Wednesday, June 4, 2008

ரோபோ வில்லன் யார்?


சூப்பர்ஸ்டார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ரோபோ திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் சக்கரவர்த்தி நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே பல வாசகர்கள் ”யார் அந்த சக்கரவர்த்தி?” என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பி வருகிறார்கள். சக்கரவர்த்தி தெலுங்குப் படங்களில் நடிக்கும் ஒரு யதார்த்த நடிகர்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய சில படங்களை நீங்கள் பார்த்திருந்தால் சக்கரவர்த்தியை அடையாளம் கண்டுகொள்ளலாம். இவர் நடித்த சில படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. ராம்கோபால் வர்மா இயக்கிய ஷிவா (தமிழில் உதயம்) திரைப்படத்தில் அறிமுகமானவர் சக்கரவர்த்தி.

இயக்குனர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திலும் சக்கரவர்த்தி நடித்திருக்கிறார். ஈழப்போராளி திலீபனை சித்தரித்து அமைக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் அது. ஹிந்தியில் துர்கா என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுமிருக்கிறார். நாற்பத்தி நான்கு வயதாகும் ஜே.டி.சக்கரவர்த்தி திறமையான திரைப்பட கலைஞர், உலகத் திரைப்படங்களின் ரசிகர். ரோபோ திரைப்படம் அவருக்கு தமிழில் திருப்புமுனையாக அமைய வாழ்த்துவோம்.

1 comments:

  1. said...

    மட்டுமல்ல, ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தெலுங்கில் மிகப் பிரபலமான கதாநாயகனாக, பல பலடங்களில் நடித்திருக்கிறார்.மிகச் சிறந்த நடிகர். ஹைதராபாத் சென்ற போதெல்லாம், மனி, குலாபி, அனகனகா ஒக ரோஜு, என்று அவரது படங்களைத் தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன்

    கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு முன்பாகவே, தமிழில் நடித்திருக்கிறார். அர்ஜுன் இயக்கி நடித்த பிரதாப் என்கிற படத்தில், சைடு வில்லனாக ( மெய்ன் வில்லனுக்குத் தம்பியாக )வருவார்.

    //ஈழப்போராளி திலீபனை சித்தரித்து அமைக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் அது//

    தவறு. அந்தப் பாத்திரத்தின் பெயர் திலீபன் என்பதைத் தவிர நிஜத்துக்கும் நிழலுக்கும் எந்தத் தொடர்புமில்லை.