Wednesday, September 5, 2007

பிரமிட் சாய்மீரா தயாரிக்கும் முதல் மலையாளப் படம்!

பிரமீட் சாய் மீரா தியேட்டர்ஸ் நிறுவனம் மலையாளத்தில் முதன் முதலாக தயாரிக்கப் போகும் படத்தில் சுரேஷ் கோபி நாயகனாக நடிக்கிறார். சிபிஐ ஃபிரம் டெல்லி என்று இப்படத்துக்குப் பெயர் வைத்துள்ளனர்.

பிரமீட் சாய்மீரா தியேட்டர்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பிலும் குதித்துள்ளது. முதலில் மலையாளத்தில் படங்கள் தயாரிக்க அது திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் முதல் மலையாளப் படத்தில் சுரேஷ் கோபி நாயகனாக நடிக்கிறார். சிபிஐ ஃபிரம் டெல்லி என பெயரிட்டுள்ளனர். மலையாளத்தில் மசாலாப் படங்கள் கொடுப்பதில் கில்லாடியான ஷாஜி கைலாஷ் இப்படத்தை இயக்குகிறார்.

ஷாஜி கைலாஷுக்கு இந்தப் படம் முக்கியமானதாகும். காரணம், இவரது முந்தையப் படமான டைம் மற்றும் சமீபத்தில் வெளியான மோகன்லாலின் அலி பாய் ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

இதனால் இப்படத்தை பெரும் ஹிட் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஷாஜி.

மலையாளத்தில் ஆண்டுக்குப் பத்து படங்களைத் தயாரிக்க சாய்மீரா திட்டமிட்டுள்ளது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்துப் படம் எடுக்கவுள்ளனர்.

ராம்கோபால் வர்மாவின் ஆக் படத்தை கேரளாவில் திரையிடும் உரிமையை சாய்மீராதான் வாங்கியுள்ளது. மோகன்லாலின் பர்தேசி படத்தையும் இந்த நிறுவனமே வாங்கி விநியோகிக்கவுள்ளது.

Courtesy : Thatstamil

1 comments:

  1. Anonymous said...

    amitabh bachan still is too good