Friday, October 26, 2007

கெட்டவன் சிம்பு!

கெட்டவன் படம் ஆரம்பிக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கலக்கல் ஸ்டில்களை பார்த்து இண்டஸ்ட்ரியே அதிர்ந்தது. தனுஷின் பொல்லாதவனுக்கு சரியான போட்டி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்துக்கு நெகடிவ்வாக பெயர் வைத்து ஆரம்பித்ததாலோ என்னவோ தெரியவில்லை, தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் கெட்டவன்.

படத்தின் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் கவுன்சில் விளக்கம் கேட்டது. கதையை விளக்கி அத்தலைப்பை மாற்ற இயலாது என்று வாதாடினார் சிம்பு.

படத்தின் தயாரிப்பாளரே மாற்றப்பட்டார்.

படத்தின் கதாநாயகியும் மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.

இப்போது படத்தின் இயக்குநரும் மாற்றப்படுகிறார். சிம்புவே இயக்குவார் என்று தகவல். கதையும் மாறுகிறதாம்.

சிம்பு தற்போது நடித்துவரும் தருண்கோபி இயக்கும் காளை படத்தை முடித்ததும், பிரபல ஒளிப்பதிவாளர் சரவணின் இயக்கத்தின் சிலம்பாட்டம் என்ற படத்தில் நடிக்கிறார். சிலம்பாட்டம் முடிந்ததுமே மீண்டும் கெட்டவனாக மாறுவார் என்று தெரிகிறது.

இன்னமும் மாறாதது சிம்புவும், கெட்டவன் என்ற டைட்டிலும் மட்டுமே.










2 comments:

  1. Yogi said...

    இந்த லட்சணத்துல ஜோடி நம்பர் 1ல ப்ரித்விகிட்ட வம்பிழுத்து டயம் பாஸ் வேற. உருப்புடுற வழியப் பாருங்க சிம்பு!

  2. Anonymous said...

    கெட்டவன் படம் ஆரம்பிக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கலக்கல் ஸ்டில்களை பார்த்து இண்டஸ்ட்ரியே அதிர்ந்தது.

    Simbhu Rocks