Wednesday, September 12, 2007

சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 2வது வாரம்)

01. மருதமலை - ஆக்சன் கிங் மட்டுமல்ல கலெக்சன் கிங்கும் கூட என்று நிரூபித்திருக்கிறார் அர்ஜூன். பிரம்மாண்டமான ஓபனிங் கலெக்சன். பி மற்றும் சி சென்டர் தியேட்டர்களில் மருதமலை சக்கைப்போடு போடும் என்று தெரிகிறது. தலைநகரத்தின் வெற்றியை மருதமலையிலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுராஜ்.

02. அம்முவாகிய நான் - ஆர்ப்பாட்டமில்லாமல் வெளியாகிய அம்மு, பத்திரிகைகளின் ஆதரவோடு இரண்டாவது வாரத்தில் வசூலை வாரி குவிக்க தொடங்கியிருக்கிறது. நல்ல படம் என்று பார்த்தோர் பாராட்டுகிறார்கள்.

03. சிவாஜி - நீண்டநாட்களுக்கு பின் தமிழில் Block Buster Hit. நூறாவது நாளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையிலும் வார இறுதிகளில் அரங்கு நிறைகிறது.

04. சீனாதானா 001 - மலையாளத்தில் வெற்றி பெற்ற சிஐடி மூசாவை தழுவி எடுத்திருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான இத்திரைப்படம் ஓரளவு வசூலை தந்திருக்கிறது. வடிவேலு தன்னந்தனியாக படத்தை தூக்கிநிறுத்துகிறார்.

05. உற்சாகம் - ஒரு வாரத்தை கடந்த நிலையிலும் அரங்குகள் உற்சாகமாக இல்லை. படத்தின் இசை பெரிதாக பேசப்படுகிறது.

06. பள்ளிக்கூடம் - நல்ல படம் என்று பெயரெடுத்தாலும், மிக மெதுவாக காட்சிகள் நகருகிறது என்ற விமர்சனத்தையும் பள்ளிக்கூடம் சந்திக்கிறது. கடந்த வாரம் சுமாரான வசூல்.

07. ஆர்யா - கடந்த மாதம் நன்கு வசூலித்த ஆர்யா, புதுப்படங்களின் வருகையால் தடுமாற ஆரம்பித்திருக்கிறது. மாதவன், பிரகாஷ்ராஜ் தவிர்த்து படத்தில் எதுவும் சொல்லிகொள்ளும்படி இல்லை என்பது மக்கள் தீர்ப்பு.

08. தூவானம் - சென்ற வார இறுதியில் வெளியான தூவானம் முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. வசூல் சொல்லி கொள்ளும்படி இல்லை.

09. வீராப்பு - 6வது வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் வீராப்பு ஓரளவுக்கு திரையரங்குகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி.யை வணிகரீதியான கதாநாயகனாக அடையாளம் காட்டியிருக்கிறது.

10. கிரீடம் - 8வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிரீடம் சென்ற வார இறுதியில் சுமாரான வசூலையே தந்திருக்கிறது. நல்ல படம் என்று பலரால் பாராட்டப்பட்டாலும் கூட வணிகரீதியாக சுமார் தான்.

DCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்

1 comments:

  1. Anonymous said...

    //நூறாவது நாளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையிலும் வார இறுதிகளில் அரங்கு நிறைகிறது.//

    adhuridhille :-)))))