Saturday, October 27, 2007

யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல்!

"ராம்" திரைப்படத்திலிருந்து நடிகர் ஜீவாவின் திரையுலக வரைபடம் வித்தியாசமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. "ஈ"யில் சென்னை சேரி இளைஞனாகவும், கற்றது தமிழ் படத்தில் தமிழ் கிறுக்கனாகவும் பாத்திரத்தோடு ஒன்றி நடித்தவர் "ராமேஸ்வரம்" படத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழராக நடிக்கிறார். கதாபாத்திரத்தின் பெயர் சிவானந்த ராசா. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழரின் வாழ்க்கையை இதுவரை எந்த படமும் சரியாக பிரதிபலித்ததில்லை.

அந்த குறையை ராமேஸ்வரம் போக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பாவனா கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய செல்வம் இயக்குகிறார். ராமேஸ்வரத்தை அடுத்து சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் "யாழ்ப்பாணம்" திரைப்படமும் ஈழத்தமிழரை கதாபாத்திரங்கள் ஆக்கி வளர்ந்து வரும் திரைப்படம். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களை ஈர்க்கும் விதமாக தமிழ் திரைப்படங்கள் அவர்களையே கதாபாத்திரங்கள் ஆக்கி வெளிவர தொடங்கியிருக்கிறது.












1 comments:

  1. said...

    தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களிலும் ஈழத்தவர் கதாபாத்திரம் உண்டு.