Friday, October 19, 2007

அழகிய தமிழ் மகன் - எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்

இரட்டைவெடியா அழகிய தமிழ்மகன்?
எல்லோருக்கும் முன்பாக தீபாவளி ரேஸில் முந்திக்கொண்டு தயாராக நிற்கிறார் அழகிய தமிழ்மகன் விஜய். போக்கிரி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் அதை முறியடிக்கும் வகையிலான வெற்றியை தர அழகிய தமிழ்மகன் படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அவனுக்கு அவனே எதிரி!
“அவனுக்கு அவனே எதிரி” என்பது தான் அழகிய தமிழ்மகனின் கதையாம். குரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு ESP என்று சொல்லக்கூடிய வித்தியாசமான மனவியல் சக்தி உண்டாம். அதனால் ஏற்படும் சிக்கல்களை ஆக்சனோடு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரதன்.

விடாக்கண்ட இயக்குனர் பரதன்!
தில், தூள், கில்லி படங்களுக்கு வசனமெழுதியவர் பரதன். இயக்குனர் தரணியின் பட்டற¨யில் பட்டை தீட்டப்பட்ட இவர் நடிகரும், இயக்குனருமான இரா. பார்த்திபனை நாயகனாக்கி கல்யாணசுந்தரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். பாதிவரை வளர்ந்த அத்திரைப்படம் அதற்கு பின் வளராமலே நின்று போனது. அதன் பின்னர் ராஜூ சுந்தரத்தை கதாநாயகனாகவும், சிம்ரனை கதாநாயகனாவும் ஒப்பந்தம் செய்து கொலம்பஸ் என்ற திரைப்படத்தை இயக்க முயற்சித்தார். அப்படமும் தொடக்கத்திலேயே நின்றது.
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனை போல மீண்டும் மீண்டும் முயற்சி செய்து சிறப்பான கதையை உருவாக்கி விஜயை கதாநாயகனாக்கி அழகிய தமிழ்மகனை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பரதன். இவர் இயக்கி வெளியாகப் போகும் முதல் திரைப்படம் இது. இப்படத்துக்கும் பல தடங்கல்கள், வழக்குகள் வந்தாலும் எல்லாவற்றையும் வெற்றிகரமாக முறியடித்து தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
இளையதளபதி விஜய்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இதற்கு முன்பாக உதயா என்ற விஜயின் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தாமதமாக வெளிவந்தது போன்ற சில காரணங்களால் அந்த திரைப்படம் வெற்றிவாய்ப்பை இழந்தது. இப்படத்தில் இசைப்புயலுடன் இணைந்து விஜய்யும் ஒரு ராப் பாடலை சொந்தக்குரலில் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் பாடலை கவிஞர் வாலி எழுதுகிறார்.

முதன்முதலாக...
ஸ்ரேயாவும், நமீதாவும் முதன்முறையாக விஜயுடன் இப்படத்த்தில் இணைந்து நடிக்கிறார்கள். விஜய் இப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்கிறார்கள். யினும் அவரது இரட்டை வேடம் குறித்து வாய்திறக்க படக்குழுவினர் மறுக்கிறார்கள். தாய்லாந்தில் சுனாமி தாக்கிய புக்கெட் தீவில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் படம் ஒன்று இங்கே படமாக்கப்படுவது இதுவே முதன்முறை. இந்திப்படமான கஹோ நா ப்யார் ஹை பாடல்காட்சிகள் இத்தீவில் படமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ரசிகர்களுக்கு மரியாதை
காதலுக்கு மரியாதை தந்தவர் விஜய். ரசிகர்களுக்கு மரியாதை தரமாட்டாரா? இத்திரைப் படத்தில் தனது ரசிகர்கள் இருவரை நடிக்க வைத்து ரசித்திருக்கிறார் விஜய். அமெரிக்காவில் டாடா கன்சல்டன்ஸியில் பணிபுரியும் அருண் என்பவரும், துபாயில் பணிபுரியும் மேக்நாத் என்பவருமே விஜய்யின் தீவிர ரசிகர்கள். பலவருடங்களாக விஜய்யின் ரசிகர்களாக இருந்த இருவருக்கும் இத்திரைப்படத்தில் தன்னுடனேயே நடிக்க வைக்க வாய்ப்பு தந்திருக்கிறார் விஜய்.

பொன்மகள் வந்தாள்
சமீபகாலமாக பழைய படங்களிலிருந்து பாடல்களை ரீமிக்ஸ் செய்து படமாக்குவது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதியாகியிருக்கிறது. பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்ய இசைப்புயல் ஏ.ர்.ரஹ்மான் விரும்புவதில்லை. எஸ்.ஜே. சூர்யாவின் வற்புறுத்தலால் நியூ படத்தில் எம்.ஜி.ர் பாடலான “தொட்டால் பூ மலரும்” பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்.

அதுபோலவே இப்படத்துக்கும் ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை எம்.ஜி.ர், ரஜினி, கமல் நடித்த படங்களிலிருந்து மட்டுமே பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்ட நிலையில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த பாடல் முதன்முறையாக இத்திரைப்படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற “பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்” அது. ஸ்ரேயா மற்றும் ரஷ்ய அழகிகளுடன் வித்தியாசமான முறையில் நடனம் டியிருக்கிறார் விஜய். ஸ்ரேயாவும் விஜய்யும் ஆடும் “மதுரைக்குப் போகாதே” பாடலில் பெரும்பாலான ஸ்டெப்கள் ஒரே டேக்கிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.

விஜய் vs விஜய்
ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டையில் படத்தின் அனல்பறக்கும் சண்டைக்காட்சிகள் படமாகியிருக்கிறது. படத்தில் சண்டைக்காட்சிகளை இயக்கியிருக்கும் பெப்ஸி விஜயன் இரண்டு விஜய்களும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி உத்தி பல வருடங்களுக்கு பேசப்படும் என்கிறார். எண்ணூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இரு விஜய்களும் மோதிக்கொள்ளும் சூடான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது

நமீதா
சினிமா ரசிகர்கள் மத்தியில் சமீபகாலமாக அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் நமீதா. அதிரடி கவர்ச்சி மற்றும் சிறந்த நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், நடிகர்களையும் கவர்ந்து வருகிறார் நமீதா.

இப்படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நமீதா நடித்திருக்கிறாராம். இவர் விஜய்யுடன் டிபாடும் பாடல் காட்சி ஒன்று தாய்லாந்தின் பட்டாயா தீவில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பிலேயே தன்னை மறந்து நமீதாவின் அட்டகாச ட்டத்தைப் பார்த்து மெய்மறந்து கைதட்டியிருக்கிறார் விஜய். சமீபத்தில் ஒரு வார இதழ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இதை குறிப்பிட்டார் விஜய்.

கலக்கல் லொக்கேஷன்
படத்துக்கு லொகேஷன்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறார் பரதன். ஸ்ரேயாவுடன் விஜய் பாடும் டூயட் ஒன்று கஜகஸ்தான் நாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் காரைக்குடி செட்டிநாடு அரண்மனைகளிலும், இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியிலும் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் ஒரு வீடு செட் போட்டு திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்தது. அந்த செட்டில் ஒருநாள் படப்பிடிப்பு மீதமிருந்த நிலையில் சண்டைக்காட்சிக்காக ஹைதராபாத்துக்கு படப்பிடிப்பு குழுவினர் சென்று விட்டார்கள். மீதம் இருந்த ஒருநாள் படப்பிடிப்புக்காக மீண்டும் திருநெல்வேலி செல்லாமல் ஹைதராபாத்திலேயே திருநெல்வேலி செட்டை அச்சுஅசலாக அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான ரயில்வே செட் போட்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

கட்டழகன் விஜய்
உடலை காட்டி நடிக்கும் துணிச்சல் பல நடிகர்களுக்கு இல்லை. ஒரு சில நடிகர்களே துணிச்சலுடன் நடிப்பார்கள். கமல் நிறைய படங்களில் நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினி படையப்பா படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் தன் கட்டுடலை காட்டியிருப்பார். அதுபோலவே முதன்முறையாக இப்படத்தில் விஜய் தன் கட்டுடலை காட்டுகிறார். இப்படத்தில் அவர் தடகள வீரராக தோன்றுவது குறிப்பிடத்தக்கது. விஜய் தன் பதினைந்து ண்டுகால சினிமா வாழ்க்கையில் இப்படத்துக்கு தான் அதிக நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார்.

தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் அப்பச்சன் மலையாளத்தில் நிறைய வெற்றிப்படங்களை தயாரித்தவர். இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான், விஜய் நடித்த ப்ரண்ட்ஸ் போன்ற படங்களையும் தயாரித்த வெற்றி தயாரிப்பாளர். ப்ரண்ட்ஸ் படம் முடிந்ததுமே விஜய்யை வைத்து அடுத்தபடம் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார். கிட்டத்தட்ட ஐந்து ண்டுகாலம் கழிந்த பின்னரே அவருக்கு இந்த வாய்ப்பு அமைந்தது.

விற்பனையில் சாதனை!
இதுவரை விஜய் நடித்திருக்கும் நாற்பத்தைந்து படங்களில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது அழகிய தமிழ்மகன் தான். பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை உலகெங்கும் தீபாவளி வெளியீடாக வெளியிடுகிறது.

அழகிய தமிழ்மகனுலு?
அழகிய தமிழ் மகன் படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பாக மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து கில்லி, போக்கிரி படங்களாக நடித்தார் விஜய்.

7 comments:

 1. Anonymous said...

  விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் அசத்தல் ரிப்போர்ட். அழகிய தமிழ்மகன் படம் பார்க்க இலவச டிக்கெட்டை பிரமிட் சாய்மீரா வலைப்பதிவர்களுக்கு வழங்குமா?

 2. said...

  //அழகிய தமிழ்மகன் படம் பார்க்க இலவச டிக்கெட்டை பிரமிட் சாய்மீரா வலைப்பதிவர்களுக்கு வழங்குமா?//

  சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உங்கள் கோரிக்கையை அனுப்புகிறேன்.

 3. said...

  ஸ்ரேயா, நமீதா படம் எதையாவது போட்டிருக்கக்கூடாதா?

 4. said...

  //நடிகர் திலகம் சிவாஜி நடித்த பாடல் முதன்முறையாக இத்திரைப்படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற “பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்” அது.//

  முதன்முறை என்பது தவறான தகவல், இதே பாடல் பெரும்புள்ளி படத்துக்காக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாட இடம்பெற்றிருக்கின்றது.

 5. said...

  //முதன்முறை என்பது தவறான தகவல், இதே பாடல் பெரும்புள்ளி படத்துக்காக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாட இடம்பெற்றிருக்கின்றது.//

  தகவல் உதவிக்கு நன்றி திரு. கானபிரபா

 6. said...

  idhu official site dhane?! but how come many of the info are not clarified and have been left to ponder like many sites like sify etc. distributors kke naraya matter theriyaama irukka? or is it purposely kept under wraps - or idhu non-official blog from someone working in saimira va - ore confusion

  All said, Great writeup - thanks!!

 7. said...

  waiting for the movie..