Wednesday, October 31, 2007
Tuesday, October 30, 2007
மலையாளத்தில் ஹேராம், மகாநதி! - கமல் க்ரீடத்தில் இன்னொரு வைரம்!
தமிழர்களை அழவைத்த, சிலிர்க்கவைத்த, பிரமிக்க வைத்த கமல்ஹாசனின் ஹேராம் மற்றும் மகாநதி திரைப்படங்கள் மலையாளக் கரையோரத்துக்கு சென்றிருக்கிறது, திரைப்படமாக அல்ல திரைக்கதை புத்தகமாக.
உலக புத்தகக் கண்காட்சி அக்.28 அன்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தொடக்கவிழாவில் "கமஹாசண்டே ரெண்டு திரைக்கதாக்கள்" என்ற பெயரில் மகாநதி, ஹேராம் திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்கள் விஸ்வநாதன் மற்றும் டி.பத்மநாபன் வெளியிட்டு கமலை வாழ்த்திப் பேசினார்கள்.
தமிழ் திரைக்கதை நூலாக மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படுவது இதுவே முதன்முறை. DC புத்தகம் நிறுவனத்தார் இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தசாவதாரம் திரைக்கதையையும் மலையாளத்தில் வெளியிடுவோம் என்று அந்த பதிப்பகத்தார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
விழாவில் கமல் பேசும்போது தன்னுடைய வயதான காலத்தை கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கையோடு ஒன்றிய அழகிய வீடு ஒன்றினில் கழிக்க விரும்புவதாக தெரிவித்தார். கமல் ஓய்வெடுக்க நினைத்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ஓய்வெடுக்க விடுவார்களா?
Posted by PYRAMID SAIMIRA at 10/30/2007 07:06:00 PM 0 comments
நமீதா! - குளோஸ் அப் ஷாட்!
மும்பையில் பிறந்து வளர்ந்த கவர்ச்சி சுனாமி நமீதாவின் பிறந்தநாள் மே 10 (வயது 24?). நமீதாவின் தந்தை பிரபல தொழிலதிபர். நமீதா பூர்விகத்தில் மலையாளி என்பது நிறைய பேருக்கு தெரியாது. குஜராத்தில் வளர்ந்தவர் அவர். தமிழில் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சித்திக்கால் தென்னிந்தியாவில் பிரபலமானார். தமிழிலும் எங்கள் அண்ணா திரைப்படம் மூலமாக சித்திக்கே அவரை அறிமுகப்படுத்தினார்.2001 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டபோது நமீதாவின் உயரம் 5'8", வயது 18, :-) 32:24:5:35, எடை : 55 கிலோ. அந்தப் போட்டியில் அதிகபுள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருந்தபோதிலும், இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.
மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்றதன் விளைவாக தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழைந்தார். அவர் நடித்த சொந்தம், ஜெமினி திரைப்படங்கள் வணிகரீதியிலாக பெரிய வெற்றி பெறாதபோதிலும் வசீகரிக்கவைக்கும் அவரது தோற்றத்தால் தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார். "ஏய்" படத்தின் "அர்ஜூனா, அர்ஜூனா" பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்தார். கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
நமீதாவுக்கு பிடித்த வண்ணங்கள் கறுப்பு வெள்ளை. நமீதாவை காதலிக்க விரும்புபவர்கள் ஒரு வெள்ளை ரோஜாவுடன் Propose செய்யலாம். வெள்ளை ரோஜா என்றால் அவருக்கு உயிர். ஓய்வு நேரங்களில் நீந்துவதும், பேட்மிண்டன் ஆடுவதும் அவரது பொழுதுபோக்கு. குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் நமீதா. சிட்னி ஷெல்டன் நாவல்களை வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்ட நமீதாவுக்கு ரொம்ப பிடித்தது படங்களோடு வரும் காமிக்ஸ் புத்தகங்கள். நந்திதா தாஸ், தபு போன்றவர்களின் நடிப்பை ரொம்பவும் ரசிப்பார். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அன்பு செலுத்துவதில் அவர் இன்னொரு மேனகா காந்தி.
தீபாவளிக்கு திரைக்கு வரும் அழகிய தமிழ்மகன் நமீதாவின் திரையுலக வாழ்வில் அவருக்கு முக்கியமான ஒரு இடத்தை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
Posted by PYRAMID SAIMIRA at 10/30/2007 10:49:00 AM 7 comments
Monday, October 29, 2007
பொல்லாதவள் திவ்யா!
சிம்பு நடித்த குத்து படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரம்யா. அதன் பின்னர் கிரி படத்திலும் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ரசிகர்களால் 'குத்து ரம்யா' என்று அழைக்கப்பட்ட இவர் அதன் பின்னர் கன்னடத்தில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியானார். முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா இவருக்கு உறவுமுறையில் தாத்தா.
மீண்டும் தமிழுக்கு சரத்குமாரின் காக்கி படம் மூலமாக நடிக்க வந்தவர் தன் பெயரை திவ்யா என்று மாற்றிக் கொண்டார். இனிமேல் தன்னை 'குத்து ரம்யா' என்று அழைக்கவேண்டாம் என்றும் ரசிகர்களை கேட்டு கொண்டார். காக்கி படம் வளராமல் போன நிலையில் தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் நடித்தார். படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தில் அதிரடி கவர்ச்சியில் ரசிகர்களின் இதயங்களை திருடுவார் என்பது படத்தின் ஸ்டில்களை பார்த்தால் தெரிகிறது. இப்படத்துக்கு பிறகு தமிழில் முன்னணி நாயகியாக வலம் வருவேன் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் திவ்யா.
இதற்கிடையில் மைக்ராசாப்ட் நிறுவனம் பில்கேட்ஸின் எய்ட்ஸ் விழிப்புணர்வு அறக்கட்டளை எடுக்கும் படம் ஒன்றில் பாலியல் தொழிலாளியாகவும் திவ்யா நடித்திருக்கிறாரார். சமூகநல நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் இந்தியாவின் பல்வேறு மண்டலமொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.
Posted by PYRAMID SAIMIRA at 10/29/2007 11:42:00 AM 1 comments
Saturday, October 27, 2007
யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல்!
"ராம்" திரைப்படத்திலிருந்து நடிகர் ஜீவாவின் திரையுலக வரைபடம் வித்தியாசமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. "ஈ"யில் சென்னை சேரி இளைஞனாகவும், கற்றது தமிழ் படத்தில் தமிழ் கிறுக்கனாகவும் பாத்திரத்தோடு ஒன்றி நடித்தவர் "ராமேஸ்வரம்" படத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழராக நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயர் சிவானந்த ராசா. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழரின் வாழ்க்கையை இதுவரை எந்த படமும் சரியாக பிரதிபலித்ததில்லை.
அந்த குறையை ராமேஸ்வரம் போக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பாவனா கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய செல்வம் இயக்குகிறார். ராமேஸ்வரத்தை அடுத்து சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் "யாழ்ப்பாணம்" திரைப்படமும் ஈழத்தமிழரை கதாபாத்திரங்கள் ஆக்கி வளர்ந்து வரும் திரைப்படம். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை ஈர்க்கும் விதமாக தமிழ் திரைப்படங்கள் அவர்களையே கதாபாத்திரங்கள் ஆக்கி வெளிவர தொடங்கியிருக்கிறது.
Posted by PYRAMID SAIMIRA at 10/27/2007 04:44:00 PM 1 comments
Friday, October 26, 2007
கெட்டவன் சிம்பு!
கெட்டவன் படம் ஆரம்பிக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கலக்கல் ஸ்டில்களை பார்த்து இண்டஸ்ட்ரியே அதிர்ந்தது. தனுஷின் பொல்லாதவனுக்கு சரியான போட்டி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்துக்கு நெகடிவ்வாக பெயர் வைத்து ஆரம்பித்ததாலோ என்னவோ தெரியவில்லை, தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் கெட்டவன்.
படத்தின் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் கவுன்சில் விளக்கம் கேட்டது. கதையை விளக்கி அத்தலைப்பை மாற்ற இயலாது என்று வாதாடினார் சிம்பு.
படத்தின் தயாரிப்பாளரே மாற்றப்பட்டார்.
படத்தின் கதாநாயகியும் மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
இப்போது படத்தின் இயக்குநரும் மாற்றப்படுகிறார். சிம்புவே இயக்குவார் என்று தகவல். கதையும் மாறுகிறதாம்.
சிம்பு தற்போது நடித்துவரும் தருண்கோபி இயக்கும் காளை படத்தை முடித்ததும், பிரபல ஒளிப்பதிவாளர் சரவணின் இயக்கத்தின் சிலம்பாட்டம் என்ற படத்தில் நடிக்கிறார். சிலம்பாட்டம் முடிந்ததுமே மீண்டும் கெட்டவனாக மாறுவார் என்று தெரிகிறது.
இன்னமும் மாறாதது சிம்புவும், கெட்டவன் என்ற டைட்டிலும் மட்டுமே.
Posted by PYRAMID SAIMIRA at 10/26/2007 12:53:00 PM 2 comments