Saturday, October 6, 2007

ஓம் சாந்தி ஓம்! - ஜாலி ஸ்டில்ஸ்!


தீபாவளி என்றாலே கொண்டாட்டம். தீபாவளிக்கு விஜய் படம் என்றால் இரட்டை கொண்டாட்டம். ஷாருக்கானின் படமும் வெளியாக போகிறதென்றால் பலமடங்கு கொண்டாட்டம் தானே? இந்த தீபாவளிக்கு ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படம் வெளியாகிறது.

ஷாருக் நடித்த 'மே ஹூ நா' என்ற கலகலப்பான வெற்றிப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் பராகான். இந்தியாவின் மிகச்சிறந்த நடன இயக்குனர்களில் இவரும் ஒருவர். விஷால்-சேகர் இரட்டையர் இசையில் வெளிவரும் இப்படத்துக்கு இரண்டாயிரம் பிரிண்டுகள் போடப்படுமாம். இப்படம் மறுபிறப்பு பற்றிய வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள். தமிழில் இதைப்போன்ற கதையமைப்பு சிவாஜிகணேசன் "பிராப்தம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் அமிதாப், அபிஷேக், மிதுன்சக்கரவர்த்தி, தர்மேந்திரா, சஞ்சய்தத், சல்மான், ஹ்ரித்திக், அக்ஷய், ஸ்ரீதேவி, கஜோக், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட ஒரே பாடலில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் தோன்றுகிறார்கள். படத்துக்காக தன் உடலை ப்ரூஸ்லீ பாணியில் மாற்றியிருக்கிறார் ஷாருக். தீபிகாபடுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். தமிழகமெங்கும் இத்திரைப்படத்தத பிரமிட் சாய்மிரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தார் வெளியிடுகிறார்கள்.

1 comments:

  1. Anonymous said...

    “தீபாவளி என்றாலே கொண்டாட்டம். தீபாவளிக்கு விஜய் படம் என்றால் இரட்டை கொண்டாட்டம். ஷாருக்கானின் படமும் வெளியாக போகிறதென்றால் பலமடங்கு கொண்டாட்டம் தானே? இந்த தீபாவளிக்கு ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படம் வெளியாகிறது.”
    தமிழகமெங்கும் இத்திரைப்படத்தத பிரமிட் சாய்மிரா தியேட்டர் லிமிடெட் நிறுவனத்தார் வெளியிடுகிறார்கள்

    பிரமிட் சாய்மீரா
    உங்க "ஓம் சாந்தி ஓம்" படத்தோட பில்டப்ப பார்ததா சிரிப்பு தான் வருது
    இங்க கமல், ரஜினி, விஜய், அஜித் படம் ஒடூறதே பெரும் கஷ்டமா இருக்கு இதுல ஷாருக்கான் வேற!!