Thursday, September 6, 2007

தமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! டாப் 5!!!

தற்போதைய நிலவரப்படி (செப்டம்பர் முதல் வாரம்) முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள தமிழ்ப் படங்களின் பட்டியல்:


1. சிவாஜி - தி பாஸ்

பாய்ஸ் தோல்வி, சராசரி அந்நியன் ஆகிய படங்களுக்குப் பிறகு ஷங்கருக்கு புது வாழ்க்கை கொடுத்த படம் சிவாஜி. ரஜினிக்கு இன்னும் ஒரு சிறப்புப் படம்.


2. ஆர்யா

பாலசேகரன் இயக்கத்தில் வெளியான இப்படம் திரையிட்ட இடம் எல்லாம் நல்ல ஓட்டமும், வசூலுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் 2வது இடத்தில் இருந்த கிரீடத்தை ஆர்யா பின்னுக்குத் தள்ளி விட்டது. மாதவன், பிரகாஷ் ராஜின் சிறப்பான நடிப்பு, வடிவேலின் காமெடி, பாவனாவின் வித்தியாச நடிப்பு ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.


3. அம்முவாகிய நான்

கதையின் முக்கிய அம்சம் விபச்சாரம் என்ற போதிலும் கூட அதை அழகாக, ஆபாசம் கலக்காமல் கொடுத்த விதம், புதுமுகம் பாரதியின் இயல்பான நடிப்பு, பார்த்திபனின் அடக்கமான நடிப்பு, சிறந்த பாடல்கள், பத்மா மகனின் நேர்த்தியான இயக்கம் என பல வெற்றிக் காரணங்கள் இந்தப் படத்தை ஹிட் ஆக்கியுள்ளன.


4. வீராப்பு

பி மற்றும் சி சென்டர்களில் இப்படம் பெரும் ஹிட் ஆகியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களிலும் கூட கணிசமான வசூலை கண்டு வருகிறது. மாஸ் ஹீரோ கதைகளை இயக்கக் கூடிய தகுதி புதுமுக தகுதியை இயக்குநர் பத்ரிக்கு இப்படம் கொடுத்துள்ளது.


5. கிரீடம்

ஆரம்பத்தில் சரியாக போகாத கிரீடம், கிளைமேக்ஸ் காட்சியை மாற்றிய பின்னர் ஓடத் தொடங்கியது. ஏ சென்டர்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் ரசிகர்களைக் கொண்டு ஓடி வருகிறது. ஆனால் கிராமப்புற ரசிகர்களைக் கவரத் தவறி விட்டது.

இவற்றில் சிவாஜி - தி பாஸ், அம்முவாகிய நான், வீராப்பு திரைப்படங்களை பிரமிட் சாய்மீரா லிமிடெட் வினியோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News Source : Thatstamil

2 comments:

  1. Anonymous said...

    // முதலில் 2வது இடத்தில் இருந்த கிரீடத்தை ஆர்யா பின்னுக்குத் தள்ளி விட்டது //

    anne,

    thatstamil um neengalum partners ah annae

    potti pottu POI sollureenga :(

  2. said...

    //potti pottu POI sollureenga :(//

    அதானே ... எல்லாப்படமும் காத்தாட ஓடுது , அதிலும் வீராப்பு , கிரிடம் எல்லாம் தியேட்டர் விட்டே ஓடிப்போச்சு அப்பறம் எந்த பாக்ஸ்ல ஹிட் ஆச்சோ!