Friday, May 2, 2008

பாண்டி! - கவர்ச்சிப் போட்டியில் ஸ்னேகா, நமீதா!!

நடன இயக்குனர்கள் நடிகர்களாகிய பின்னர் இயக்குனர்களாக மாறுவது வழக்கம் தான். மாறாக ராகவா லாரன்ஸ் இயக்குனராக வெற்றி பெற்று பின்னர் நடிகர் ஆனவர். அற்புதம், முனி படங்களுக்கு பிறகு லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் படம் பாண்டி. ஸ்னேகா, நமீதா என்று முன்னணி நாயகிகளோடு இரட்டை சவாரி செய்யப்போகிறாராம் இந்தப் படத்தில். மதுரவன் இயக்கும் இப்படத்தில் நாசர், சரண்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

நான் அவனில்லை, அஞ்சாதே வெற்றிப்படங்கள் தந்த ஹிதேஷ் ஜபக் தயாரிக்கிறார். ஆக்‌ஷன், காமெடி, காதல், கவர்ச்சி, செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த மசலா கலவையாம் பாண்டி. ஸ்ரீகாந்தே தேவா இசையமைக்கும் இத்திரைப்படத்தில் தர்மதுரை படத்தில் இடம்பெற்று ஹிட்டான “மாசிமாசம் ஆளான பொண்ணு” பாட்டு ரீமிக்ஸ் செய்யப்பட்டிருப்பது ஸ்பெஷல் என்கிறார்கள்.









0 comments: