Tuesday, October 30, 2007

மலையாளத்தில் ஹேராம், மகாநதி! - கமல் க்ரீடத்தில் இன்னொரு வைரம்!


தமிழர்களை அழவைத்த, சிலிர்க்கவைத்த, பிரமிக்க வைத்த கமல்ஹாசனின் ஹேராம் மற்றும் மகாநதி திரைப்படங்கள் மலையாளக் கரையோரத்துக்கு சென்றிருக்கிறது, திரைப்படமாக அல்ல திரைக்கதை புத்தகமாக.

உலக புத்தகக் கண்காட்சி அக்.28 அன்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தொடக்கவிழாவில் "கமஹாசண்டே ரெண்டு திரைக்கதாக்கள்" என்ற பெயரில் மகாநதி, ஹேராம் திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்கள் விஸ்வநாதன் மற்றும் டி.பத்மநாபன் வெளியிட்டு கமலை வாழ்த்திப் பேசினார்கள்.

தமிழ் திரைக்கதை நூலாக மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படுவது இதுவே முதன்முறை. DC புத்தகம் நிறுவனத்தார் இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தசாவதாரம் திரைக்கதையையும் மலையாளத்தில் வெளியிடுவோம் என்று அந்த பதிப்பகத்தார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

விழாவில் கமல் பேசும்போது தன்னுடைய வயதான காலத்தை கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கையோடு ஒன்றிய அழகிய வீடு ஒன்றினில் கழிக்க விரும்புவதாக தெரிவித்தார். கமல் ஓய்வெடுக்க நினைத்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ஓய்வெடுக்க விடுவார்களா?

0 comments: