலைக்காட்சியில் ரேகா, ஐ.பி.எஸ்!

கலைஞர் தொலைக்காட்சியின் முதல் நாள் நிகழ்ச்சியாக பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தின் மொழி திரைப்படத்தை கண்டு ரசித்திருப்பீர்கள். தொலைக்காட்சி ரசிகர்களை பரவசப்படுத்தும் விதமாக ரேகா, ஐபிஎஸ் என்ற நெடுந்தொடரையும் கலைஞர் தொலைக்காட்சியில் வழங்கி வருகிறோம்.

சின்னத்திரை சூப்பர் ஸ்டார் விஜய் ஆதிராஜ் கதாநாயகனாகவும், அனுஹாசன் கதாநாயகியாகவும் பங்கேற்கிறார்கள். இனி உங்கள் இல்ல வரவேற்பறைக்கு திங்கள் முதல் வெள்ளிவரை எங்கள் ரேகா, ஐபிஎஸ் வருகை தர இருக்கிறார். காணத்தவறாதீர்கள்!!!

6 comments:

  1. உண்மைத்தமிழன் said...

    சிறந்த நடிகர்கள், சிறந்த இயக்குநர், சிறந்த கதாசிரியர், சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள்களைக் கொண்டு துவங்கியிருக்கும் இத்தொடர் பெரும் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்..

  2. யாழ் Yazh said...

    romba mukkiam...

  3. Anonymous said...

    நான் நேற்று இந்த தொடரை பார்த்தேன் நாடகம் போல் அல்லாமல் சினிமா பார்ப்பது போன்ற அனுபவத்தை கொடுத்தது. ஆனால் அனு சாருஹாசனுக்கு சன்டைக்காட்சிகளை கொஞ்சம் தத்ரூபமாக அமைக்கவும். ஒரு பென் 10 புத்தை அடிப்பதெல்லாம் சுத்த ஹம்பக். ரிவால்வர் போன்ற ஆயுதங்களை கொண்டு சண'டைக்காட்சிகளை அமக்கலாம்.

    வாழத்துக்கள். அனுஹாசனுக்கும் எனது வாழத்துக்கள். நல்ல நடிகை வழர வாழ்த்துக்கள்.

    முகவைத்தமிழன்
    சவுதி அரேபியா

  4. MeenaArun said...

    // ஒரு பென் 10 புத்தை அடிப்பதெல்லாம் சுத்த ஹம்பக்.//
    ஏன் ஒரு பெண் அடிக்ககூடாதா.பெண்களில் கராத்தெ வல்லுனர் பலர் உள்ளனர்.

    உங்களுக்கு ஒரு தகவல் தெரியுமா? அனுஹாசன் ஒரு நல்ல களரி வித்தகி.

  5. லெனின் பொன்னுசாமி said...

    விஜய் ஆதிராஜுக்கு ஒட்டு மீசை போல இருக்கே..

  6. தருமி said...

    இரண்டு மூன்று நாளிலேயே 'பழைய கள்' வாடை ... கல்யாணமாகாத பொண்ணுக்கு குழந்தை..இனிமே ஒரு அரதப் பழசான flash back... mm..

    யாராவது small wonder/ friends மாதிரி நல்ல தொடர் எடுக்கவே மாட்டீங்களா? கொஞ்சம் காதலை விட்டு வெளியே வாங்களேன் :(

    சான்ஸே இல்லை ..